என்ன நடக்கிறது ஜம்மு-காஷ்மீரில்?

என்ன நடக்கிறது ஜம்மு-காஷ்மீரில்?

7 Aug 2019 | 1 min Read

Komal

Author | 138 Articles

இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் காஷ்மீர். இந்திய விடுதலைக்குப் (1947) பின்னரே இந்தியாவுடன் இணைந்தது. அப்பொழுது இருந்த மன்னராட்சி சில கோரிக்கைகளுடனே இந்தியாவுடன் இணைய சம்மதித்தது அதுவே Article 370 மற்றும் 35A, அதன்படி தனி மாநில அந்தஸ்தும் பல சிறப்பு சலுகைகளையும் காஷ்மீர் அனுபவித்து வந்தது. குறிப்பாக அம்மாநில மக்கள் வெளி மாநிலத்தவரை மணந்தால் குடியுரிமை ரத்து செய்யப்படும் சட்டம் அமலில் இருந்தது. மேலும் அங்கு நிலம், வீடு, சொத்துரிமை அம்மாநில குடியுரிமை பெற்றவரால் மட்டுமே முடியும். வெளிமாநில குடியுரிமை உள்ளவர்கள் எவ்வித சலுகைகளும் பெற இயலாது,

சுமார் 70 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது மற்றும் 35ஏ பிரிவை ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும்; காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் என்று சொல்லும்போது, அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், அக்சாய் சின்னையும் (சீனா ஆக்கிரமித்த பகுதி) ஒருங்கிணைத்தே குறிக்கும்.

 

அக்சாய் சின் இணைந்த லடாக் பகுதி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாறுகிறது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் இந்த கோரிக்கை இப்பொழுது நிறைவேறுகிறது.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல.    இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

பேனர் படம்: livelaw

A

gallery
send-btn