சுஷ்மா ஸ்வராஜ்: வெளிநாடு வாழ் மக்களின் பிரதிநிதி

வடமாநிலத்தை சேர்ந்த இவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர், முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி, பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், டெல்லியின் முன்னாள் முதல் பெண் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

 

அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர். இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார், இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.

 

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை உடனுக்குடன் செய்து வந்தார். சமூக வலைதளங்களில் (Twitter) மிகவும் பிரபலமானவர், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால் பலரும் அவரை பாராட்டி வந்தனர். சமீபத்திய தேர்தலில், உடல்நலக்குறைவால் இவர் போட்டியிடவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.

 

சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

பேனர் படம்: indiatoday

Baby, Toddler, Pregnancy

Read More
தமிழ்

Leave a Comment

Recommended Articles