தமிழ் படங்களில் இனி காஷ்மீரை காணலாம் - எப்படி சாத்தியம்?

 

பிரதமர் மோடி, நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அதில் முக்கிய அறிவிப்பாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வருமாறு தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படத்துறையினருக்கும், பட அதிபர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.  

 

இனி எந்த தடையும் இன்றி காஷ்மீருக்கு வந்து படப்பிடிப்பை மேற்கொள்ளுங்கள். இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். சுற்றுலாத்துறை பெருவளர்ச்சி அடையும். பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் பட தேவை இல்லை. 

 

ஜம்மு-காஷ்மீர், லடாக் பிரதேசங்கள் பலவகையான மூலிகை பொருட்களுக்கு பெயர்போனது. இவற்றை அடையாளம் கண்டு பெருமளவில் பிரபலப்படுத்தினால் உலக சந்தையில் இப்பொருட்கள் இந்தியாவுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும்.

 

இளைஞர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். விளையாட்டு அரங்கம், பயிற்சி மையங்கள் ஆகியவை உருவாக்கப்படும். தொழில் முனைவோர் இப்பகுதி இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கை மற்றும் வளம் காணும் வகையில் புதிய தொழில்களை இனி தொடங்கலாம். 

 

ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதியின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் உள்ள அனைவரின் அன்பும், ஆதரவும் அளிக்குமாறு கூறினார். இனி நாமும் கோடையில் விடுமுறையில் ஊட்டி கோடைக்கானலுடன் காஷ்மீரையும் சேர்த்து கொள்ளவோமா! ரோஜா படத்தை போல இனி அருமையான ஐஸ் மலை, ஐஸ்கட்டி மழையையும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்கலாம்.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல.    இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 


Baby, Toddler, Pregnancy

Read More
தமிழ்

Leave a Comment

Recommended Articles