மியாவ்!! மியாவ்!! பூனைக்கும் காலம் வந்தாச்சு!!

பூனைகள் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படும் சாதுவான பிராணி. குழந்தைகளும் பயம் கலந்த அன்புடன் அதனுடன் விளையாடுவார்கள். பூனை என்றதும் நம் நினைவில் வரும் பிரபல பழமொழி “யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்” இந்த பழமொழியை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம்.   

 

ஆகஸ்டு 8-ந் தேதி உலக பூனைகள் தினம். பண்டைய எகிப்தியர்கள் பூனை தலை மற்றும் பெண்ணின் உடலமைப்பு கொண்ட கடவுள் உருவத்தை வணங்கியுள்ளார்கள். வீட்டில் பூனை இறந்தால், ஆண்கள் தங்கள் புருவத்தை மழித்து, துக்கம் அனுசரித்தனர்.

 

பூனைக்குட்டிகள் தூங்கும்போதுதான், வளர்ச்சிக்கான இயக்குநீர் (ஹார்மோன்) சுரக்கும். ஆகையால், ஒரு நாளில் சுமார் 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்கும். அது தன் வாழ்நாளில் சுமார் 70 சதவீத நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும்.

 

கூர்மையான கண்பார்வைத் திறனும், காது கேட்கும் திறனுடையது. எலி நடக்கும் சத்தத்தைக்கூட கேட்கும் ஆற்றல் அதற்கு உண்டு. அதிக அளவு வெப்பத்தை தாங்கக்கூடியவை. பூனைகள் 100 விதமான சத்தங்களை எழுப்பும். ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அதை பிற பூனைகள் புரிந்துகொள்ளும். 

 

பூனைகள் சராசரியாக 7 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. விதிவிலக்காக 38 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த எமகாதகப் பூனையும் உண்டு. மேலைநாடுகளில் பூனையின் உரோமத்திலிருந்து பெண்களுக்கான மேலாடைகள் செய்யப்படுகின்றன. ஒரு மேலாடை செய்ய 24 பூனைகளின் தோல் தேவைப்படும். மேலும், தொப்பிகள், போர்வைகள், கையுறைகள், பொம்மைகள் போன்றவையும் பூனைத்தோலால் செய்யப்படுகின்றன.

 

இந்தியாவில் பூனை குறுக்கே போனால், சிலர் அபசகுனமாக கருதுவதுண்டு. இதே போன்ற நம்பிக்கை அமெரிக்காவிலும் உண்டு. ஆனால் அவர்கள், கருப்பு பூனை குறுக்கே போனால் மட்டுமே அதை அபசகுனமாக கருதுகிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கருப்பு பூனை குறுக்கே போனால், அது நல்ல சகுனம்.

 

மிகக்குறுகலான பாதையிலும், மிகுந்த எச்சரிக்கையுடன், லாவகமாக, விழாமல் நடக்கும் ஆற்றல் கொண்டது. இதனால்தான், இவ்வாறு நடப்பவர்களை ‘பூனை நடை’ நடக்கிறார் என்கிறோம்.


டோவ்சர் என்ற பெண் பூனை கின்னஸ் சுமார் 24 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த இது, ஸ்காட்லாந்தில் ஒரு மது உற்பத்தி நிறுவனத்தில் வளர்க்கப்பட்ட டோவ்சர் என்ற பெண் பூனை, தன் வாழ்நாளில் 28,899 எலிகளை கொன்றதே, இதுவரை உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்துள்ளது.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 


Baby, Toddler

Read More
தமிழ்

Leave a Comment

Comments (1)En thangai avaloda poona kutti ya canada kootitu pora.

Recommended Articles