கர்ப்பகால உடலுறவு பாதுகாப்பானதா?

cover-image
கர்ப்பகால உடலுறவு பாதுகாப்பானதா?

பல்வேறு கலாச்சாரங்களில் கர்ப்பகாலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது என்பது வலுவான மற்றும் முரண்பாடான நம்பிக்கையை தூண்டுகிறது. கலாச்சார மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளைத் தவிர, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது பெரும்பாலான பெண்களின் மனதில் கடைசியாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே குமட்டல், வாந்தி, சோர்வு, காலை நேர நலமின்மை மற்றும் பலவற்றைக் கையாளுகின்றனர்.

 

நான் கர்ப்ப காலத்தில் உடலுறவு  கொள்ளாமா?  

 • முதல் ட்ரைமெஸ்டர் (1 முதல் 12 வாரம் வரை):  

பெரும்பாலான கர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் (1 முதல்  12 வாரம்) கொள்ளும் உடலுறவு மருத்துவரீதயாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும், உங்களுக்கு கர்ப்ப காலத்தில் சிக்கல்களின் கடந்தகால வரலாற்றைக் கொண்டிருந்தால், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் வரை நீங்கள் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த உங்கள் மாதவிடாய் நின்றவுடன் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசிக்கவும். சரியான கேஸ் ஹிஸ்டரியை தயாரித்து உடலுறவை நீங்கள் தவிர்க்க வேண்டுமா என உங்கள் மருத்துவர் ஆலோசனை கூறுவார். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹ்யூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின் (HCG) அளவுகளில் விரைவான அதிகரிப்பு ஏற்படுகிறது. ஹ்யூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) குமட்டல் மற்றும் சோர்வுக்கான காரணியாகும். ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, சில பெண்களுக்கு உடலுறவு என்பது அவர்கள் விரும்பும் கடைசி விஷயம், மற்றவர்களோ அதற்காக ஏங்கலாம்.

 

கர்ப்ப காலத்தின் எந்த நிலைகளில் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது? 

பெரும்பாலான குறைந்த ஆபத்து கொண்ட கர்ப்பங்களில், கர்ப்பகாலத்தின் போது உடலுறவு அனுமதிக்கப்படுவதோடு, அதனால் எந்த அபாயமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பின்வரும் சிக்கல்களில் ஏதேனும் இருந்தால், உடலுறவைத் தவிர்க்க உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம்: 

 • முன்பு கருக்கலைப்பு/கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்  
 • கர்ப்பத்தில் இரத்தப்போக்கு இருந்தால் 

ஊடுருவும் உடலுறவால் கர்ப்பம் கலையும் ஆபத்து அல்லது சாதாரண கர்ப்பத்தில் முன்னமே பிரசவிக்கும் ஆபத்தினை அதிகரிக்கும்.  

 

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

 • நிலைகள்: நீங்கள் இருவரும் வசதியாக இருக்கும் நிலைகளை தேர்ந்தெடுக்கவும். பெண்கள் மேலிருக்கும் நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க அது உதவுவதால் பெண்களுக்கு அதிக வசதியான நிலையாக இருக்கும். 
 • பெண்  பிறப்புறுப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் எந்த ஒரு வெளிப்பொருட்களை யோனிக்குள் தினிப்பதை தவிர்க்கவும். 
 •  பிறப்புறுப்புக்குள் (யோனி) காற்று ஊதுவதை தவிர்க்கவும். 

 

 • இரண்டாம்  ட்ரைமெஸ்டர் (13 முதல் 24 வாரம் வரை): 

இரண்டாவது ட்ரைமெஸ்டர் என்பது உடல் அமைப்பு மற்றும் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் சாதாரணமுறையில் கர்ப்பம் தரித்திருந்தால், இரண்டாவது டிரைமிஸ்டெரில் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டாம் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

 

பாதுகாப்பான உடலுறவு கொள்வது எப்படி? 

இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவு எந்த வகையிலும் கருவை பாதிக்காது மற்றும் முற்றிலும் பாதுகாப்பானது. எனினும், பின்வரும் சில சூழ்நிலைகளில் மருத்துவ ஆலோசனைகள் பெரும் வரை உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும்: 

 • கருச்சிதைவின் வரலாறு இருந்தால்
 • இரட்டை கருத்தரிப்புகள் (twins) இருந்தால்
 • உடலுறவு போது வலியிருந்தால் 

 

உடலுறவு போது நீங்கள் வலியை அனுபவித்து இருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசுங்கள். உங்களுக்கு அதிகப்படியான/அழுகிய நாற்றம் உடைய வெள்ளைப்படுதல் இருந்தால், உங்கள் துணைவருக்கு எஸ்.டி.டி.க்கள் தொற்றுவது மற்றும் பரவுவதை தடுக்க பொருத்தமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

 

இரண்டாவது ட்ரைமெஸ்டரில் உடலுறவு - தேனிலவு காலம். 

 • இரண்டாவது டிரைமிஸ்டெர் தேனிலவு காலம் அல்லது பேபிமூன் காலம் என அறியப்படுகிறது. இந்த நிலையில் குமட்டல், சோர்வு மற்றும் வாந்தி போன்ற பெரும்பாலான அறிகுறிகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கிவிடுகின்றன. கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமிஸ்டெர் உங்கள் சுறுசுறுப்பு மற்றும் வீரியத்தை மீண்டும் கொண்டுவரும். கர்ப்ப காலத்தில் முதல் டிரைமிஸ்டெரில் பாலியல் விருப்பத்தை பெறாத பெண்கள் இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவை அனுபவிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவற்றில் சில உங்கள் பாலியல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். 
 •  பெண்களின் மார்பகங்கள்  இரண்டாவது டிரைமிஸ்டெரில் பெரிதாகின்றன, பெரும்பாலான பெண்கள் அவற்றை உவகையுடன் அனுபவிப்பார்கள். மற்ற சில பெண்கள் இந்த காலத்தில் மார்பகங்களை சங்கடமாக  உணரலாம். அதிகமான திருப்தி மற்றும் மகிழ்ச்சிக்காக உங்களுக்கும் உங்களுடைய துணைவருக்கும் இடையேயான தொடர்பை திறந்த முறையில் வைத்துக் கொள்ளுங்கள். 
 • இரண்டாவது டிரைமிஸ்டெரில் பிறப்புறுப்பு மண்டலத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது பெண்களின் பாலியல் ஆசை அதிகரிக்கலாம். 
 • இந்த காலத்தில் பெண்குறி மிகுந்த உணர்திறன் வாய்ந்ததாக இருக்கிறது மற்றும் அதிகரித்த உணர்திறன் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. 
 • இரண்டாவது டிரைமிஸ்டெரில் உங்கள் வயிறு வளர்ந்து வருகிறது, ஆனால் அது தடங்கல் ஏற்படுத்தும் அளவுக்கு போதுமான அளவும் பெரிதாக இல்லை. 
 • இடுப்புகளின் வடிவம் மாறுகிறது மற்றும் அவை உடலுறவின் போது மேலும் வட்டமாகி அதிகமான இணக்கம் மற்றும் நெருக்கத்தைக் கொண்டு வருகின்றன. இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவை நன்கு அனுபவிக்கவும்!

 

 • மூன்றாம் (இறுதி) ட்ரைமெஸ்டர் (25 முதல் 41 வாரம் வரை): 

உங்கள் கர்ப்பம் ஒரு சாதாரண மற்றும் சிக்கலற்ற ஒன்று என்றால், நீங்கள் பிரசவம் வரை கூட உடலுறவு கொள்ளலாம். குழந்தையைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் மற்றும் உங்கள் உடலுக்கு வசதியாக இருந்தால், அது முற்றிலும் உங்கள் குழந்தையை பாதிக்காது. கடைசி டிரைமிஸ்டெரில் உடலுறவு கூட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் ஹார்மோன்கள் எல்லா இடத்திலும் இருப்பது காரணமாக, உங்கள் பாலியல் உணர்வு கர்ப்பத்தின் கடைசி டிரைமிஸ்டெரில்  உற்சாகமடையலாம்.சரியான நிலையை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  

உடலுறவுக்கு பாதுகாப்பற்ற தருணங்கள்: 

 • உங்களுக்கு நஞ்சுக்கொடி ப்ரீவியா இருந்தால். உங்கள் நஞ்சுக்கொடியானது கருப்பை முழுவதையும் அல்லது கருப்பையின் ஒரு பகுதியை உள்ளடக்கும் ஒரு நிலை ஆகும். இந்த சூழ்நிலையில், ஆண்குறி கருப்பை வாயுடன் தொடர்பு கொண்டால் கன்னித்திரைவிரியும் போது,  அது கர்ப்பத்திற்கு மிகவும் ஆபத்தைக் கொடுக்கும் மற்றும் உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தும். 
 • பனிக்குடம் உடைந்துவிட்டால், குழந்தை எந்த தொற்றுக்கு எதிராகவும் பாதுகாக்கப்படாது. 
 • முன்கூட்டிய பிரசவம் (குறைப்பிரசவம்) கொண்டால் அல்லது கொண்டிருந்தால். 
 • கர்ப்பப்பை வாய் அளவு பற்றாக்குறை இருந்தால். 
 • நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை (twins) எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்கள் மருத்துவர் உங்களை உடலுறவு கொள்ள வேண்டாம் என ஆலோசனை கூறுவார்.

 

கடைசி ட்ரைமெஸ்டரில் உடலுறவின் நன்மைகள்: 

 • இது ஒரு ஜோடியின் இடையே இணைப்பை அதிகரிக்கிறது மற்றும் அவர்கள் யாரும் கைவிடப்பட்டதாக உணரவில்லை. 
 • ப்ரெஸ்டாக்லான்டின் எனப்படும் சீமெனில் ஒரு ஹார்மோன் உள்ளது, இது கருப்பை வாயை மென்மைப்படுத்துகிறது மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. உடலுறவின் போது, பெண்கள்  ஆக்ஸிடாஸின் என்று ஒரு மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிடுவார்கள். இது சுருக்கங்கள் கொண்டு வர உதவுகிறது 
 • உச்சக்கட்டங்கள் இடுப்பு வலிமையை வலுப்படுத்த உதவுகின்றன. 

மூன்றாவது டிரைமிஸ்டெரில் உடலுறவுக்கான சிறந்த நிலைகள்: 

 • உங்கள் கர்ப்பம் முன்னேற்றமடையும் போது, உங்கள் உடல் கடுமையானதாகி, சில நிலைகளில் அது வசதிக்குறைவாகிறது. உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் வசதியாக இருக்கும் நிலைகளின் பட்டியல் இங்கே உள்ளது. 
 • இந்த நேரத்தில் ஸ்பூன் நிலை சிறந்தது மற்றும் மிகவும் விருப்பமான ஒன்றாகும். இது வசதியானதும் கூட. 
 • மற்றொரு நிலை பெண் மேலே இருப்பது, அது அசைவுகள், அழுத்தம் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் துணைவர் உங்களுக்கு வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்பதால் உங்களை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும். 
 • படுக்கை விளிம்பு நிலை கூட உங்கள் வளரும் வயிறு மற்றும் உடலில் அதிக அழுத்தம் கொடுக்காத ஒரு சிறந்த வழி. 

தவிர்க்க வேண்டிய உடலுறவு நிலைகள்: 

 • உங்களுக்கு அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நிலையும் இல்லை. ஆனால், உங்கள் வயிற்றின் மீது  அழுத்தம் கொடுக்கும் எந்த நிலையையும் தவிர்க்கவும். மேலும், மிகவும் ஆழமான ஊடுருவலைத் தவிர்க்கவும் இது அசௌகரியம் ஏற்படத்தலாம் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படத்தலாம். 

 

நீங்கள் எந்த டிரைமிஸ்டெரில் இருந்தாலும் பரவாயில்லை, பாலியல் என்பது கர்ப்பத்தின் ஆரோக்கியமான ஒரு பகுதியாகும் என்று நம்புங்கள். உங்கள் மருத்துவர் பச்சை நிற சமிக்ஞையை உங்களுக்குக் கொடுக்கிற வரை, நீங்கள் உங்களுக்கு நல்லதாக உணர்கிறதை செய்யுங்கள் மற்றும் உங்களுக்கும் உங்களுடைய துணைவருக்கும் சிறந்த நிலை எதுவாக இருந்தாலும் செய்யுங்கள். கர்ப்பம் நிச்சயமாக உங்கள் படுக்கையறை நெருக்கத்தின் முடிவு என்று அர்த்தம் இல்லை. 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!