கர்ப்பிணிகளுக்கு நார்ச்சத்து எவ்வளவு அவசியம்?

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள  உணவுகள் அவசியம் அதுவும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மகப்பேறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது கர்ப்பகாலத்திற்கு மட்டுமல்லாது பிரசவ சமயத்திலும், குழந்தைப் பிறந்த பின்னும் தாய்மார்களுக்கு தேவையானது  எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

 

மலச்சிக்கல் பிரச்சினை

கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல்.  அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர் நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். 
நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்கள்:

  • பாதாம் பருப்பு 
  • பீன்ஸ், வாழைத்தண்டு  
  • கீரைகள், அவரைக்காய்
  • கேரட், பூசணிக்காய் 
  • பேரிக்காய், அத்திப்பழம், கறுப்பு திராட்சை, 
  • பயறுவகைகள், காலிபிளவர்
  • ஓட்ஸ், வாழைப்பழம், ஆரஞ்சு

 

நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் உதவியை செய்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்பு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்து முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து, ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம்.

 

வழக்கமான உணவுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும். கோதுமை ரொட்டி, பிஸ்கட், பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானியங்கள், பழங்களை சாப்பிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.

 

நார்ச்சத்து என்பது அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடக் கூடாது. அதை அப்படியே கடித்து சாப்பிட வேண்டும். சூப் செய்வதென்றால், அதிக காய்கறிகளை சேர்க்க வேண்டும். நொறுக்கு தீனியாக உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம்.

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

 

#babychakratamil

#babychakratamil

#babychakratamil

Pregnancy

Read More
தமிழ்

Leave a Comment

Recommended Articles