மாதவிடாய் சுழற்சி : பெண்களுக்கு பெரும் சவால்!

cover-image
மாதவிடாய் சுழற்சி : பெண்களுக்கு பெரும் சவால்!

பெண்களுக்கு வரமாகவும், அவஸ்தையாகவும் ஆண்டவனால் அளிக்கப்பட்ட ஒன்றே மாதவிடாய் - வாரத்தின் 3/5/7 நாட்கள் இரத்தப் போக்கு. முதிர்ச்சியான கருமுட்டையின் வெடித்தலே மாதவிடாய் ஆகும். சில பெண்களுக்கு 28 முதல்  32 நாட்கள் இடைவெளியிலான சுழற்சியைக் கொண்டிருக்கும். தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சனை உடைய பெண்களுக்கு மாத சுழற்சி தாமதமாகவோ அல்லது சீக்கிரமாகவோ ஏற்படும்.  

 

ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வரவைக்க விரும்புவார்கள். அதற்கு காரணம் பூஜை (அ) பண்டிகைள், திருமணங்கள், வெளியூர் பயணம் போன்ற விசேஷங்கள் தான் காரணம்.

 

பூஜை என்று வரும் போது மாதவிடாய் பெண்கள் அதற்கு தடை செய்யப்பட்டவர்கள் என கருதுகிறார்கள். உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் உணவை உட்கொண்டால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க காரணமாக இருக்கும். உ டலின் உஷ்ணத்தை சமப்படுத்தும் (அ) சாந்தப்படுத்தும் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாயை தாமதப்படுத்தலாம்.  

 

பின்வரும் இயற்கை உணவு முறை மூலமாக தாமதப்படுத்தவோ/ சீக்கிரமாக்கவோ முடியும்..

 

விரைவில் மாதவிடாய் வரவழைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

 

  • பப்பாளி: இது உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவழைக்க மிகவும் பயனுள்ள எளிய முறையாகும். அது மட்டுமின்றி பப்பாளியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.
  • ஓம விதைகள்: ஓம விதைகளை தண்ணீரில்  ஊறவைத்து மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் குடிப்பது உங்கள் மாதவிடாயை சில நாட்கள் முன்னால் வரவழைக்க உதவும்.
  • எள்: எள் விதையை வெல்லத்துடன் சேர்த்து, மாதவிடாய் தேதிக்கு 15 நாட்களுக்கு முன் சாப்பிட்டால் விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
  • அன்னாசி: இது உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக் கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். அது விரைவில் மாதவிடாய் வரவழைக்க உதவும்.
மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்:

 

  • வெந்தயம்: மாதாந்திர தேதி வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, தேதி  தள்ளிப் போகும்.
  • வெள்ளரி: மாதாந்திர தேதி வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, தேதி தள்ளிப் போகும்.
  • பொட்டுக்கடலை: பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிப் போடலம்.

 

#babychakratamil

#babychakratamil

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!