குழந்தையை பிளே ஸ்கூல் (pre/play school) அனுப்பலாமா?

cover-image
குழந்தையை பிளே ஸ்கூல் (pre/play school) அனுப்பலாமா?

நவீன நாகரீக உலகில் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறை கூட நிறைய மாறுபட்டுக் கொண்டு வருகிறது. 5 வயது வரை அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு மடியில் தூங்கிய காலம் மறைந்தே போய்விட்டது. பால் புட்டியுடன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் காலம் ஆகி விட்டது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் காலை முதல் மாலை வரை குழந்தைகள் காப்பகம், பின்னர் Pre School என்று விட்டுச் செல்கின்றனர். இதில் பல குறைபாடுகள், பாதிப்புகள் இருப்பதாக பல அக்கறை நிறைந்த முதியோர்கள் அறிவுறுத்தினாலும் காலத்தின் வேகம் அதனோடு நம்மை ஓடச் செய்கின்றது.

 

 • கூட்டுக் குடும்பம்:  கூட்டுக் குடும்பமாய், பெற்றோர்கள் உடன் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் அதிலும் இன்று அநேக சிக்கல்கள் உள்ளன. ஆகவே இந்த முறை பலருக்கு பயன்படுவதில்லை. 
 • உதவியாளர்கள் பணியமர்த்தல்: உதவியாளர்கள் என்ற பெயரில் வேலைக்கு வரும் நபர்களால் பிரச்சினைகள், குழந்தைகள் பாதுகாப்பு இவைகளை சமாளிப்பது மன உளைச்சலையே கொடுத்து விடுகின்றது.

 

எனவே Pre/play School என்பது சில மணி நேரங்கள் என்றாலும் தாய்மார்களுக்கு மற்ற வேலைகளை கவனிக்க சிறிது அவகாசம் தருகின்றது. இருப்பினும் 21/2 வயதில் Pre School , Play School என்ற பெயரில் சில மணி நேரங்கள் சிறு குழந்தையினை அனுப்புவதைப் பற்றி பெரிய ஆய்வுகள் நடந்தன. அந்த ஆய்வுகள் கூறுபவை:

 

 • தரமான இந்த விளையாட்டு பள்ளிகளுக்கு 2 மணி நேரம் செல்லும் குழந்தைகள் சுய ஒழுக்கம், பல திறமைகள் இவற்றினை எளிதாக கற்றுக்கொள்கின்றதாம்.
 • பேசும் திறன், புத்தகம் படிக்கும் திறன், மோட்டார் திறன் கூடுகிறது.
 • உடல் சார்ந்த விளையாட்டு, அறிவு திறன் சார்ந்த விளையாட்டை கற்கிறார்கள்.
 • மொழிவளம், மற்ற பிள்ளைகளுடன் ஒற்றுமையாக இணைந்து விளையாடும் பண்பை பெறுகிறார்கள்.
 • வீட்டில் செல்லத்தின் காரணமாக உணவுண்ண அடம்பிடிக்கும் குழந்தையும் பள்ளியில் முறையாக உணவுண்ண பழகுகிறார்கள்.   
 • முறையாக பள்ளி செல்லும் பொழுது இக்குழந்தைகள் எளிதாக அச்சூழ்நிலைக்கு ஒத்து வருகின்றார்களாம்.
 • குடும்பத்தினரை சார்ந்திருக்கும் பழக்கத்தை குறைத்து, மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க முயற்சிக்கிறார்கள். 
 • குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன என்றே கூறுகின்றன. ஆனால் 2 முதல் 3 மணி நேர அளவில் இருந்தாலே போதும்.  இல்லையெனில் குழந்தைகள் சோர்ந்துவிடும்.
 • பள்ளி தரமானதாக இருக்க வேண்டும்  என்பது மிக முக்கியம்.

 

கூட்டுக் குடும்பத்தில், குழந்தைகள் நல்ல பாதுகாப்போடு, புத்திசாலியாய், பண்புகளோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு தாயோ, தந்தையோ அதிக கவனத்தினை தர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோரும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். பிள்ளைகளும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். இது அவர்களுக்கு இடையே இடைவெளியை  ஏற்படுத்துகிறது. இத்தகைய பள்ளிகளுக்கு செல்வது பிள்ளைகளுக்கு ஒரு வகையான மாற்றத்தையும், மன மகிழ்ச்சியையும் தருகிறது. 

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட  வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!