குழந்தைகள் படிப்பதற்கான மேஜை/நாற்காலிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

cover-image
குழந்தைகள் படிப்பதற்கான மேஜை/நாற்காலிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் படிப்பதற்கான அறை பிரத்யேகமாக ஒதுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல மேஜை/நாற்காலியும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பர்னிச்சராகவும் உருவாகிவிட்டது என்றே சொல்லலாம்.

 

படிக்கும் அறையில், படிப்பு மேஜை மற்றும் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் பொழுது எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும், கவனச்சிதறல் இல்லாமலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. இது போன்ற படிப்பு மேஜை/நாற்காலிகள் வீட்டில் இருந்தால் அது மாணவர்களுக்கு உதவியாக  இருப்பது போலவே பெரியவர்களுக்கும் அவர்களது அலுவலக வேலைகளைச் செய்வதற்குப் பெரிதும் உதவியாக உள்ளது.

 

ஒரு சிறந்த படிப்பு  மேஜை/நாற்காலிகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? 

 

  • படிப்பதற்காகவும் , ஓவியங்கள் வரைவதற்காகவும் நாம் மேஜை/நாற்காலிகளை வாங்குவதாக இருந்தால் அதற்கு எந்த அளவில் வாங்கினால் அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் அளவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. காலேஜ் செல்லும் மாணவர்களுக்கு என்றால் அதற்கேற்றாற் போலவும், கின்டர் கார்டன் குழந்தைகள் என்றால் அதற்கேற்றாற் போலவும், பிரைமரி பிள்ளைகள் என்றால் அதற்கேற்ப வாங்குவது சிறந்தது. அதேபோல், அறையின் அளவிற்கேற்ப வாங்கப் போகும் மேஜையின் உயரம், அகலம் மற்றும் நீளத்தைக் தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுடைய அறையானது சிறியதாக இருக்கும் பட்சத்தில் லினியர் டேபிளைத தேர்ந்தெடுத்தால் அவை சிறிய அறையில் கச்சிதமாகவும், அடக்கமாகவும் அதே சமயம் அழகான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும். பெரிய அறைகளில் ஹிஷேப் அல்லது ஷேப்மேசைகள் அருமையாகப் பொருந்தும்.

 

  • மார்டன் மேஜை/நாற்காலிகளை இன்றைய நகர்ப்புற உள் அலங்காரங்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நம் அறையின் உள் அலங்காரத்திற்கு (இன்டீரியர் டிசைன்) பொருந்தும் சரியான டிசைனைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது. சில மேசைகள் நகர்ப்புறத் தோற்றத்தைத் தருவதற்காக கூரை போன்ற அமைப்பு மற்றும் கார்க் போர்டுகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது நம் அறை மற்றும் விருப்பத்திற்கேற்ப மேசைகளை இணையதளங்களின் மூலமே தேர்ந்தெடுத்து வாங்க முடியும்.

 

  • ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைச் சரிபார்த்து வாங்குவது மிக மிக முக்கியமான ஒன்றாகும். படிக்கும் பொருள்களான புத்தகங்கள், பென்சில், பென், ரப்பர், சார்ட் பேப்பர்கள், ஸ்கெட்ச் பென்கள், லேப்டாப் என அனைத்தையும் அதற்கேற்ற ஸ்டோரேஜ் பெட்டியில் வைத்து விட்டால் நமக்குத் தேவையான நேரத்தில் ஒவ்வொன்றையும் தேடித் தேடி நேரத்தை வீண் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 

 

நாம் தேர்ந்தெடுக்கும் மேசையானது பனிச்சூழலியலுக்கு ஏற்றதா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்து பின்னர் வாங்குவது சிறந்தது. வீட்டில் குழந்தையும் அதே சமயம் பெரியவர்களும் மேஜை/நாற்காலிகளை  உபயோகப்படுத்துபவர்களாக இருந்தால் அவை யாருக்கு அதிக அளவில் பயன்படும் என்பதைக் கருத்தில் கொண்டு எல்லா விதத்திலும் பயன்படக்கூடிய மேசையை வாங்க வேண்டும். சில மேசைகளில் உயரங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஆப்ஷன் இருப்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவை வீட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும். கின்டர் கார்டனிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்த மேஜை மற்றும் நாற்காலிகள் வந்துள்ளன. 

 

தரமான பொருளால் செய்யப்பட்ட மேசையை வாங்குவது சாலச்சிறந்ததாகும். விலை சிறிது அதிகமாக இருந்தாலும், அவை தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற ஒரு பொருளாக மாறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரத்தினால் முழுவதும் செய்த மேசை, பாதி மரம் பாதி இரும்பு இவற்றால் செய்த மேசை, முழுவதும் இரும்பினால் செய்த மேசை, இம்போர்டட் வுட்டன் மேசைகள் எனப் பல ரகங்களில் அழகழகான மேசைகள் வந்துள்ளன.

 

பேனர் படம்: karousell

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

 

#babychakratamil

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!