11 Oct 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் உணர்வு பூர்வமான ஒன்று. தன் குழந்தையைக் கையில் ஏந்தப்போகிறோம் என்று எந்த அளவு சந்தோஷம் ஒரு பெண்ணின் மனதில் குடிகொள்ளுமோ, அதே அளவுக்கு மகப்பேறு குறித்த பயமும் மனதுக்குள் இருக்கும். எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருக்கும் பாட்டிகளின் அனுபவங்கள்தான் வேதவாக்காகவும் முதலுதவியாகவும் இருந்தது. பாட்டி வைத்தியங்கள் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அனுபவங்களின் அடிப்படையில் எல்லா நோய்களுக்கும் ஏதோ ஒரு தற்காலிகத் தீர்வை தந்துகொண்டிருந்தது. தனிக்குடும்ப கலாசாரங்கள் பெருகிய பின், அனுபவங்களைச் சொல்ல பாட்டிகள் இல்லாமல் போனார்கள். நம்முடைய எல்லா தேவைகளுக்கும் வலைதள வழிகாட்டுதல்களை தேடத்தொடங்கிவிட்டோம்.
தாய்மை விஷயத்தில் என்னதான் ஆன்லைன் பார்த்துத் தகவல்களைத் தெரிந்துகொண்டாலும். மற்றவர்களின் நேரடி வழிகாட்டுதல்களும் அனுபவமும் அவசியம் தேவைதான். இது போன்ற சூழல்களில் தாய்மை குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு அம்மா போன்று சில மணிநேரங்கள் உங்களின் கூடவே இருந்து உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள் தாய்ப்பால் அறிவுரை நிபுணர்கள்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு இயல்பாகவே நிறைய சந்தேகங்கள் இருக்கும். எல்லா சந்தேகங்களையும் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியாது. குழந்தைகளுக்கு எப்படித் தாய்ப்பால் கொடுக்கணும்? தாய்ப்பால் சுரப்பு என்பது தாய்மார்களின் உணவுடன் சம்பந்தப்பட்டது அல்ல. உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. எனவே, என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் கொடுப்பேன். என் குழந்தைக்கான ஆரோக்கியம் என்னிடம் இருந்துதான் கிடைக்கும் என்பதை உங்களின் மனதில் முதலில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
நிறைய பெண்கள் தங்களிடம் இருந்து சுரக்கும் பால் தங்களின் குழந்தைகளுக்குப் போதுமானதாக இல்லையோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். பால் பற்றாக்குறையால்தான் குழந்தை அழுகிறது என எண்ணி தங்களையும் மன அழுத்தத்துக்குக் கொண்டு செல்வார்கள். குழந்தைகள் எல்லா நேரத்திலும் பால் பற்றாக்குறையால் மட்டும் அழுவதில்லை. தாயின் அரவணைப்பு தேவைப்படும் நேரங்களையும் குழந்தைகள் அழுகையாத்தான் வெளிப்படுத்துவார்கள். எனவே, பால் சுரப்பு பற்றி யோசித்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். மாதவாரியாக பின்வரும் குறிப்புகளை நினைவில் கொண்டு கண்காணியுங்கள்.
முதல் மூன்று மாதம்:
4 முதல் 6 மாதம் வரை:
குழந்தைக்கு பால் புகட்டும்போது மார்புக்காம்புகளை மட்டும் குழந்தையின் வாயில் வைக்காமல் முழு மார்பு பகுதியையும் (கரு வட்ட பகுதி) குழந்தையின் வாய்க்குள் பதியவையுங்கள். குழந்தை குடிக்கத் தொடங்கினாலே பால் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். சில பெண்களுக்கு பால் புகட்டுவதால் மார்பு பகுதியில் வலியுணர்வு இருக்கிறது என்பார்கள். குழந்தைகள் பால் குடிக்கும்போது அவர்களின் நாக்கு சரியாகச் செயல்படாவிட்டாலும் தாய்மார்களுக்கு வலி இருக்கும்.
புதிய தாய்மாருக்கு எழும் பொதுவான சந்தேகங்கள்:
உங்களுக்கு பால்சுரப்பு இல்லை என்றாலோ, அதிகமான பால் சுரப்பு இருக்கிறது என்றாலோ அருகில் இருக்கும் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் துணை நிற்பது அவசியம். தாய்ப்பால் சேமிப்பு வங்கியில் இருந்து பாலைப் பெறுவதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள், உங்களின் மனநிலையை விட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமானது என்பது நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A