குழந்தைக்கான கழிப்பறை பயிற்சி - எவ்வாறு அளிப்பது?

cover-image
குழந்தைக்கான கழிப்பறை பயிற்சி - எவ்வாறு அளிப்பது?

நான் உங்கள் தோழி சத்யா கலைச்செல்வன். குழந்தை வளர்ப்பில் என்  சொந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பொதுவாக அம்மாக்களாகிய நாம் நமது பிள்ளைகளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுகிறோம். நானும் அவ்வாறே!! அவர்களுக்கு தேவையான பொம்மைகள், துணிமணிகள், அணிகலன்கள், காலணிகளை தேடி தேடி சேகரிக்கிறோம். 

 

குழந்தைகள் தினசரி பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பதும் நாம் கடமையே. நான் எனது குழந்தைக்கு எவ்வாறு கழிப்பறை பயிற்சியை (potty training) தொடங்கினேன் என்பதை உங்களுடன் பகிர்கிறேன்.

 

எனது மகள் எட்டு மாத குழந்தையாக இருக்கும்போது, அவளுக்கு அமரும் நாற்காலி போன்ற சக்கரத்துடன் கூடிய கழிப்பறை இருக்கையை வாங்கினேன். குறைந்த விலையிலான அதேசமயம் தரமான வண்ணமயமான கழிப்பறை இருக்கை நாற்காலியை தேர்ந்தெடுத்தேன். கடைகளில் விலையுயர்ந்த வகைகளும் கிடைக்கின்றன, இருப்பினும் பயன்பாடு ஒன்றே. மேலும் கழிப்பறை இருக்கைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்போவதில்லை, வெறும் பயிற்சி அளிப்பதற்கு மட்டுமே.

  

இருக்கையை வாங்கிய பிறகு அவளை 2 (அ) 3 மணி நேரத்திற்கு ஒருமுறை சில நிமிடங்கள் அமர வைத்து பழக்க படுத்தினேன். சுயமாக அமர பழக்கப்படுத்தும் முறையே சிலநாள் நீடித்தது. பிறகு அதிலேயே அமர்ந்து சிறுநீர், மலம் கழிக்க பழகிவிட்டாள். அதில் அவளை பொறுமையாக அமர வைக்க குழந்தை பாடல்கள், கதை சொல்லல், புத்தகம் வாசித்தல் என்று அவளுடன் இணைந்து செயல்பட்டேன். இதன்மூலம் அவள் அதில் அமர்வதை வசதியாகவும், பழக்கமாகவும் ஆக்கிக்கொண்டாள்.

 

அவள் 14 மாத குழந்தையாக இருக்கும்போது, வீட்டு தரையில் சிறுநீர், மலம் கழிப்பது குறைந்து கழிப்பறை இருக்கையையே பயன்படுத்தினாள். அவளுக்கு 16 மாதம் ஆனவுடன் அவளே கழிப்பறை இருக்கையை எடுத்து அமரவும், சில நேரம் என்னிடம் எடுத்து வருமாறும் கூற ஆரம்பித்தாள். சரியான நேரத்தில் எனது மகள் கழிப்பறையை பயன்படுத்த பழகினாள். நான் மிகவும் பெருமையடைந்த தருணம்.

 

உங்கள் குழந்தைக்கு பயிற்சி அளிக்கையில் இவைகளை கருத்தில் கொள்ளுங்கள்:

 

1. உங்கள் குழந்தை ஆதரவின்றி சுயமாக அமர ஆரம்பிக்கும்போது  கழிப்பறை நாற்காலி/இருக்கையை வாங்குங்கள்.

2. வண்ணமயமான, அவர்களை கவரும் வகையிலான ஸ்டிக்கர், கார்ட்டூன் படங்களையும் ஓட்டலாம். இது ஒருவகையில் அவர்களை அதில் அமர ஊக்குவிக்கும். சக்கரத்துடன் கூட இருக்கை மிகவும் நல்லது. ஆரம்பத்தில் சக்கரங்களை நீக்கிவிடலாம், பழகிய பிறகு சக்கரங்களை இணைத்து விளையாடவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

3. குழந்தைகளுக்கு எந்த பழக்கத்தையும் பயிற்றுவிக்க பொறுமை மிக அவசியம்.

4. சிறுநீர், மலம் போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கூறி அவற்றிற்கான வேறுபாட்டையும் சொல்லுங்கள்.  கேட்க கேட்க குழந்தைகள் மனதில் பதிகிறது.

5. அவர்கள் அதில் அமர்ந்து இருக்கையில் அவர்களை பிஸியாக வைத்திருக்க முயற்சியுங்கள். இதுவே அவர்களை சரியான நிலையில் அமர வைக்க உதவும்.

6. மிக முக்கியம் ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் அவர்களை பாராட்டுங்கள்.

 

பேனர் படம்: www.healthdirect.gov.au

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil #bbceatorsclub #sathyakalaiselven #weareunique #whatisnext #careforeachother

#babychakratamil #bbceatorsclub #sathyakalaiselven #weareunique #whatisnext #careforeachother

#babychakratamil #bbceatorsclub #sathyakalaiselven #weareunique #whatisnext #careforeachother
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!