கருவுறுதலில் தாமதமா?

cover-image
கருவுறுதலில் தாமதமா?

கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம்.

 

இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. கருவுறாமை என்னும் பிரச்சனை இன்று பெண்களுக்கு அதிக எண்ணிக்கைகளில் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் அவற்றைக் குணப்படுத்தப் பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.

 

இந்த கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் அவருக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

 

பெண்களுக்கு ஏன் கருவுறாமை ஏற்படுகின்றது?

  • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
  • கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • கருப்பை வாயில் பிரச்சனை.

 

மாதவிடாய் சுழற்சி: மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது. மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்சனையின் அறிகுறியே ஆகும். நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி (PCOD)   பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. வலியுடன் கூடிய மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க அனேக வாய்ப்புள்ளது. ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

 

கருமுட்டை உற்பத்தி: அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகக் குழந்தைப் பேறுவைத் தள்ளிப் போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் காலகட்டத்திலே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்கால மன உளைச்சல்களைத் தவிர்க்கும்.

 

உடல் எடை: ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

 

பிறப்புறுப்பு தொற்றுநோய்: பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சாலச் சிறந்தது.

 

ஹார்மோன் குறைபாடு: கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது,  கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. தைராய்டு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சனை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

 

நீங்கள் கருவுற தாமதமானால் மேற்கூறிய காரணங்களில் ஏதேனும்  ஒன்றாக இருக்கலாம். சரியான மருத்துவரை அணுகுவதன் மூலம் குறைபாட்டைச் சரி செய்து குழந்தை வரம் பெற்று மகிழ்வாக வாழலாம்.  

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!