சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOD) - அறிவது அவசியம்!!

cover-image
சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOD) - அறிவது அவசியம்!!

 

இன்றைய இளம் பெண்களுக்கு பிசிஓடி (polycystic ovarian cyst - PCOD) என்று அழைக்கப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் ஆரம்பத்தில் கண்டறிந்து தகுந்த மருத்துவத்தின் மூலம் சரி செய்யலாம். 20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. நாளடைவில் புற்று நோய்க்கான அறிகுறிகளாக மாறுகிறது.  சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு (வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து பாதிப்பைத் தருகிறது.

 

 

படம்: maalaimalar

 

கருப்பை நீர்க்கட்டிகளுக்கான அறிகுறிகள்:  

 

 1. ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் காணப்படுதல்.
 2. இடுப்பு பகுதிக்கு கீழே, வலது (அ) இடது புறத்தில் வலி இருப்பது, பாரமாக இருப்பது போன்ற உணர்வு. உடற்பயிற்சியின் போது (அ) பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உணரலாம். கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.
 3. வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10 செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் (அ) உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.
 4. சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
 5. கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
 6. கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.
 7. இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டி இருப்பதற்கான ஒரு வகை அறிகுறியாகும்.

 

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

 • பதப்படுத்தப்பட்ட மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகள்
 • மைதா, பேக்கரி உணவுகள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள் 
 • உப்பு அதிகம் சேர்த்த நொறுக்குத்தீனிகள் 
 • மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படும் எண்ணெய் 

 

இந்த நவீன யுகத்தில் தகுந்த மருத்துவ முறைகளை நாடுவதன் மூலம் எல்லா வகை உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். தேவையற்ற பயத்தை தவிர்த்து பொறுமையுடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ளுங்கள்.

 

பேனர் படம்: apollosugar

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!