கர்ப்பகால தூக்கமின்மையா?

கர்ப்பம் என்பது ஒரு வரம், பெரும்பாலானோருக்கு  அது எளிதில் கிடைத்துவிடுகிறது. வெகு சிலருக்கு சிறிது தாமதமானாலும் அதை நிவர்த்தி செய்ய மருத்துவ முறை வளர்ச்சி அடைந்துவிட்டது. கருவை சுமக்கும் பெண்ணுக்கு மாதம் கூட கூட ஏற்படும் பெரும் சங்கடம் தூக்கமின்மை. அவர்கள் உடலில் பலவிதமான ஹார்மோன் மற்றும் உடல்சார்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால், அவரது தூக்கத்தின் தரம் பாதிக்கப்படக்கூடும். கடைசி மாதங்களில் டெலிவரி குறித்த பயத்தின் காரணமாக தூக்கம் தொலைந்து விடுகிறது. 

 

பொதுவான காரணங்கள்:

 

 • கர்ப்பத்தினால் உண்டான உணர்வு, உடல் அழுத்தத்தால் தூக்கம் பாதிக்கப்படுதல்
 • ப்ரொஜெஸ்டெரோன் அளவு அதிகமாவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
 • கரு வளர்வதால் ஏற்படும் பொதுவான அசௌகர்யம், வலிகள்
 • இரவில் சரியான தூக்கம் இல்லாததால் பகல்நேரத்தில் தூக்கக்கலக்கமாக உணர்தல்
 • பொதுவான களைப்பாலும், கூடுதல் எடையைச் சுமப்பதாலும் கால்களில் பிடிப்பு
 • இரவில் படுத்திருக்கும்போது அதிகம் ஏற்படும் அசிடிட்டி, நெஞ்செரிச்சல்
 • ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூக்குச் சவ்வு உள்ளிட்ட பகுதிகளில் மூச்சடைப்பு
 • கால்களில் தொடர்ந்து கூச்சவுணர்வு ஏற்படுவதால், அவற்றை நகர்த்தத் தோன்றிக்கொண்டே இருப்பது, இதனை நிலைகொள்ளாத கால் குறைபாடு (RLS) என்பார்கள்
 • அதிகப் பதற்றம் (அ) பயத்தினால், தூக்கமின்மை

 

தூக்க பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கலாம்?

 

கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குத் போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் (அ) மற்ற தூக்கப் பிரச்னைகள் இருந்தால், அவர் தன்னுடைய மருத்துவரிடம் இதுபற்றிப் பேச வேண்டும். இந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் நன்கு தூங்க உதவக்கூடிய சில டிப்ஸ்கள்:

 

 • உடற்பயிற்சியானது தூக்கத் தரத்தை மேம்படுத்தும். ஆனால், தூங்கச்செல்லும் முன் உடற்பயிற்சி வேண்டாம்.
 • காஃபின் (caffeine) அதிகமுள்ள பொருள்களை உட்கொள்ளவேண்டாம், இவை தூக்கத்தைத் தொந்தரவு செய்யும்.
 • சர்க்கரையும் அவரது ஆற்றல் அளவுகளை அதிகரிக்கும், இரவில் அதைத் தவிர்ப்பது நல்லது.
 • தூங்கச்செல்லும் முன் மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம், மெல்லிசை கேட்கலாம், அவரைத் தளர்வடையச் செய்யும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்.
 • பகல் நேரத்தில் நிறைய திரவப்பொருள்களைக் குடிக்கலாம், தூங்கும் நேரம் நெருங்க நெருங்க, அதன் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.
 • பகல் நேரத்தில் தூக்கம் வந்தால், இயன்றவரை காலை நேரத்தில் தூங்கவேண்டும், இரவில் தூங்கவேண்டிய நேரத்துக்குப் பக்கத்தில் தூங்கவேண்டாம்.
 • தூங்கச்செல்லும் முன் எதையாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், பசியினால் நடுராத்திரியில் எழுந்திருக்க வேண்டியிருக்காது.
 • கூடுதல் தலையணைகளைப் பயன்படுத்தி முதுகு, வயிற்றில் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

 

கர்ப்பமாக  இருக்கும் பெண்  எந்தப் பிரச்னையைச் சந்தித்தாலும் அதைத் தன் மருத்துவரிடம் சொல்வது முக்கியம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடவேண்டாம்.

 

பேனர் படம்: maalaimalar

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

 

#babychakratamil

#babychakratamil #babychakratamil

Pregnancy

Read More
தமிழ்

Leave a Comment

Comments (2)Priya Hari Haran Shyamala Devi merlin sofia திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattuKhushboo Chouhan

Priya Hari Haran Shyamala Devi merlin sofia திவ்யாஹரி ஹர்ஷித் Sowmiya Prabu Veera Ramya Ramya Veerasingam Gopeka SowbarnikHemalatha Arunkumar priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Revauthi rajamani Sathya Kalaiselven ANCY FELIX anitha varnika sundar Priya Hari Haran subaaa pattuKhushboo Chouhan

Recommended Articles