குழந்தைக்கு டயபர் பயன்படுத்தப் போகிறீர்களா?

cover-image
குழந்தைக்கு டயபர் பயன்படுத்தப் போகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் புதிய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு பழைய காட்டன் வேட்டிகளையே பயன்படுத்தினர். அதை துவைக்க காயவைக்க என்று உதவிக்கு வீட்டில் சொந்தங்கள் இருந்தனர். தற்போதைய நிலையில் அதற்கான நேரமும் இடமும் இருப்பதில்லை. அந்த வேலையை எளிதாக்கவே 

டயபர் அறியப்பட்டது. பிறந்த குழந்தை தொடர்ந்து சிறுநீர் மலம் கழிப்பதால் அவர்களின் தூக்கம் தடைபடுகிறது. மேலும் வெளியிடங்களுக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும்போதும் அவர்கள் துணிகளை நனைத்து விடுவார்கள். இதற்காகவே கண்டுபிக்கப்பட்டது டயபர். குழந்தை சிறுநீர் கழித்தால் நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் டயாபர் கூட வந்துவிட்டது.

 

தேர்ந்தெடுக்கும் முறை:

 • பிறந்த குழந்தைக்கு பிரத்யேகமாக  டேப் டயபர்கள் (Tape) கிடைக்கின்றன
 • தவழ, நடக்க ஆரம்பித்த பிள்ளைகளுக்கு பாண்ட் (Pants) டயபர் எடைக்கேற்ப டயபர்களை தேர்ந்தெடுப்பது அவசியம்
 • முழு நேரமும் டயபர் அணிவிக்க பரிந்துரைக்கப்படுவதில்லை

 

விளைவுகள்:

 • சில குழந்தைகளுக்கு தோல் உராய்வு, கொப்புளம் ஏற்படலாம். இதனை டயபர் ராஷ் என்று கூறப்படும்.
 • இதற்கென பிரத்யேகமாக ஆன்டி ராஷ் கிரீம்கள் கிடைக்கின்றன.
 • அந்த கிரீமை தொடை இடுக்கு, உராய்வு பகுதிகளில் தடவி அதன்பின் டயபர் போடலாம்.
 • சில குழந்தைக்கு டயபர் சூட்டின் காரணமாக சிறுநீர் கடுப்பு ஏற்படும்.

 

தீர்வுகள்: 

 • குழந்தையின் நீரேற்றத்தை உறுதி செய்து கொள்ளவும்.
 • குறிப்பிட்ட நேர இடைவெளியில் டயபர் மாற்ற வேண்டும்.
 • தரமான ஆன்டி ராஷ் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
 • உராய்வுகளை தவிர்க்க பிரத்யேக பவுடர்கள் (dusting powder) கிடைக்கின்றன, அதனை டயபரில் தடவிய பிறகு குழந்தைக்கு அணிவிக்கலாம்.     
 • குழந்தையின் பிறப்புறுப்பு சுகாதாரத்தை சீராக கடைபிடிக்க வேண்டும் (இரவில் தூங்க செல்வதற்கு முன், காலை எழுந்தவுடன்).

 

மேலும் குழந்தையின் தோலோடு நேரடியாக ஒட்டி இருக்கும் பகுதி என்பதால் பெட்ரோலியம் ஜெல்லி, கற்றாழை சாறு, வைட்டமின் ஈ போன்ற பொருட்கள் சிறிய அளவில் கலக்கப்படும். இதனால் குழந்தைக்கு உராய்வு ஏற்படுவது குறையும். இது தவிர சில டயாபர்களில் நறுமணத்துக்கு சில பொருட்களை சேர்க்கிறார்கள். பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை கூட அச்சிடுகிறார்கள். இயற்கையான பொருட்களால் செய்யப்படுவதால் பக்க விளைவுகளை உருவாக்குதில்லை. டயாபரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என சில ஆய்வுகளில் சொல்லப்பட்டாலும் எவ்வளவு நேரம் அதை குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியம். தேவையான நேரத்தில் மட்டுமே குழந்தைக்கு போட்டு டயாபரை கழட்டிவிட வேண்டும். 

 

இல்லாவிட்டால் சிறுநீரில் இருக்கும் அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் குழந்தையின் தோலை பாதிக்கும். சொறி, கொப்புளம் போன்றவற்றை உருவாக்கும். சில சமயம் நாப்கினில் உள்ள வேதியியல் பொருட்களின் ஒவ்வாமையால் கூட சரும பாதிப்பு (சொறி) ஏற்படலாம். இதை ‘டயாபர் ரேஷ்’ என்று அழைப்பார்கள். எந்நேரமும் குழந்தைக்கு டயாபர் அணிவித்து இருப்பதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

வெளியிடங்களுக்கு செல்லும்போதும், இரவில் குழந்தையின் தூக்கம்  தடைபடாமல் இருக்கவும் டயபர் பயன்பாடு மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!