இந்திய சட்டப்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள்!!

cover-image
இந்திய சட்டப்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள்!!

இன்றைய நவீன சட்டப்படி கருவுற்ற பெண்களுக்கு சட்டப்படி சில பிரத்யேக அடிப்படை உரிமைகள் வழங்கப்படுகின்றன. பணிபுரியும் மகளீரின் நலத்தையும் கருத்தில் கொண்டு சட்ட திருத்தங்கள் செய்து பயன்படும் வகையில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன:

 

  1. இலவச தடுப்பூசிகள் 
  2. கருவுற்ற தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து 
  3. அரசு நல உதவி திட்டங்கள் - கருவுற்ற தாய்மார்களுக்காக
  4. அரசு நல உதவி திட்டங்கள் - பேறுகாலம் முடிந்தவுடன்
  5. அரசு நல உதவி திட்டங்கள் - முதல் பிள்ளை பெண் எனில்
  6. கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை 
  7. மகப்பேறுகால ஊதிய உரிமை
  8. பொது போக்குவரத்து வாகனங்களில் இட ஒதுக்கீடு
  9. கருக்கலைப்பு ஒப்புதல் உரிமை

 

 

இப்பொழுதே வாங்கி 44% தள்ளுபடி பெறவும்!

 

இலவச தடுப்பூசிகள்:

கருவுற்றிருக்கும் மகளிருக்கு கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள், அரசு மகளிர் நல மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் மகளிருக்கும் இத்திட்டம் பயனளிக்கிறது. மகப்பேறுக்கு பிறகு குழந்தைக்கு தேவையான தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்தும் இங்கு அளிக்கப்படுகிறது.

 

கருவுற்ற தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து:

கருவுற்றிருக்கும் பெண்ணையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் சத்து மாவு, மாவு உருண்டைகள் வழங்கப்படுகின்றன. அந்த சத்து மாவை கொண்டு கஞ்சி, புட்டு இட்லி முதலியன செய்து உண்ணலாம். 1 முதல் 9 மாதம் வரையிலும், பாலூட்டும் தாய்மாருக்கும் வழங்கப்படுகிறது. இது கிராமப்புற பெண்களுக்கு பெரும் பயனளிக்கிறது.   

 

அரசு நல உதவி திட்டங்கள் - கருவுற்ற தாய்மார்களுக்காக:

மத்திய அரசானது பல்வேறு நல உதவி திட்டங்களை பெண்களுக்காக வழங்கி இருக்கிறது. அதில் ஒன்று கருவுற்ற மகளீருக்கானது. முதல் ஆறு மாதங்களை கடந்த பின்னர் குறிப்பிட்ட தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் போட்டிருந்தால் அதற்கான சான்று இருக்கும் பட்சத்தில், இந்த நல திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். உதவி தொகையானது நகரத்திற்கு நகரம் மாறுபடும். தென் மாவட்ட பகுதிகளில் அதிக  தொகையும், பெருநகர பகுதிகளில் குறைந்த தொகையும் அளிக்கப்படுகிறது. 

 

பேறுகாலம் முடிந்தவுடன்:

சில நல திட்டங்களானது மகப்பேறு முடிந்து குழந்தைக்கு அளிக்கப்படும் முதல் தடுப்பூசிக்கு பிறகு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இத்திட்டத்திலும் வழங்கப்படும் உதவி தொகையானது நகரத்திற்கு நகரம் மாறுபடும். இது பெரும்பாலும் கிராமப்புற, நகர்ப்புற மகளீருக்கு பயனளிக்கப்படுகிறது.       

 

முதல் குழந்தை பெண் பிள்ளை எனில்:

இது பெரும்பாலும் தென்மாவட்டங்களில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற பெண் சிசு கொலையை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் குழந்தை பெண்பிள்ளை எனில் குறிப்பிட்ட தொகை ஊக்க தொகையாக அளிக்கப்படுகிறது. இரண்டாவது பிள்ளைக்கும் இந்த உதவி ஊக்க தொகை அளிக்கப்படுகிறது.

 

கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை:

இது அலுவலக பணிபுரியும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வெறும் 3 மாதங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டது. இப்போது 6 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சில அலுவலகங்களில் வேலை நேர மாற்றங்களும் அனுமதிக்கப்படுகின்றன. வீட்டிலிருந்தே பணி புரியும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.  

 

மகப்பேறுகால ஊதிய உரிமை: 

ஆரம்பத்தில் வெறும் 3 மாத விடுப்பு மட்டுமே அளிக்கப்பட்டது. பிறகு சம்பளத்துடன் கூடிய விடுப்பாக மாற்றப்பட்டது. அதுவும் அரசு அலுவலர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை, இப்போது தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் ஏற்ற வகையில் 6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அறிவிக்கப்பட்டது. இது நகரத்து பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சித்தரும் செய்தியாக அமைந்தது. கைக்குழந்தையை வீட்டில் விட்டு வருகிறோம், பால் புகட்ட முடியவில்லை என்ற கவலையை பெருமளவு போக்கியது. நிதி நெருக்கடியையும் சமாளிக்க பெருந்துணை புரிந்தது.  

 

 

இப்பொழுதே வாங்கி

 

பொது போக்குவரத்து வாகனங்களில் இட ஒதுக்கீடு:

போக்குவரத்துக்கு வாகனங்களான பேருந்து (பஸ்), ரயில் (train) போன்றவற்றில் பெண்களுக்கு என தனி இருக்கை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண் இவ்வாகனங்களில் பயணிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 

 

கருக்கலைப்பு ஒப்புதல் உரிமை:

கருவுற்றிருக்கும் பெண்ணை கருக்கலைப்புக்கு வற்புறுத்தும் உரிமை யாருக்கும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். குழந்தை வளர்ச்சி குறைபாடு எனில் தகுந்த சான்றிதழுடன், பெண் மற்றும் அவரது கணவரின் ஓப்புதலை கையெழுத்துடன் பெற்ற பின்னரே செய்யும் உரிமை மருத்துவருக்கு உண்டு. 

 

மேற்கூறிய சட்டபடியான உரிமைகள் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு அளிக்கப்படுகிறது. இது மறுக்கப்படும் நிலையில் தகுந்த ஆதாரங்களுடன் நீதி துறையை நாடுவதன் மூலம் அடைய முடியும். 

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!