குழந்தையின் எடை குறித்த கவலை பெரும்பாலும் அனைத்து தாய்மாருக்கும் உண்டு. பிறந்தது முதல் 6 வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. ஆறு
மாதத்துக்கு பிறகு தாய்ப்பாலுடன் திட உணவுகளை கொடுப்பது அவசியம். இதனை இணை உணவு என்றழைக்கிறோம். ஆரம்ப நிலையில் (7-12 மாதங்கள்) பின்வரும் உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
- வாழைப்பழம்: பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது.
- அரிசிக்கஞ்சி: இது பெரும்பாலும் சிகப்பு/பிரவுன் நிற அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. நன்கு குலையும் வரை வேகவைத்து அரைத்து/மசித்து ஊட்டலாம்.
- ராகி – கேழ்வரகு: இனிப்பு/உப்பு சேர்த்து கஞ்சி போல் செய்து கொடுக்கலாம். தேவையெனில் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.
- பசு நெய்: அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும்.
- உருளைக்கிழங்கு: வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது.
- சர்க்கரைவள்ளி கிழங்கு: இதை வேகவைத்து மசித்துத் தரலாம். உடல் எடை கூடும்.
- முட்டை: இதில் உள்ள அமினோ அமிலங்கள், புரதம், கொழுப்பு, தாதுக்கள், விட்டமின் ஏ, பி12 ஆகியவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
குழந்தைக்கு ஒரு வயது தொடங்கியவுடன் உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை கொடுக்கையில் தசைகள் வளர்ச்சி பெற்று, உடல் எடை அதிகரிக்கும். உணவு பரிந்துரைகள் பின்வருமாறு:
- வெண்ணெய் (Butter): வெண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் உள்ளது. வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் கொடுத்து வாருங்கள். இதனால் தானாக உடல் எடை அதிகரிக்கும். பிரட்டில் வெண்ணை/ஜாம் தடவி கொடுக்கலாம்.
- வேர்க்கடலை வெண்ணெய் (groundnut butter): புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.
- பால்/சீஸ்/பன்னீர்/தயிர்: பால் பொருட்களான பால் மற்றும் க்ரீம்களில் கலோரிகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உங்கள் குழந்தைக்கு தவறாமல் 2 டம்ளர் பால் கொடுங்கள். தோசை செய்யும் போது அதன் மீது சீவிய சீஸ் சேர்த்து கொடுக்கலாம். பூரி-கிழங்கு மசாலாவில் சிறிது பன்னீர் துண்டுகளை சேர்த்து கொடுக்கலாம்.
- முட்டை: முட்டையில் புரோட்டீன் வளமாக உள்ளது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 போன்றவை அதிகம் உள்ளது.
- வாழைப்பழம்: வாழைப்பழத்தில் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும் உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். செவ்வாழை, எலக்கி, ரஸ்தாலி, கற்பூரவாழை, நேந்திரம்பழம் உள்ளிட்ட அனைத்து வகைகளையும் கொடுக்கலாம்.
- சிக்கன்: சிக்கனில் புரோட்டீன் நல்ல அளவில் உள்ளது. மேலும் இது தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். ஆகவே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாத குழந்தைகளுக்கு, சிக்கனை அடிக்கடி கொடுத்து வாருங்கள்.
- பாஸ்தா: பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.
- உலர் பழவகைகள்: முந்திரி, பாதம், பிஸ்தா, உலர் திராட்சை போன்றவைகளையும் கொடுக்கலாம். அளவில் கவனம் தேவை. கெட்ட கொழுப்பாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட உணவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு முழு உணவாகவோ (அ) அவர்களுக்கு பிடித்த உணவுகளுடன் கலந்தோ கொடுக்கலாம். சில பிள்ளைகள் புதுப்புது வகையான உணவை சுவைக்க விரும்புவார்கள். சுவையை மாற்றி மாற்றி கொடுப்பதன் மூலமாகவும் உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
#babychakratamil #babychakratamil