14 Nov 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது மூன்று மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதுவும் அரசே தனியார் அலுவலகத்திலும் 6 மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அளிக்கும் உத்தரவை நிறைவேற்றியுள்ளது. சில பெண்களின் கட்டாயத்தின் அடிப்படையில் பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
கைக்குழந்தை பராமரிப்பு:
பொதுவாக பிரசவம் முடிந்த பிறகு, தாய் கண்டிப்பாக குழந்தையுடன் இருப்பது அவசியம். பிரசவம் முடிந்த பிறகு அனைத்து தாய்மார்களும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாயின் உடல்நிலை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வும் பெருகி வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது அலுவலகத்தில் தரும் பிரசவ விடுமுறையை, பிரசவத்திற்கு முன்-பின் என பகிர்ந்து எடுத்துக் கொள்ளலாம். குழந்தையை மார்போடு அணைப்பதன் மூலம் தாயிடமிருந்து குழந்தை பாதுகாப்பு உணர்வை பெறுகிறது. தாயின் சூட்டை குழந்தை முதன் முதலில் உணர ஆரம்பிக்கிறது.
நடைமுறை சிக்கல்கள்:
சில பெண்கள் குழந்தை நலன் மற்றும் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வேலைக்கு விருப்ப ஓய்வு அளிக்கின்றனர். குழந்தை ஓரளவு வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் பணியை ஆரம்பிக்கின்றனர். சில பெண்கள் பொருளாதார நெருக்கடியினால் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். பெற்ற தாய்க்கு குழந்தையை விட எதுவும் பெரியதாக தெரிவதில்லை. தாய் என்பவள் ஈடு இணையற்றவளே.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A