கர்ப்பகால நெஞ்செரிச்சலா? காரணமும் - தீர்வும்!!

cover-image
கர்ப்பகால நெஞ்செரிச்சலா? காரணமும் - தீர்வும்!!

 

பொதுவாக பெண்கள் கர்ப்பகாலத்தில் பலவகை உடல் மற்றும் மன மாற்றத்தை அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால் நிகழ்கிறது. முதல் ட்ரைமெஸ்டரில் காலை குமட்டல், வாந்தி போன்றவற்றால் இதை உணர இயலாது. இரண்டாவது ட்ரைமெஸ்டரில் இருந்து இது தொடங்கும். 

 

காரணங்கள்: 

நான்காவது  மாத இறுதியில் அதாவது,  16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்ய மருத்துவர் அறிவுறுத்துவார். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 70 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை  இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.

 

தீர்வுகள்: 

 • அதிக காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 
 • எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 
 • ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிட வேண்டும்.
 • உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் காலாற நடக்க வேண்டும். 
 • வாயில் சிறிது இனிப்பான வெல்லம் (அ) இஞ்சி மரப்பாவை போட்டுக்  கொள்ளலாம்.   
 • சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.
 • அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. 
 • இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது.  நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம்  பாதுகாப்பற்றவை.
 • சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். 
 • வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். 
 • தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும். 
 • மாலை வேளைகளில் சிறிது சுக்கு காபி குடிக்கலாம்.

 

தவிர்க்கவேண்டியவை:

 • ஜீரணமாக தாமதமாகும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும். 
 • ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதில் போடப்படும் சோடா, மோனோசோடியம் க்ளூட்டமேட், செயற்கை நிறங்கள் என எதோ ஒன்று அஜீரணத்தை ஏற்படுத்திவிடலாம். சுகாதாரமற்ற உணவுகளால் இன்ஃபெக்ஷன் ஆகலாம்.

 

இந்த நெஞ்செரிச்சல்  பிரச்சனைக்கு பொதுவாக ஆங்கில மருத்துவத்தை காட்டிலும் எளிய பாட்டி வைத்தியமே பெரும்பாலும் கை கொடுக்கும். மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அதன்படி உணவுகளையும் உணவு முறைகளையும் பின்பற்றுவது நெஞ்செரிச்சலுக்கான தீர்வாக அமையும்.

 

பேனர் படம்: vanguardngr

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!