கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் இந்த ஊட்டச்சத்துக்களை தவறவிடக்கூடாது

cover-image
கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் இந்த ஊட்டச்சத்துக்களை தவறவிடக்கூடாது

ஒரு பெண் தனது கர்ப்ப பரிசோதனைக் கருவியில் இரண்டு இளஞ்சிவப்பு கோடுகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, அவளது உடல் மாற்றங்களுக்கு உள்ளாகும்போது அறிகுறிகளைக் கொடுக்கத் தொடங்குகிறது.  பெரும்பாலும் நம் வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக, இன்றைய காலங்களில் நம் உடல் நலம் 100% ஆரோகியமானதாக இல்லை. மேலும் இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை கொண்டு வர தயாரான நிலையில் உடல் நலம் இருப்பதில்லை. எனவே ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தவுடன், அவள் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து குறிப்பிடத்தக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

 

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த காலத்தில் கருவின் முக்கியமான வளர்ச்சியும், தாயின் உடலில் அதிக அளவு ஹார்மோன் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்படுகிறது.  இந்த மாற்றங்கள் சரியான முறையில் ஏற்பட ஆரோக்கியமான உணவும், ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து தேவைகள் இயல்பான அளவை விட கிட்டத்தட்ட 40-60% அதிகம் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.  இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஊட்டச்சத்து மிக்க உணவுடன் சப்பிலிமெண்டுகள் தேவைப்படுகிறது. 25 முக்கிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ போன்ற 50% ஆர்.டி.ஏ ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட Mothers Horlicks - ன் துணையுடன் கூடிய ஒரு சீரான உணவு, தாயின் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யவும் மிகவும் அவசியம்.

 

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 5 ஊட்டச்சத்துக்களின் பட்டியல் பின்வருமாறு:

ஃபோலிக் அமிலம்

குழந்தையின் நரம்புக் குழாய், அதாவது மூளை, முதுகெலும்பு மற்றும்  மத்திய நரம்பு மண்டலத்தின் பிற நரம்பு திசுக்கள், முதல் மூன்று மாதங்களில் நன்கு உருவாகின்றன.  சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியில் ஃபோலேட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் குழந்தையின் நரம்புக் குழாய், மூளை மற்றும் முதுகெலும்புகள் உருவாக உதவுகிறது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளும் பெண்களில் ப்ரீ டேர்ம் டெலிவரி வாய்ப்புகளை 50% அல்லது அதற்கு மேற்பட்டதாகக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஃபோலிக் அமிலத்தின் நுகர்வு குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்புகளின் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது.

பரிந்துரைக்கப்படும் தினசரி உட்கொள்ளும் அளவு: கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு முன்னும் பின்னும் தினமும் 400 கிராம் ஃபோலிக் அமிலம் அவசியம்.

 

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்- EPA மற்றும் DHA

குழந்தையின் நரம்பு மண்டலத்தின் பெரும்பகுதி முதல் மூன்று மாதங்களில் வளர்ச்சி அடைகிறது.  இந்த காலகட்டத்தில் குழந்தையின் கண்கள், மூக்கு, வாய் மற்றும் காதுகள் வளர்ச்சி அடைகின்றன. அத்தியாவசிய ஒமேகா-3 மற்றும் EPA அமிலங்கள் இதயம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் அழற்சியை எதிர்கொள்ளும் சக்திகளை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் DHA மூளை, கண்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டல வளர்ச்சியை மேம்படுத்துகிறது, இவை முதல் மூன்று மாதங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக அமைகின்றன.  கர்ப்பிணிப் பெண்களின் உணவில் EPA மற்றும் DHA சேர்ப்பது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பரிந்துரைக்கப்படும் தினசரி உட்கொள்ளல்: முதல் மூன்று மாதங்களில் உணவு அல்லது சப்லிமெண்டுகள் மூலம் 300 mg DHA அவசியம்.

 

கோலைன்

கர்ப்பிணிப் பெண்கள் 95% வரை பரிந்துரைக்கப்படும் அளவை விட குறைவான கோலினை உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் மூன்று மாதங்களில், ஹார்மோன்களின் அதிகரிப்பு காரணமாக, ஒரு கர்ப்பிணிப் பெண் குமட்டல், மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் பிற உடல் மாற்றம் அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடலாம். கோலின் நல்ல வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களில் நினைவாற்றல், மனநிலை சீர் அமைப்பு, தசைக் கட்டுப்பாடு, பிற மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.  குழந்தையின் சரியான முதுகெலும்பு உருவாக்கம் மற்றும் ஆரம்பகால மூளை வளர்ச்சியிலும் கோலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

பரிந்துரைக்கப்படும் தினசரி உட்கொள்ளல்: முதல் மூன்று மாதங்களில் 450 gms கோலின் அவசியம்.

 

கால்சியம்

கர்ப்ப காலத்தில் 4 வாரங்களின் முடிவில், குழந்தையின் இதயம் துடிக்க தயாராகிறது.  அனைத்து முக்கிய உடல் அமைப்புகளும், சுழற்சி, நரம்பு, செரிமானம் மற்றும் சிறுநீர் அமைப்புகள் உட்பட தொடர்ந்து வளர்ந்து செயல்படுகின்றன.  குழந்தைக்கு ஆரோக்கியமான இதயம், நரம்புகள் மற்றும் தசைகள் வளர உதவுவதோடு, சீரான இதய துடிப்பு மற்றும் இரத்த உறைவு திறன்களை வளர்க்கவும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.  கர்ப்ப காலத்தில் போதுமான கால்சியம் அளவு பெறப்படாவிட்டால், குழந்தை அதை தாயின் எலும்புகளிலிருந்து எடுக்க முனைகிறது, இது பிற்காலத்தில் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் தினசரி உட்கொள்ளல்: முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு நாளும் 1000 mg கால்சியம் அவசியம்.

 

 

வைட்டமின் பி12

குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சி முதல் மூன்று மாதங்களின் மைய புள்ளிகளில் ஒன்றாக இருப்பதால், கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்துடன் வைட்டமின் பி12 அல்லது கோபாலமின் எடுத்துக்கொள்வது அவசியம். கருவில் உள்ள குழந்தையில் ஸ்பைனா பிஃபிடா, பிற முதுகெலும்பு மற்றும் மத்திய நரம்பு மண்டல பிறப்பு குறைபாடுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் புரோஜெஸ்ட்டிரோன் அதிக அளவு சுரப்பதன் காரணமாக நெஞ்செரிச்சல், அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாயு ஆகியவற்றால் தாயின் உடல் நலம் பாதிப்படைகிறது. எனவே வைட்டமின் பி12 கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதன் மூலம் ஆற்றல், மனநிலை மற்றும் மன அழுத்தத்தை மேம்படுத்துவதன் மூலம் இதை எளிதாக்க உதவுகிறது.

பரிந்துரைக்கப்படம் தினசரி உட்கொள்ளல்: 2.6 mcg தேவைப்படுகிறது.

 

 

முதல் மூன்று மாதங்கள் கருவின் இயல்பான வளர்ச்சிக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. மேலே உள்ள பட்டியலைத் தவிர, இரும்பு, புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான சீரான உணவு, இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உறுதி செய்வதோடு, தாயின் நல்ல ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!