5 Dec 2019 | 1 min Read
revauthi rajamani
Author | 44 Articles
கர்ப்ப காலம் என்பது சுமார் 40 வாரங்கள் நீடிக்கும். 37 வது வாரத்தின் முடிவில் குழந்தை பிறந்தால் முழு காலமாகக் கருதப்படுகிறது. 37வது வாரத்திற்கு மேல் குழந்தை பிறப்பதற்கு முன்பு கிடைக்கும் சில நாட்கள், ஒரு கால அவகாசமாக மட்டுமே கருதப்படுகிறது.
இரண்டாவது ட்ரைமெஸ்டரின் முடிவில், கர்ப்பமாக இருப்பதின் தன்மை பெரிதும் உணரப்படுகிறது. வலிகள் மற்றும் அசௌகரியங்கள் இந்த மூன்று மாதங்களில் ஏற்படும் மாற்றங்களில் சில. மூன்றாவது ட்ரைமெஸ்டரில் உறுப்பு வளர்ச்சி மற்றும் உடல் தோற்றத்தின் அடிப்படையில் குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காண முடியும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சவாலாக இருக்கும். இந்த இறுதி ட்ரைமெஸ்டரில், குழந்தையின் எலும்புகள் முழுமையாக உருவாகின்றன. குழந்தை இப்போது கண்களைத் திறந்து மூடி, ஒளியை உணர முடியும். குழந்தையின் உடல் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களை சேமிக்கத் தொடங்குகிறது. எனவே, கற்பிணிப்பெண் தொடர்ந்து ஆரோக்கியமாக சாப்பிடுவது மட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். மேலும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்குப் பிறகும் அந்த பெண்னின் உடலைத் தயார் படுத்த இந்த சத்துக்கள் தேவைப்டுகின்றது.
கோலின், ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்து தேவைகளுக்கு போதுமானதாக இருக்க ஒரு கற்பிணிப்பெண் கூடுதல் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கையில்,25 முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மதர்ஸ் ஹார்லிக்ஸை தனது உணவில் சேர்ப்பது 3வது டரைமெஸ்டரில் அவளது அதிகரிக்கும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மற்றொரு சிறந்த வழியாகும்.
ஒரு தாய் தனது உணவின் மூலம் உட்கொள்ளும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும் அவளது உடல்நலம் மற்றும் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய முதல் 3 முக்கியமான ஊட்டச்சத்துக்களை சரிபார்க்க வேண்டும்.
ஒமேகா 3-டிஹெச்ஏ
மூன்றாவது ட்ரைமெஸ்டரிலிருந்து 18 மாதங்கள் வரை குழந்தையின் மூளை மற்றும் விழித்திரையின் கரு வளர்ச்சிக்கு டிஹெச்ஏ முக்கியமானது. ஒமேகா 3 நிறைந்த உணவு குழந்தையின் உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் மோட்டார் வளர்ச்சியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் உணவு மற்றும் கூடுதல் டிஹெச்ஏ தொடர்ந்து எடுத்துக்கொள்வது குறைப்பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வின் அபாயங்களைக் குறைக்கிறது. இது ப்ரீக்ளாம்ப்சியாவின் அபாயங்களைக் குறைப்பதற்கும், பிறப்பு எடையை அதிகரிப்பதற்கும் மிகவும் அவசியம்.
இரும்பு:
மூன்றாவது
ட்ரைமெஸ்டரில், குழந்தைக்கும்,கருப்பையில் நஞ்சுக்கொடிகும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அந்த கூடுதல் இரத்தத்தை உருவாக்குவதில் இரும்பு முக்கிய பங்கு வகிப்பதால், இந்த காலகட்டத்தில் தாயினுடைய இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இது நுரையீரலில் இருந்து குழந்தைக்கு ஆக்ஸிஜனை நகர்த்தவும் உதவுகிறது. இரும்புச்சத்து இல்லாதது இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இதையொட்டி குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பதற்கும் வழிவகுக்கும்.
புரதம்:
மூன்றாவது ட்ரைமெஸ்டரில் குழந்தை மிக வேகமாக வளர்கிறது. எனவே கர்ப்பத்தின் பிந்தைய காலகட்டத்தில் புரத அளவு மிக முக்கியமானது. புரதமானது அமினோ அமிலங்களால் ஆனது, இது குழந்தையின் முகத்தையும் அதற்குக் கீழே உள்ள ஒவ்வொரு கலத்தையும் உருவாக்குகிறது. மூன்றாவது ட்ரைமெஸ்டரில், குழந்தையின் மூளைக்கு குறிப்பாக, குழந்தை சுவாசிக்கவும், நடக்கவும், பேசவும் உதவும் உறுப்புக்களின் வளர்ச்சிக்கு புரதங்கள் தேவை.
மேற்கூறிய மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்களைத் தவிர, மூன்றாவது ட்ரைமெஸ்டரில் ஒவ்வொரு நாளும் உணவின் ஒரு பகுதியாக பல முக்கிய ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றது.
மூன்றாவது டரைமெஸ்டர், கர்ப்ப காலத்தின் கடைசி கட்டத்தைக் குறிக்கின்றன. இதன் முடிவானது “தாய்” என்ற புதிய பாத்திரத்திற்கு மாறுகிறது. இந்த ஒன்பது மாதங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னையும் குழந்தையையும் சிறப்பாக கவனித்துக்கொள்வதன் மூலம் இந்த பாத்திரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வது அவசியம். கர்ப்ப காலத்தில் சிறந்த கவனிப்பு மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான குழந்தை மற்றும் மகிழ்ச்சியான தாய்மையை உறுதி செய்கிறது.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.