• Home  /  
  • Learn  /  
  • குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஒரு இறுதி ஊட்டச்சத்து வழிகாட்டி
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஒரு இறுதி ஊட்டச்சத்து வழிகாட்டி

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஒரு இறுதி ஊட்டச்சத்து வழிகாட்டி

11 Dec 2019 | 1 min Read

Nivetha Muralidharan

Author | 1 Articles

100 மில்லியன் யூரோ ஆண்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு களை உருவாக்கி உலகின் மிக சிக்கலான உயிரியல் அமைப்பையும் விரிவான செய்தி நெட்வொர்க்கையும் உருவாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உங்கள் குழந்தை  கர்ப்ப காலத்தில் வளரும்போது நம்ப முடியாத விகிதத்தில் மூளை வளர்ச்சி அடைகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி அம்மாவிடமிருந்து ஊட்டச்சத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது நினைவாக இருக்கலாம் அல்லது கற்றுக்கொள்ளும் திறன் ஆக இருக்கலாம்.

 

 இங்கே  நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது  உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி  நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்தின் மூலம்  எவ்வாறு தாக்கத்தை உண்டு படுத்துகிறது என்பதை  பற்றி.

 

முதலாம் மூன்று மாத கட்டம்| மாதம் 1 & 2

தொழில்நுட்ப ரீதியாக உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி உங்கள் கர்ப்ப காலத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்குகிறது.   நான்காம் வார கருப்பையில் உங்கள் குழந்தையின் மூளை ஒரு சிறிய உப்பு தானியத்தை விட சிறிதாக இருக்கிறது. ஏழாம் வாரத்தில் அது  கால் அங்குலத்தை விட சிறிதாகவே உள்ளது. போலேட் நிறைந்த உணவுகள் உங்கள் குழந்தையின் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் மிகவும் பெரிய பங்கு வகிக்கிறது  குழந்தையின் நரம்பு குழாய், மூளை மற்றும் முதுகு எலும்புகள் உருவாக உதவுகிறது.

முதலாம் மூன்று மாத கட்டம்| மாதம் 3

 

 மூன்றாவது மாதத்துக்குள் அல்லது மூன்றாவது மாதத்தில் உங்கள் குழந்தையின் நரம்பு குழாய், மூளை,  முதுகெலும்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் பிற நரம்புத் திசுக்கள் நன்கு உருவாகிவிடுகிறது.  உங்கள் குழந்தையின் சரியான முதுகெலும்பு உருவாக்கம் மற்றும் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு கோலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

 

 இரண்டாம் மூன்று மாத கட்டம்| மாதம் 4

 

 இரண்டாவது மூன்று மாத  கட்டத்தில் உங்கள் குழந்தையின் மூளை  உதரவிதானம் மற்றும் மார்பு தசைகளின் நிலையான சுருக்கங்களை இயக்குகிறது. கர்ப்ப காலத்தில் நிதானமான மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் ஏனெனில் அது உங்கள் குழந்தையின் பிறவி  மூளையை செயலிழக்கும் அபாயத்தை அதிகரிக்கும். குழந்தையின் ஸ்பைனா பிஃபிடா பிற முதுகெலும்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின்  பிறப்பு குறைபாடுகளை தடுப்பதில் வைட்டமின் பி 12 மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது எனவே அதை உட்கொள்வதை  தொடரவும்.

இரண்டாம் மூன்று மாத கட்டம்| மாதம் 5

 

 இரண்டாவது மூன்றுமாத கட்டத்தின் இந்த மாதத்தில் ஒவ்வொரு நிமிடமும் 250000  நியூரான்கள் உங்கள் குழந்தையில் உருவாக்கப்படுகிறது. நியூரான்கள் உங்கள் வளரும் குழந்தையின் மூளையின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து அங்கு அவை ஒலிகளை விளக்குவது மற்றும் நினைவுகளை சேமிப்பது என்று குறிப்பிட்ட சில  வேலைகளை செய்கின்றன. DHA மூளை- செல் சவ்வுகளில் காணப்படுகிறது, இவை மூளையின் செயல்பாடுகளை நேர்மறையாக பாதிக்கின்றன. DHA வை உங்கள் தினசரி ஊட்டச்சத்து உட்கொள்ளலீன் ஒரு பகுதியாக எடுத்து கொள்ளுங்கள்.

இரண்டாம் மூன்று மாத கட்டம்| மாதம் 6

 

 இரண்டாவது மூன்றுமாத கட்டத்தின் இறுதியில் உங்கள் குழந்தையின் மூளை அமைப்பு கிட்டத்தட்ட  முதிர்ச்சி அடைகிறது மற்றும் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் குழந்தையின் மூளை இப்பொழுது ஒளிரும்  விழுங்குவது மற்றும் சுவைத்தல் போன்ற இயற்கை அனிச்சைகளை உருவாக்க முடியும். நீங்கள் இரும்பு உணவுகளை உட்கொள்ள அதிகரிக்க வேண்டும் ஏனெனில் அது குழந்தையின் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு உயிர்வாழும் ஆக்சிஜனை வழங்க உதவுகிறது.

 

 மூன்றாம்  மூன்று மாத கட்டம்| மாதம் 7

 

மூன்றாவது மூன்றுமாத ஆரம்பகட்டத்தில் உங்கள் குழந்தை விரிவான மூளை வளர்ச்சி அடைகிறது. குழந்தையின் மூளை இந்த மாதத்தில் இருந்து எடை அதிகரிக்க தொடங்குகிறது. இந்த மாதத்தில் மூளையின் எடை சுமார் 300 கிராம் இருக்கும். புரதங்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் குழந்தையின் மூளை குறிப்பாக மூச்சு விடவும் நடக்கவும் பேசவும் உதவும்  உறுப்புகளை மாற்றிக்கொள்ள புரதங்கள் அதிகமாக தேவைப்படும்.

 

 

மூன்றாம்  மூன்று மாத கட்டம்| மாதம் 8

 

எட்டாம் மாதத்திற்குள் குழந்தையின்  செவிவழி புறணி, காட்சி புறணி மற்றும் ப்ரோகாவின் பகுதி (பேச்சை  உருவாக்கும் தொடர்புகளை உடைய மூளையின் ஒரு பகுதி) செயல்பட தொடங்குகின்றன. இது உங்கள் வளரும் குழந்தையின் காட்சி,  ஒலிகளை விளக்குவதற்கும் மற்றும் மொழியை வேறுபடுத்துவதற்கான திறனை கொடுக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்வது நாள் குழந்தையின் மூளை திசுக்களை  சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. ஏனெனில் இவை சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்.

மூன்றாம்  மூன்று மாத கட்டம்| மாதம் 9

 

உங்கள் கர்ப்பத்தின் முடிவில் குழந்தையின் மூளை முற்றிலும் வளர்ச்சி அடைகிறது புலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் உருவாகும் நியூரான்கள் மற்றும் டிரான்ஸ் மீட்டர்கள்  வலையமைப்பை பரப்புவதற்கும் மூளை செல்களை வலிமை ஆக்குவதற்கும் ஆதரவு தேவைப்படுகிறது. உங்கள் உணவில் நீங்கள் உட்கொள்ளும் துத்தநாகம் உங்கள் குழந்தையில் ஏதாவது நடத்தை மற்றும் கற்றல் பிரச்சினைகளை ஏற்படுவதை தடுக்கும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர,  உங்கள் உணவில் நல்ல அளவு அயோடின் சேர்த்துக் கொள்வதை உறுதியாக கடைபிடித்து கொள்ளுங்கள் ஏனெனில் குழந்தையின் அறிவாற்றல் குறைபாடுகளை  ஏற்படுத்தக்கூடிய மற்றும் முன்கூட்டியே பிரசவம் அமைய கூடிய ஒரு குறைபாடை தடுக்க அயோடின் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான மூளை வளர்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கையை குறிப்பதாகும்.

 

மறுப்பு: நீங்கள் எடுத்துக் கொள்ள  திட்டமிட்டுள்ள ஊட்டச்சத்தின் அளவையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

 

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள்  ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன.

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.