• Home  /  
  • Learn  /  
  • கர்ப்ப ஊட்டச்சத்தின் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்
கர்ப்ப ஊட்டச்சத்தின் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

கர்ப்ப ஊட்டச்சத்தின் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

16 Dec 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை இப்பொழுதுதான் கண்டுபிடித்தீர்களா? ஹார்மோன் எழுச்சிகள், பசி, மசக்கை மற்றும் உடல் மாற்றங்கள் ஆகியவற்றின் சூழற்சிகளை நீங்கள் அனுபவிக்கும் போது, ​​உங்களைச் சுற்றியுள்ள நலம் விரும்பிகள் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாதவைகளின் அடிப்படையில் பல ஆலோசனைகளை தருவார்கள். அவற்றில் நிறைய என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை பற்றியதாக இருக்கும்.  இவற்றில் சில குறிப்புகள் உதவும், மற்றவை வெறும் கட்டுக்கதைகள்தான்.

கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து சம்பந்தமான 9 கட்டுக்கதைகளைப் பார்ப்போம்.

கட்டுக்கதை # 1: கர்ப்பிணித் தாய்மார்கள் மீன் மற்றும் மீன் எண்ணெயை உட்கொள்ளக்கூடாது.

உண்மை: இது உண்மை இல்லை. மீன் மற்றும் மட்டி ஆகியவை ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும்.  மீன் மற்றும் மட்டி ஆகியவற்றில் உயர்தர புரதம் மற்றும் DHA போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) குறைவாக உள்ளது. மேலும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.  இருப்பினும், சில மீன் மற்றும் மட்டி அதிக அளவு பாதரசத்தைக் கொண்டிருக்கின்றன, அவை கருவில் உள்ள குழந்தையின் வளர்ந்து வரும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். கிங், கானாங்கெளுத்தி போன்ற பாதரசத்தில் அதிகமாக இருக்கும் மீன்களின் வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் பாதரச வெளிப்பாட்டைக் குறைக்கிறது. எனவே, பாதரசத்தின் தாக்கத்தில் குறைந்த அளவு மீன்கள், எடுத்துக்காட்டாக, இறால், பதிவு செய்யப்பட்ட லைட் டுனா மற்றும் சால்மன். போன்ற மீன்கள் ஆரோக்கிய நன்மைகளைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

 

கட்டுக்கதை # 2: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் இறைச்சி சாப்பிட வேண்டும்.

உண்மை: ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கும் கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்து தேவைக்கும் போதுமான சைவ விருப்பங்கள் உள்ளன.  சைவ உணவு உண்பவர்கள் கர்ப்ப காலத்தில் பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் மதர்ஸ் ஹார்லிக்ஸ் மற்றும் மகப்பேறுக்கு முற்பட்ட வைட்டமின்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து புரதம், வைட்டமின் மற்றும் தாது தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

 

கட்டுக்கதை # 3: பப்பாளி சாப்பிடுவது கருக்கலைப்பை ஏற்படுத்துகிறது.

உண்மை: பழுக்காத பப்பாளியில் கருக்கலைப்பு அல்லது முன்கூட்டியே பிரசவ வலியை தூண்டும் சைமோபபைன் (பப்பாளி பழத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நொதி) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  ஆனால் பழுத்த பப்பாளி பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. மேலும் பழுத்த பப்பாளி வைட்டமின் ஏ வின் நல்ல மூலமாகும். எனவே, மிதமான அளவில் பப்பாளி பழம் உட்கொண்டால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நன்மை பயக்கும்.

கட்டுக்கதை # 4: மசக்கை இருந்தால் என் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது.

உண்மை: உண்மை என்னவென்றால், உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக எழும் கர்ப்பத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மசக்கை. சிலருக்கு வாசனை அல்லது உணவைப் பற்றிய சிந்தனை கூட உங்களை கவலையடையச் செய்யும் ஒரு நிலை இருக்கும்.  நீரிழப்பு, கடுமையான எடை இழப்பு அல்லது கடுமையான மசக்கை போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்படாவிட்டால், கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன், அறிவுறுத்தப்பட்டபடி கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

கட்டுக்கதை # 5: காபி குடிப்பது கர்ப்ப காலத்தை மோசமாக பாதிக்கிறது.

உண்மை: சிறிய அளவில் காபி அருந்துவது குழந்தையை பாதிக்காது, ஆனால் ஒரு நாளைக்கு மூன்று கோப்பைக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்கவும்.  மிக அதிக அளவிலான காஃபின், குழந்தைக்கு பிறப்பு எடை குறைவை ஏற்படுத்தலாம்.

 

கட்டுக்கதை # 6: வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் குறைபாடுள்ள பெண்கள் மட்டுமே மகப்பேறு காலத்தில் சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உண்மை: இது உண்மை இல்லை. உங்கள் உடல் கர்ப்பத்திற்காக ஆயத்தமாக இருந்தாலும், கர்ப்பம் முழுவதும் ஊட்டச்சத்து தேவை அதிகரித்து வருகிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், உங்களுக்கு இன்னும் மகப்பேறு ரீதியான வைட்டமின்கள் தேவைப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. மேலும், ஆரோக்கியமான மகப்பேறை தொடர இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அதாவது ஃபோலிக் அமிலம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து.

 

 

கட்டுக்கதை # 7.  சூடான மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவது கருக்கலைப்பை ஏற்படுத்தும்.

உண்மை: மிதமாக சாப்பிட்டால், அது குழந்தைக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது.  இருப்பினும், அதிக நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்க கர்ப்ப காலத்தில் மிகவும் காரமான உணவை  தவிர்ப்பது நல்லது.

 

கட்டுக்கதை # 8: கர்ப்பிணித் தாய்மார்கள் ஊறுகாய் மற்றும் ஐஸ்கிரீமுக்காக ஏங்குகிறார்கள்.

உண்மை: இது போன்ற குறிப்பிட்ட உணவு வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படலாம். ஆனால் இது உலகளாவியது அல்ல.  விஷயம் என்னவென்றால், ஊறுகாய்களுக்காக ஏங்குகிற தாய்மார்கள் உண்மையில் உப்புக்காக ஏங்குகிறார்கள்.  கர்ப்ப காலத்தில் கூடுதல் தாதுக்கள் முக்கியம். இதேபோல், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளுக்காக ஏங்குகிற கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுக்கு அது திருப்தி தருகிறது என்பதற்காக சாப்பிடுகிறார்கள், இனிப்பு உணவுகளில் காணப்படும் சர்க்கரை உடலில் செரோடோனின் உற்பத்தி செய்ய காரணமாகிறது, இது தாயை நன்றாக உணர வைக்கிறது.

 

கட்டுக்கதை # 9:  நீங்கள் ஈருயிர் எனவே  இப்போது அதிகமாக சாப்பிட வேண்டும்.

உண்மை: கர்ப்பமாக இருக்கும் வரை வளர்ந்து வரும் குழந்தைக்கு உணவளிக்க உங்களுக்கு கூடுதல் கலோரிகள் தேவையில்லை. முதல் மூன்று மாதங்களுக்கு, உங்களுக்கு கூடுதல் கலோரிகள் தேவையில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டரில் கலோரி அதிகரிப்பு தேவை.  இரண்டாவது ட்ரைமெஸ்டரில் ஒரு நாளைக்கு சுமார் 340 கலோரிகளும், மூன்றாவது ட்ரைமெஸ்டரில் ஒரு நாளைக்கு சுமார் 500 கூடுதல் கலோரிகளும் ஆரோக்கியமான குழந்தை மற்றும் தாய்க்கு போதுமானது. எனவே, நீங்கள் அதிகமாக சாப்பிடுவதோ ஆரோக்கியமற்றதாக சாப்பிடுவதோ அதிக எடை கொண்ட குழந்தை பிறக்க வழிவகுக்கும்.

பெரும்பாலான பெண்களுக்கு, கர்ப்ப காலம் என்பது ஒரு ஊட்டச்சத்து விழிப்புணர்ச்சி காலம் போல் தோன்றும்.  உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் ஊட்டச்சத்து குறித்த பல உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளுடன் உங்களை குழப்புவார்கள்.  இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான கர்ப்ப காலத்தை தொடர உங்கள் மருத்துவரின் ஆலோசனையையும், உங்கள் உடல்நல உள்ளுணர்வுகளையும் பின்பற்றுவதே சிறந்த நடைமுறை.

 

மறுப்பு: நீங்கள் எடுத்துக் கொள்ள  திட்டமிட்டுள்ள ஊட்டச்சத்தின் அளவையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள்  ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you