• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பகால வாழ்க்கை முறையின் கட்டுக்கதைகள்
கர்ப்பகால வாழ்க்கை முறையின் கட்டுக்கதைகள்

கர்ப்பகால வாழ்க்கை முறையின் கட்டுக்கதைகள்

20 Dec 2019 | 1 min Read

P.Tamizh Muhil

Author | 8 Articles

கரீனா கபூர் கான் கர்ப்பவதியாக பெருமையுடன் அலங்கார வளைவு மேடையில் நடைபயின்றார். நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடலினை உறுதி செய்யும் பயிற்சிகள், அவரது கர்ப்பத்தினால் ஒருபோதும் தடைப்பட்டதில்லை. பெருநிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், தங்களது கர்ப்ப காலத்திலும், அவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களையும் பொறுத்துக் கொண்டு ஆண்களுக்கு இணையாக பணியாற்றுகிறார்கள். செரீனா வில்லியம்ஸ் கருவில் குழந்தையை சுமந்தபடி விம்பிள்டன் போட்டியில் பங்கேற்று பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். ஒரு கர்ப்பிணிப் பெண் மெதுவாக, பொறுமையாகத் தான் காரியங்களை மேற்கொள்ள வேண்டும், அல்லது, ஓய்வாக மட்டுமே இருக்க வேண்டும்என்ற நம்பிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட அல்லது நடைமுறையில் இருந்த காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. கர்ப்ப காலத்தில் இதெல்லாம் செய்யக் கூடாது என்ற வரைமுறை எல்லாம் இல்லை.எது செய்தாலும் மிதமான அளவில், மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம்என்பதே நினைவில் கொள்ள வேண்டியது.

கட்டுக்கதை 1: கர்ப்பிணிப் பெண்கள் இனிப்புப் பண்டங்கள் சாப்பிடக் கூடாது

உண்மை: பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படலாம். சரிவிகித உணவினை உட்கொண்டு, இனிப்புகள் சாப்பிடுவதால் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை எரிக்க, சரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், தாராளமாக இனிப்புகளை சாப்பிடலாம். நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், அளவிற்கு அதிகமாக இல்லாமல், மிதமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே.

கட்டுக்கதை 2: உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர் எனில், கர்ப்ப காலத்தில் புதிதாக உடற்பயிற்சி செய்ய துவங்கக் கூடாது.

 உண்மை : இது பலரும் நன்றாக அறிந்த கர்ப்ப கால கட்டுக்கதை. உண்மையில், கர்ப்பத்திற்கு முன் உடற்பயிற்சி செய்யாதவர்களும், செய்யத் துவங்க கர்ப்ப காலம் உகந்த நேரம் ஆகும். நாளொன்றுக்கு தோராயமாக 30 நிமிடம் வீதம், வாரத்திற்கு 5 நாட்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது, கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மிதமான அளவில் நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது யோகாசனம் ஆகியவை கர்ப்ப காலத்தில் செய்ய பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சிகள் ஆகும்.

கட்டுக்கதை 3: கர்ப்ப காலத்தில் கணினி உபயோகித்தல் கூடாது.

உண்மை : பல கர்ப்பிணித் தாய்மார்கள் கணினித் திரைகளில் இருந்து வெளிப்படும்  குறைந்த அளவிலான மின்காந்த புலனினால் (அயனியாக்கம் இல்லாத கதிர்வீச்சு) , கருச்சிதைவு அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்பது குறித்து கவலை கொள்கின்றனர். உண்மையில், அறிவியல் ரீதியாக, இக்கருத்திற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது, மனதிற்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம். எனினும், அதிக நேரம் தொடர்ந்து, இடைவெளி இல்லாது கணினியின் முன் அமர்ந்திருப்பதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில், இதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி இன்னும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

 

 

கட்டுக்கதை 4: கர்ப்பகாலத்தில் தாய் – சேய் இருவருக்கான உணவினை சாப்பிட வேண்டும்.

உண்மை: “இருவருக்காக சாப்பிடுதல் ” என்பது, அதிகப்படியான எடை கூடுவதற்கு வழிவகுக்கலாம். நமக்கு தேவையாக இருக்கும் கலோரிகளில், மிகவும் குறைவான கலோரிகளே, கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படும். கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடை கூடுவது, தாயின் உடல்நலனுக்கு ஏற்றதல்ல. அதே போல், குழந்தையின் நலனுக்கும் ஆபத்தாய் முடியும். எனினும்,  தேவையான எடையுடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்க, நல்ல சமச்சீரான, சத்தான உணவு உண்பதுடன், 100%  தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்ற பிற்சேர்ப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.

கட்டுக்கதை 5: கர்ப்பிணிப் பெண்கள் திகில் படங்கள் பார்க்கக் கூடாது.

உண்மை: கர்ப்ப காலத்தில் திகில் படங்களை பார்க்கக் கூடாது என்று பல கலாச்சாரங்களிலும் தடை விதிக்கப்படுகிறது. அவற்றால் குழந்தைக்கு தீவினைகள் ஏற்படும் என்று அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால், பயத்தினால் அட்ரினலின் சுரப்பு அதிகமாகி, இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகப்படியான சப்தம் பொதுவாக கருவிலிருக்கும் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காது, ஏனெனில், குழந்தை பனிக்குட நீரால் சூழப்பட்டு, அவர்களை சென்று சேரும் சப்தம் தடுக்கப்படுகிறது. ஆனால், அதுபோன்ற படங்களை பார்ப்பதால் அசௌகரியமாக உணர்ந்தால், பார்ப்பதை தவிர்த்தல் நல்லது.

கட்டுக்கதை 6: கர்ப்ப காலத்தில் பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

உண்மை: மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில் முதல் மும்மாத காலத்தில் பயணிப்பதை தவிர்த்தல் நலம்.  ஏனெனில், மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில், வாகனங்களின் குலுங்கல் மற்றும் அதிர்வுடன் செல்கையில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லாத பட்சத்தில், இரண்டாவது மும்மாதங்களில் இருந்து 36 வார கர்ப்பம் வரை பயணம் செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.

கட்டுக்கதை 7: கர்ப்பிணிகள் மீன்  மற்றும் மீன் எண்ணெய் சாப்பிடக் கூடாது.

உண்மை: நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், இந்த கட்டுக்கதையை நம்பக் கூடாது. உண்மை என்னவெனில், மீன்களும், ஓடுகளை உடைய கடல்வாழ் மீன்களும், ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கங்களாகும். மீன்களும், ஓடுடைய மீன்களும் அதிக அளவு புரதமும், மிக அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான DHA,  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியவை, குறைவான அளவு பூரிதக் கொழுப்பு கொண்டவை. எனினும் வஞ்சரம்/கானாங்கெளுத்தி போன்ற சில வகை மீன்களும், சிப்பி வகை மீன்களும் அதிக அளவிலான பாதரசம் கொண்டவை. இது கருவில் இருக்கும் குழந்தையின், உருவாகிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். DHA  மற்றும் 25 அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கொண்ட ஹார்லிக்ஸ், மீன் உணவு சாப்பிடாத பெண்களுக்கு, நல்லதோர் பிற்சேர்ப்பு உணவாகும்.

கட்டுக்கதை 8:  கர்ப்ப காலத்தில் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

உண்மை: இது உண்மையல்ல. எவ்விதமான சிக்கல்களும் இல்லாத பட்சத்தில், ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடுவது பெரிதும் பரிந்துரை செய்யப்படுகிறது. எனினும், அதிர்வுகள் தரக்கூடிய மற்றும் கீழே விழ வாய்ப்புள்ள விளையாட்டுகளில் ஈடுபடுதல் கூடாது. கர்ப்பிணிகள் தங்களுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாததை உறுதி செய்யும் வண்ணம், மிதமான அளவில் விளையாடுதல், அதிக சோர்வுறாமல், சோர்வு நிலையறிந்து ஓய்வெடுத்தல், தேவையான அளவு தண்ணீர் அருந்தி,  நல்ல நீரேற்றத்துடன் இருத்தல், போன்றவற்றை கடைப்பிடித்தல் அவசியம்.

கட்டுக்கதை 9: கர்ப்ப காலத்தில் பாலியல் உறவு குழந்தையை பாதிக்கலாம்

உண்மை: கருவில் இருக்கும் குழந்தைகள், பனிக்குடத்தில் பத்திரமாக, பாதுகாக்கப் படுகிறார்கள். உங்களது துணைவரால், குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. ஏனெனில், கருப்பையின் வாயானது மூடப்பட்ட நிலையில் இருக்கும். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் தடுக்கப்படுகிறது. எனினும், குறிப்பாக, முதல் மற்றும் மூன்றாம் மும்மாத காலங்களில் பாலியல் உறவு குறித்து மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நலம்.

 

 

கர்ப்பகாலம்,  வாழ்க்கைப் பயணத்திலோர் இனிமையான அனுபவம். குழந்தை பிறப்பிற்குப் பின் வாழ்வில் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் முடிந்தவரை இனிமையான நினைவுகள், நிகழ்வுகளை உருவாக்கிக் கொள்ளலாம். கர்ப்பத்தைக் காரணம் காட்டி, மகிழ்வான வாழ்வை விட்டு விலகிடுதல் கூடாது.

மறுப்பு: நீங்கள் எடுத்துக் கொள்ள  திட்டமிட்டுள்ள ஊட்டச்சத்தின் அளவையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள்  ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you