கிறிஸ்துமஸ் வரலாறு அறிவோமே - கிறிஸ்துவ தோழி நம்முடன் பகிர்ந்தது!

cover-image
கிறிஸ்துமஸ் வரலாறு அறிவோமே - கிறிஸ்துவ தோழி நம்முடன் பகிர்ந்தது!

 

மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. அப்படிப்பட்ட இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் அவதரித்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

 

இயேசுவின் பிறப்பு:

நாசரேத்தின் கன்னி மரியாளுக்கும், யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல், மரியாளின் முன் தோன்றினார். ‘அருள் நிறைந்த மரியாளே வாழ்க, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்…’ என்றார்.

 

இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு கலங்கி நின்ற மரியாளை, ‘பயப்படாதே மரியாளே, நீர் உன்னதமானவர். ஆண்டவரின் பூரண அன்பையும் அருளையும் நீர் பெற்றுள்ளீர். திருமணத்துக்கு முன்பு ஆண்டவரின் கிருபையால் நீர் ஒரு அதிசயக் குழந்தையைப் பெற்றெடுப்பீர். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவரே ஆண்டவரின் குழந்தை. இந்த உலகின் ரட்சகர் அவரே. இந்த உலகை ஆளப்போகும் இறைமகன் அவர். அவரது ஆட்சிக்கு மட்டும் முடிவே இருக்காது’ என்றார்.

Image Source: pinterest 

வானதூதரை நோக்கி, ‘இது எப்படி ‌நிகழு‌ம்? நா‌ன் க‌ன்‌னி ஆ‌யி‌ற்றே' என்றா‌ர். ‘கலங்காதே மரியாளே, ஆண்டவரின் வல்லமை உம்மீது நிழலாய் இறங்கும். உமக்குப் பிறக்கும் குழந்தை தூய்மையானவர், ஆண்டவரின் மகன்’ என்றார் கப்ரியேல். பின்னர் , ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் வாக்குப்படியே எல்லாம் நிகழட்டும்’ என்றார் மரியாள். உடனே அங்கிருந்து மறைந்து சென்றார் வானதூதர்.

 

திருமணத்துக்கு மு‌ன் ம‌ரியா கருவு‌ற்‌றிரு‌ப்பது யோசே‌ப்புக்குத் தெரிய வந்தது. யோசேப்பு நே‌ர்மையாளர், ‌நீ‌திமான். எனவே ‌ம‌ரியாவை இக‌ழ்‌ச்‌சிபடு‌த்த ‌விரு‌ம்பாம‌ல், அமைதியாய் ‌இந்த ஒப்பந்ததிலிருந்து வில‌கிட ‌நினை‌த்தா‌ர்.

Image Source: pinterest 

இதுபற்றி அவ‌ர் ‌த‌னிமை‌யி‌ல் ‌சி‌ந்‌தி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கை‌யி‌ல், வானதூத‌ர் கப்ரியேல் யோசே‌ப்‌பி‌ன் கன‌வி‌ல் தோ‌ன்‌றினார். 'தா‌வீ‌தி‌ன் மகனே, ம‌ரியாவை ஏற்று‌க் கொ‌ள்ள அஞ்‌சவே‌ண்டா‌ம். அவ‌ள் கருவு‌ற்‌றிரு‌ப்பது தூய ஆ‌வியா‌ல்தா‌ன், ஏனெ‌னி‌‌ல் அவ‌ர் த‌ம் ம‌க்களை பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்டெடுக்கவே இப்படிச் செய்திருக்கிறார்' என்றா‌ர். யோசே‌ப்பு தூ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌வி‌ழி‌த்தெழு‌ந்து தூத‌ர் ப‌ணி‌த்தவாறே ம‌ரியாவை மனை‌வியாக ஏற்று‌க் கொ‌ண்டா‌ர். 

 

Image Source: pinterest 

பின்னொரு நாள், மன்னர் அகஸ்டஸ் ‌சீச‌ர், ம‌க்க‌ள் தொகையைக் கண‌க்‌கிட க‌ட்டளை‌யிட்டதும், த‌ம் பெயரை ப‌திவு செ‌ய்ய யோசே‌ப்பு, ம‌ரியாளோடு யூதேயா‌விலு‌ள்ள பெ‌த்லகேம் என்ற தா‌வீ‌தி‌ன் ஊரு‌க்கு‌ச் செ‌ன்றா‌ர். அந்நேர‌ம் ம‌ரியாவு‌க்கு பேறுகால‌ம் வர, விடு‌தி‌யி‌‌‌‌ல் இடம்‌‌ கிடை‌க்கவில்லை. ஒரு மா‌ட்டு‌த் தொழுவ‌த்‌தி‌ல் உலகின் பாவங்களைப் போக்க இறைவன் அருளிய தெ‌ய்வமக‌னைப் பெற்றெடுத்தார்.

Image Source: archives

மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை:

இயேசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது.

 

புறப்படச் சொன்ன குழந்தை:

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் பெத்லேகேம் எனும் சிறிய பட்டணம் திடீரென அதிக சிறப்புப் பெற்றது. அன்றைய சூழலில் அனேகர் பெத்லேகேம் போனார்கள். இப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெத்லேகேம் சென்ற யாருமே அங்கு தங்கி விடவில்லை. அங்கிருந்து திரும்பிச்சென்றார்கள். கிறிஸ்மஸ் என்பது பெத்லேகேம் போவதில் அல்ல, பெத்லேகேமிலிருந்து புறப்பட்டுப் போவதில் தான் முழுமை பெறுகிறது.

 

ஏன் டிசம்பர் 25?

ரோமாபுரியின் பேரரசன் அவ்ரேலியஸ் அன்றைய கிரேக்க மதத்தின் கடவுளர்களில் ஒருவரான சூரியக் கடவுளுக்கு கி.பி.274- ம் ஆண்டு தனது ஆட்சிக் குடையின் கீழ் இருந்த அனைத்து தேசங்களிலும் ஒரு விழா எடுக்க ஆணையிட்டான். அந்த விழாவை டிசம்பர் 25-ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளையிட்டான்.

Image Source: aorakishoppy

 

பரலோகத் தந்தையைத் தவிர வேறு கடவுளர்களை வழிபட விரும்பாத கிறிஸ்தவர்களை ரோமாபுரியின் கிரேக்க விழா மோகத்திலிருந்து, காக்கும் முயற்சியாகப் பின்னாளில் தாய் திருச்சபையாக மலர்ந்த ரோம் தலைமைப் பீடமானது கிறிஸ்து பிறப்பு விழாவையும் இதே நாளில் கொண்டாட ஆணை பிறப்பித்தது. இது சமய வரலாறு.

 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!!

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!