பள்ளி செல்லும் பிள்ளையை தயார்படுத்துவது எவ்வாறு?

cover-image
பள்ளி செல்லும் பிள்ளையை தயார்படுத்துவது எவ்வாறு?

உங்கள் பிள்ளை வளர்ந்து 3 வயதைக் கடக்கும் தருணத்தில் அவர்களை விளையாட்டு பள்ளியிலோ (அ) முன் பாலர் பள்ளியிலோ சேர்ப்பதாக இருந்தால் மனதளவிலும் உடலளவிலுமான பயிற்சிகளை வீட்டிலேயே தொடங்க வேண்டும்.   

 

மனதளவில் தயார்படுத்துதல்: 

பள்ளி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே பள்ளியை  பற்றிய உங்களின் உரையாடலை தொடங்க வேண்டும். பள்ளியைப் பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும் பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்புகிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே...  என்கிற ரீதியில் பேச வேண்டும். 

 

 

 

அம்மா சொல்லும் எந்த ஒரு விஷயமும், உண்மையாகத்தான் இருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள். அத்துடன் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கும். அவர்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துச்சொல்லுங்கள்.

 

முந்தைய நாள் ஆயத்தம்: 

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். ஒன்று, இரண்டு  வாரங்கள் அவர்கள் எழுந்திருப்பதற்கும், பல்துலக்குவதற்கும் சிரமப்படுவார்கள். பொறுமையுடன் அவர்களை கையாள்வதன் மூலம் காலை நேர தேவையற்ற கோவத்தை தவிர்க்கலாம். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால், குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

 

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள் ஆனால் பை பை சொன்ன பின், குழந்தையிடமே நின்று கொண்டு இருக்காமல் பள்ளியை விட்டு வந்து விடுங்கள் அப்போது தான், குழந்தை புது சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்ளும் அதனால், சில விஷயங்களை அவர்களே, கையாள தேவையான இடைவெளியை, சிறிது கொடுத்து தான் பார்ப்போம்.

 

பள்ளியிலிருந்து வரும் குழந்தையை வரவேற்க தயாராகுங்கள்:

குழந்தைகள் புது சூழ்நிலையில் பெற்றோரை பிரிந்து சில மணிநேரம் இருப்பதால், பள்ளி விடும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாகவே சென்று அவர்கள் வெளியில் வரும்போது வரவேற்க தயாராகுங்கள். ஏனெனில் அழைத்து செல்ல யாருமில்லையெனில் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைவதுடன் பள்ளி நேரத்தை ஒரு பிரிவினை நேரமாக உணர வாய்ப்புகள் அதிகம். பள்ளி சென்றடைய தாமதமாகும் எனில் ஆசிரியர்களிடம் முன்னதாக அறிவிப்பது நல்லது.  

 

உணவு இடைவேளையில் உண்ண டிபன்பாக்ஸில் நொறுக்கு தீனிகள் தருவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உணவுகளை அளிக்கலாம். ஆரம்பத்தில் சாப்பிட மறுக்கும் குழந்தை நாள் செல்ல செல்ல சாப்பிட பழகும். பள்ளியிலிருந்து வந்ததும் பிள்ளையின் பையை ஒருமுறை சரிபார்ப்பது நல்லது. ஆசிரியர் ஏதேனும் குறிப்புகள் அனுப்பியிருக்கிறாரா (அ) மற்ற பிள்ளைகளின் பொருள் தவறுதலாக தங்கள் பிள்ளையின் பையில் வந்திருந்தால் திருப்பி அளிக்க வசதியாக இருக்கும்.

 

ஆதாரம்: redapplereading

மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகவும், மரியாதையுடன் பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெரும்பாலும் பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சு முறைகளையே பள்ளியில் எதிரொலிப்பார்கள். அதனால் அவர்களின் முன் நாகரீகமான சொற்களைப் பயன்படுத்தி பேசுவது நல்லது. சில பிள்ளைகள் முன்கோபியாகவும் அடுத்த பிள்ளைகளை கை ஓங்குபவர்களாகவும் இருப்பார்கள். இது தவறு என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களின் நட்பை இழக்கக்கூடும், ஆசிரியரால் தண்டிக்கப்படுவார்  

 

குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் அவர்களுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது, இன்றைய நாள் எப்படி இருந்தது என்றும் ஒரு ஆரோக்கியமான உரையாடலை பழக்கப்படுத்துங்கள். அவர்களின் நண்பர்களின் பெயர்களை கேட்டறியுங்கள். பள்ளியில் என்ன சொல்லிக்கொடுத்தார்கள் என்று கேட்டறிந்து வீட்டில் விளையாட்டினூடே அதனை பிள்ளைக்கு நியாபகப்படுத்தி பயிற்சி அளிக்கலாம். உதாரணமாக காய்கறிகள்/பழங்களின் பெயர்களை அன்றைய தினம் பள்ளியில் கற்பிக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் இருக்கும் அந்த குறிப்பிட்ட காய்கறி/பழ வகைகளை பிள்ளைகளுக்கு காண்பித்து தொட்டு உணர செய்யலாம். இதன் மூலம் அவர்களின் புலனுணர்வு மேம்பாடு அதிகரிக்கும். நிறங்களை சொல்லி கொடுக்கலாம். நர்சரி ரைம்ஸ்/குழந்தை பாடல்களை அவர்களுடன் சேர்ந்து பாடலாம்.  

 

பேனர் படம்: monkeybizness

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

#goingtoschool
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!