Personalizing BabyChakra just for you!
This may take a moment!

குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?

cover-image
குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?

சிறியவர் முதல் பெறியவர் வரை உடல் நல பாதிப்பு என்பது இயற்கையாகவே ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள் நுழைவதனால் தான் உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. இயற்கையாகவே குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் அதை பெற்றோர்கள் தான் எதிர்க்கொள்ள வேண்டும். இது பெற்றோர்களின் கடமையாகும். மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

குழந்தை நல மருத்துவர், குழந்தை பிறந்தவுடனே எப்போதெல்லாம் தடுப்பூசி போடவேண்டும் என்ற பட்டியலை தந்து விடுவார். எனவே பட்டியலிடப்பட்ட நாட்களில் தன் குழந்தையின் நலன் கருதி குறிப்பிட்ட காலத்தில் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.

உடலில் நுழையும் நோய் கிருமிகளை எதிர்க்க நம் உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் மருந்தின் அளவானது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாறுபடும். இந்த எதிர்ப்பு மருந்தானது உடலுக்குள் நுழையும் போது உடலில் நுழைந்த கிருமிகளை அழித்து உடல் நலம் சரியாகிவிடுகிறது.

குழந்தைகளுக்கான எதிர்ப்பு மருந்து உடலுக்குள் சுரப்பதற்கு பதிலாக தடுப்பூசி மூலம் குழந்தைகளுக்கு உடலுக்குள் செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு செலுத்தப்படும் மருந்தின் அளவு, செலுத்தப்படும் மருந்தின் தன்மையை பொருத்தது, சில தடுப்பூசி மருந்துகள் குழந்தையின் ஆயுள் காலம் முழுவதும் செயல்பட்டு கொண்டு இருக்கும்.

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் எல்லாம் சமமானது அல்ல இதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சில தடுப்பூசி மருந்துகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.

உயிர் கொல்லி நோயை எதிர்க்க போடப்படும் தடுப்பூசிகள் முக்கியமானவை. அதுவும் போடப்படும் தடுப்பூசிகள் ஏதேனும் ஒரு நோயை மட்டும் எதிர்க்கிறதா அல்லது தொடர்ந்து வரும் நோய்களை எதிர்க்கிறதா என்று தடுப்பூசியின் தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசியில் பூஸ்டர் டோஸின் முக்கியத்துவம்:
பூஸ்டர் டோஸ் என்பது அடிப்படையில் ஒரு கூடுதல் தடுப்பூசி ஆகும், இது ஆரம்ப தடுப்பூசிக்குப் பிறகு குழந்தைக்கு வழங்கப்பட வேண்டும். உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு சில நோய்த்தடுப்பு மருந்துகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கொடுக்கப்பட வேண்டும். முதல் டோஸில் நிர்வகிக்கப்படும் ஆன்டிபாடிகளால் சில நோய்களை வெறுமனே எதிர்கொள்ள முடியாது என்பதே இதற்குக் காரணம். ஒரு பூஸ்டர் டோஸ் இல்லாமல், சில நோய்கள் மீண்டும் வரக்கூடும்!

எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை வழங்க DTaP / HiB / IPV போன்றவை 3 முறை கொடுக்க வேண்டும். நீண்ட கால பாதுகாப்பைப் பராமரிப்பதற்காக, பிற்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டர் அளவுகள் வழங்கப்படுகின்றன.

வாய்வழி போலியோ போன்ற சில தடுப்பூசிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க பல அளவுகள் கொடுக்கப்பட வேண்டும்:
வாய்வழி போலியோ சொட்டுமருந்து
ஹெபட்டைடிஸ் ஏ & பி
ரேபிஸ்
டைபாயிட்
எம்எம்ஆர்
சின்னம்மை
உங்கள் குழந்தையின் மருத்துவர் பரிந்துரைத்தபடி பூஸ்டர் அளவுகளின் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்றுவது முக்கியம்.

தடுப்பூசிக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்:
சிலவகை தடுப்பூசிகளுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மருத்துவர் பரிந்துரையின் படி மருந்து அளிக்கலாம்.
ஊசி போட்ட உடல்பகுதி வீங்கி கல் போல ஆகியிருந்தால் மருத்துவர் பரிந்துரைத்தால் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
சில பிள்ளைகள் ஊசி போட்ட 2-4 மணி நேரத்திற்கு பிறகு தொடர்ந்து அழுக வாய்ப்புள்ளது.
நன்கு உணவளித்து தூங்க வைப்பது நல்லது.

மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்களுக்கு நோயற்ற வாழ்வை அளிக்கலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!

பேனர் படம்:  npr.org

 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#vaccination