குழந்தைகளை நற்பண்புள்ளவர்களாக வளர்க்க எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்?

cover-image
குழந்தைகளை நற்பண்புள்ளவர்களாக வளர்க்க எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்?

குழந்தை வளர்ப்பில் ஆரம்பநிலை என்பது அன்புடன் கையாள வேண்டியது. குழந்தை ஒரு வயதை கடந்தவுடன் சிறிது கண்டிப்புடன் அவர்களை நல்ல பழக்கவழக்கங்கள், பண்புகள், நாகரீகம், பெரியவர்களிடம் மரியாதை முதலியவற்றை சொல்லி கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். 

 

“விளையும் பயிர் முளையிலே தெரியும்” - என்ற பழமொழிக்கு இணங்க சிறுவயதில் போடப்படும் அஸ்திவாரத்தைக் கொண்டே அவர்களின் எதிர்காலம் என்னும் ஆதாரம் வடிவமைக்கப்படுகிறது.

 

தற்போதைய தலைமுறை  பிள்ளைகள் தங்களை சுற்றியுள்ள நபர்கள் அல்லது மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் அதிக கோபமாக, எதிர்ப்பவர்களாக, மரியாதையற்றவர்களாக, உணர்வற்றவர்களாக இருப்பது கவனிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நம்மைவிட அதிக திடமாகவும் இலக்கை அடைவதில் உறுதியாகவும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்கக் கூடாது. இருந்தாலும், வளரும் குழந்தைகளில் அடிப்படை நடத்தை மற்றும் அதன் முக்கியத்துவத்தை புரிய வைத்து உணர்வற்ற பிள்ளையை வளர்ப்பதை தவிர்ப்பது எப்படி என்ற கேள்வி நம்முள் எழுகிறது. குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் நடத்தை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல நடத்தையை பார்க்காமலேயே அதை கற்றுக்கொள்ள வேண்டியதே பிள்ளைகளின் மிகப் பெரிய கஷ்டம். வளரும் பிள்ளைகளில் நல்ல நடத்தையை விதைப்பது எப்படி? பிள்ளைகளை வளர்க்கையில் பெற்றோர் நினைவில் வைக்க வேண்டிய சில டிப்ஸ் இதோ:

 

  • நல்ல முன்மாதிரியாக இருங்கள். பெற்றோரையும் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் பார்த்தே பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். ஆகவே, குழந்தைகள் முன்னிலையில் பெற்றோரின் பேச்சும் நடத்தையும் எப்படி இருக்கின்றன என்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • குழந்தை தவறாக நடந்துகொள்ளும்போது அதிகமாக கோபம் கொள்ளாதீர்கள். குழந்தையிடம் அமைதியாக பேசி அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். அநேக சமயங்களில் மற்றவர்கள் கவனத்தை கவர பிள்ளைகள் அப்படி செய்வார்கள்.
  • குழந்தையோடு விளையாடுபவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஆரம்ப குழந்தை பருவத்தில் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியும் கிரகிக்கும் சக்தியும் இருக்கும்.
  • குழந்தை மரியாதையாக பேசும்போது அவர்களை கவனித்து பாராட்டுங்கள்.
  • கெட்ட வார்த்தைகள் பேசினால் அதற்கான காரணத்தை மெதுவாக கண்டுபிடியுங்கள். பெரும்பாலும் மொழியை கற்கையில் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பார்கள். வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைக்கூட அவர்கள் வெளிப்படுத்தலாம்.
  • உங்கள் குழந்தையிடம் பேசி, வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது பற்றி விவரியுங்கள். உதாரணத்திற்கு, “மற்றவர்களை கோபப்படுத்துகிற வார்த்தைகளை பேசக்கூடாது” என்று சொல்லலாம்.
  • குழந்தை எதை பார்க்கிறான், கேட்கிறான், எதோடு விளையாடுகிறான் என்பதை கவனியுங்கள். டிவி அல்லது மற்ற கருவிகளை பெரியவர்கள் கவனிப்பில் உபயோகிக்க வேண்டும்.


மற்றவர்களின் உணர்ச்சிகளை அறிந்தே நன்னடத்தை வடிவமைக்கப்படுகிறது. குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முதலிடம் வீடுதான் என்பதால் அவர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்தான். இதை நினைவில் வையுங்கள், பிள்ளைகள் பெற்றோரை இயல்பாகவே பின்பற்றுவார்கள். வளர்ந்தபின் ஒருவரை திருத்துவதைவிட நல்ல பிள்ளையை உருவாக்குவது எளிது. ஆகவே, வளரும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள்.

பேனர் படம்: withairbnb

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!