3 Feb 2020 | 1 min Read
P.Tamizh Muhil
Author | 8 Articles
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், நிறைவுறா நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களின் வகையை சார்ந்தது. இந்த ஊட்டப்பொருள், உடல் நலனுக்கும், வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானவை. துரதிர்ஷ்டவசமாக, இந்த கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் உற்பத்தி ஆவதில்லை அல்லது ஒருங்கிணைக்கப் படவில்லை. எனவே நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாகவோ, அல்லது, ஊட்டப்பொருட்களின் வாயிலாகவோ, எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. மிகவும் பயன்தரக் கூடிய இரண்டு ஒமேகா – 3 அமிலங்கள், EPA மற்றும் DHA ஆகும். இவை ஒவ்வொன்றும், நம் உடலில் தனித்துவமான பங்கினை, குறிப்பாக, கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியிலும், முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன.
EPA இதயம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் அழற்சி ஏற்படுகையில் அதற்கு எதிர்வினை ஆற்றுதல் போன்ற செயல்கட்கு துணை புரிகின்றன. அதே போல், தனித்தன்மையான முக்கியத்துவம் வாய்ந்த DHA, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் கண்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயலாக்கத்திற்கு துணை புரிகின்றன.
கர்ப்பம் மற்றும் கர்ப்பத்துக்கு பிந்தைய காலத்தில் ஒமேகா– 3ன் முக்கியத்துவம்
கர்ப்பம் தரித்த பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒமேகா-3 ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, நமது இந்திய உணவில், இந்த முக்கியமான ஊட்டச்சத்து இல்லை. மேலும், இதன் குறைபாடு, கருவிலிருக்கும் குழந்தையை விட, தாயையே அதிகம் பாதிக்கிறது. கருவுற்றிருக்கும் தாய்க்கு ஒமேகா-3 குறையக் காரணம், கருவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு, இந்த ஒமேகா-3 பயன்படுத்தப்படுகிறது. அடுத்தடுத்த கர்ப்பங்களில், ஒமேகா-3ன் குறைபாடே அதிகரிக்கிறது.
ஓர் இறுதியான தீர்வு
சில வகை மீன்கள், ஆளி விதை மற்றும் வால்நட் போன்ற உணவு வகைகள், ஒமேகா-3ன் சிறந்த ஆதாரம் ஆகும். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் அனைத்து வகையான மீன்களையும் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதாலும், இயற்கையாக ஒமேகா-3 உடலில் உற்பத்தி ஆகாத காரணத்தினாலும், மருத்துவர்கள் மகப்பேறு காலத்திற்கான வைட்டமின்களுடன், கூடுதல் உணவான மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்றவற்றை பரிந்துரை செய்கின்றனர்.
தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை மனதில் கொண்டு, மதர்ஸ் ஹார்லிக்ஸ், அறிவியல்பூர்வமாக உருவாக்கப்படுகிறது. அதில் குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்துக்கு தேவையான 25 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. DHA போன்ற ஊட்டச்சத்துகள் மதர்ஸ் ஹார்லிக்ஸ்ல் அதிகமாக இருப்பதால், இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த துணை உணவாகவும், சைவ உணவு உண்ணும் தாய்மார்களுக்கு, மீன் மற்றும் ஒமேகா-3 நிறைந்த இதர கடல் உணவுகளுக்கு மாற்றாகவும் விளங்குகிறது.
ஒமேகா-3 தவிர, மதர்ஸ் ஹார்லிக்ஸ்ல், புரதம், வைட்டமின்-A, B12, B6, D, இரும்புச்சத்து, அயோடின், துத்தநாகம், ஃபோலிக் அமிலம் மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், குழந்தையின் ஆரோக்கியமான எடை கூடுதலுக்கு காரணியாகின்றன. 100% அமினோ அமில உள்ளடக்கத்துடன், இந்த பல்சுவை நிரம்பிய கூடுதல் உணவு, பிரசவத்திற்கு பின்னான, அன்னையின் ஊட்டச்சத்து தேவைகளையும் பராமரிக்க உதவுகிறது.
கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தினை பராமரிக்க, உணவு பெரும்பங்கு வகிக்கிறது. நல்ல ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு பழக்கங்களை கர்ப்ப காலத்தின் போது கடைபிடிப்பது, அன்னை மற்றும் குழந்தையின் ஆயுளுக்கும் பலன் அளிக்கக்கூடியது. சமநிலை, வகை மற்றும் மிதமான அளவு ஆகிய கொள்கைகளின்படி உணவினை தேர்ந்தெடுப்பது, கர்ப்ப காலம் மற்றும் வாழ்நாள் முழுமைக்கும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள சிறந்த அணுகுமுறை ஆகும்.
A