• Home  /  
  • Learn  /  
  • டெலிவரிக்கு பிறகு உடல் எடையை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?
டெலிவரிக்கு பிறகு உடல் எடையை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

டெலிவரிக்கு பிறகு உடல் எடையை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

10 Feb 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

பிரசவத்திற்கு பிறகு எவ்வாறு எடை இழப்பது என்பதுதான் குழந்தை பெற்ற பிறகு அனைத்து பெண்களாலும் பேசப்படும் முக்கிய தலைப்பாகும். பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை, உங்களை-என்னை போன்றவர்கள் நாம் பெற்ற கூடுதல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதன் மீது புதிய நுட்பங்களை தேடிவருகிறோம். நீங்கள் எடை அதிகமாக இருந்தால், அனைவரும் உங்களிடம் நேரடியாக கேட்க தொடங்கிவிடுவார்கள், டெலிவெரிக்கு பிறகு அதிக குண்டாகிவிட்டாய், குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள், வாக்கிங் செல் அது இது என்று. மற்றவர்கள் உடல் எடை பற்றி பேசத் தொடங்கி விடுவார்கள், ஆனால் நாம் இந்த எடையை அடைய 9 மாதங்கள் எடுத்ததை போன்று இழக்கவும் நேரம் தேவைப்படும் என்று எவரும் புரிந்துகொள்வதில்லை.

 

ஒரு புதிய அம்மாவுக்கு, சிறிது நாட்களுக்கு முன்னர் குழந்தையை பிரசவித்தவர்களுக்கு பொதுவாக நேரம் கிடைப்பதில்லை ஏனெனில் குழந்தைக்கு சில நாட்களே/மாதங்களே ஆகி இருக்கும். ஒரு அம்மாவாக நமக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கும் மற்றும்  நாம் நம்மைப் பற்றி பொதுவாக கவலை கொள்ளமாட்டோம்.

 

அதனால் பிரசவத்திற்கு பிறகு எடை இழப்பு செய்ய எது சரியான நேரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எந்த ஒரு மருத்துவரும் உங்கள் பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக டயட்டிங் (அ) உடற்பயிற்சியை தொடங்குமாறு பரிந்துரைக்கமாட்டார்கள் ஏனெனில் நமது உடலானது உட்புறத்தில் தளர்வாக (வீக்காக) இருக்கும் என்பதை நாம் அறிவோம். காயம் ஆறுவதற்கும் வலிமையை அளிப்பதற்கும் ஆரோக்கியமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தேவைப்படும். உங்கள் உடலை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதை காட்டிலும், ஒரு அம்மாவாக தனது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கும், குழந்தையையும் தன்னையும் பார்த்துக்கொள்வதற்காக உயர்தர உணவுமுறையை கொண்டிருக்கவேண்டும். 8 அல்லது 10 வாரங்களுக்கு பிறகு நீங்கள் ஒரு நல்ல உணவுமுறை நிபுணரை ஆலோசிக்கலாம், ஆனால் அதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

 

எடையை குறைப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும் ஏனெனில் அது பல்வேறு நோய்களாக நீரிழிவு, மூட்டுவலி, மற்றும் உயர்இரத்த அழுத்தம் மற்றும் சில நேரங்களில் உயிரை பாதிக்கும் நோய்களையும் வரவழைக்கலாம். நோயை தவிர்த்து, நீங்கள் எடை அதிகமாக இருந்தால், நீங்கள் சுய நம்பிக்கையை இழந்து, மனஅழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். அதிக எடையுடன் இருப்பது ஒருவரின் வாழ்க்கைமுறையை மாற்றுவதோடு, அவர் அதிகமாக மகிழ முடியாமல் செய்துவிடும். இரண்டாவது, நீங்கள் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதாக இருந்தால் எடையை குறைப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் எடை அதிகமாக இருக்கும் ஒருவருக்கு கருவுறுதல் கடினமாகிவிடும்.

 

கூடுதல் எடைகளை குறைக்க எளிதான மற்றும் பயனுள்ள வழிகள்

எடையை குறைத்து உங்கள் பழைய ஆடைகளை அணிவது தாய்மார்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும் மற்றும் பல அம்மாக்கள் அதை சந்திக்கலாம். பட்ஜெட்-க்குள் அடங்கும் சில எளிய மற்றும் ஆரோக்கியமான யோசனைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

 

தாய்ப்பால்

தாய்ப்பால் புகட்டுவது உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியமானதாகும் மற்றும் இது அம்மாக்களுக்கும் முக்கியமானது, ஏனெனில் தாய்ப்பால் புகட்டுவது ஒரு நாளில் 500-800 கலோரீக்களை குறைக்க உதவும். தாய்ப்பாலானது அம்மா மற்றும் குழந்தை இருவருக்கும் முக்கியமானது. அதனால் கண்டிப்பாக கொடுங்கள்.

 

ஆரோக்கியமானதை தேர்வுசெய்தல்

ஆரோக்கியமான உணவுமுறையில் பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் இருந்து அதிகமான சர்க்கரை/இனிப்புகளை நீக்குங்கள். ஜங்க் மற்றும் கொழுப்பு உணவுகளுக்கு தடை விதியுங்கள்.

 

8 மணிநேர உறக்கம்

உங்கள் குழந்தையுடன் 8 மணிநேர உறக்கம் என்பது ஒரு கனவுதான் என்று நீங்கள் நினைக்கலாம். உறக்க குறைபாடு வளர்சிதைமாற்றத்தை விளைவித்து, அனைத்து நேரத்திலும் தூக்கக்கலக்கத்துடனும் வயறு நிரம்பியும் உணர்வார்கள். இது எடை அதிகரிப்பை விளைவிக்கும். உங்கள் குழந்தையை உங்கள் கணவரிடமோ/அம்மாவிடமோ விட்டு, நீங்கள் ஆரோக்கியமாகவும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.

 

நீர்த்தன்மையுடன் இருத்தல்

ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.இது உங்களில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். நீர்த்தன்மையுடன் இருப்பது ஒருவரின் வளர்சிதைமாற்றத்தை மேம்படுத்தும்.

 

தேவையற்ற கவலைகளை தவிருங்கள்

நீங்கள் எடை அதிகரிப்பு மற்றும் அழுத்தத்தை பற்றி கவலை கொள்கிறீர்கள். இந்த டென்ஷனை தவிர்த்து, எதிர்மறையான நபர்கள் மற்றும் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருங்கள். நெருக்கமானவர்களுடன் பகிருங்கள். ஒரு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பெண் எப்பொழுதுமே சிறந்த அம்மா.

 

காப்பி மற்றும் மதுபானம் தவிர்த்தல்

எடை குறைப்பை ஆரம்பித்தவுடன் காபி மற்றும் மதுபானத்தை குறைக்கவும். நீங்கள் அப்படி ஏதேனும் குடிக்க நினைத்தால், ஒரு கப் க்ரீன் டீ குடியுங்கள். சூடான தண்ணீர் அடிக்கடி குடிக்கலாம். 

 

உணவை தவிர்க்காதீர்கள்

உணவை தவிர்த்தல் மற்றும் டையட்டிங் இருத்தல் எடை குறைவில் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது மாறாக அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தாக இருக்கும். அதனால் உணவை உண்டு உங்கள் டையட்டை கண்காணியுங்கள்.

 

ஊக்குவித்துக்கொள்ளுங்கள்

ஊக்குவித்தல் என்பது ஒருவர் அடைய விரும்பும் எடையை அடைவதற்கு மிகவும் முக்கியமானது. ஊக்குவிப்புடன் இருங்கள், மனம் தளராதீர்கள் ஏனெனில் ஒரு நாள் இரவில் எடையை இழக்க முடியாது.

 

நடை/நடனம்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுறுசுறுப்புடன் அழுத்தம் இல்லாமல் இருங்கள், நடனம் (அ) நடையை தேர்வு செய்யுங்கள். மாலையோ (அ) இரவிலோ நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.  

 

எடையை இழப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஒருவர் எடை இந்த நேரத்தில் குறையும் என்று வரம்பு எதுவும் இல்லை, நீங்கள் அமைதியாக இருந்து, சுத்தமான உணவை சாப்பிட சில எளிமையான படிகளை பின்பற்றவேண்டும். மனம் தளர்ந்து விடாதீர்கள் ஏனெனில் ஒவ்வொரு உடல் மற்றும் நுட்பம் வேறுபடும். உங்கள் இலக்குக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் உங்கள் இலக்கை அடைவீர்கள். ஊக்குவித்துக்கொள்ளுங்கள்!

A

gallery
send-btn