• Home  /  
  • Learn  /  
  • சோஷியல் டிஸ்டன்ஸ் – மனஅழுத்தமில்லாமல் கையாள்வது எப்படி?
சோஷியல் டிஸ்டன்ஸ் – மனஅழுத்தமில்லாமல் கையாள்வது எப்படி?

சோஷியல் டிஸ்டன்ஸ் – மனஅழுத்தமில்லாமல் கையாள்வது எப்படி?

24 Mar 2020 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

`சோஷியல் டிஸ்டன்ஸ்’ என்பதை `ஹவுஸ் அரெஸ்ட்’ எனும் அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசும் மருத்துவர்களும் `சோஷியல் டிஸ்டன்ஸை’ கடைப்பிடிக்கச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளாலும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் கவனக்குறைவாலும் மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸை சரிவரக் கடைப்பிடிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

சோஷியல் டிஸ்டன்ஸை கடைப்பிடித்தால் மட்டுமே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்பதால் நம் மனதை வலிமைப்படுத்துவதுடன், நம் தேவைகளுக்கான மாற்று வழிகளையும் கண்டுபிடித்தாலே போதும்; சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடியும். 

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, அது எப்படி உருவானது, அதை ஒழிப்பதற்கான சரியான மருந்து என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. அரசும், மருத்துவத்துறையும் அதை ஆராய்ந்து வெளிப்படுத்தும்வரை, அரசையும் மருத்துவர்களையும் முழுமையாக நம்புவதுடன், அவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பது மிகமிக அவசியம்.

பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது அதிகபட்சமாக 2 நாள்கள் கவனம் செலுத்துவோம், அதன் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவோம். ஆனால் 2 நாள்களுக்கு மேலானால், அந்த விஷயம் பழகிவிடும். அதனால் அசட்டையாக இருந்துவிடுவோம்.

 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை, இது வேகமாகப் பரவிவிட்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இழப்புகளைச் சந்திக்க நேரும். ஒரு வருடம் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டுமென்றால் நிறைய கேள்விகள் எழுவதில் தவறில்லை. இப்போதைக்கு, வெறும் 14 நாள்கள் மட்டும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதால் பெரிய இழப்புகள் இல்லை.

அதனால், `தமிழ்நாட்டுக்கெல்லாம் எதுவும் வராது, வெயிலில் அழிந்துவிடும்’ என ஆராய்ச்சியாளரைப் போல் பேசிக்கொண்டிருக்காமல், சுயகட்டுப்பாட்டுடன் `சோஷியல் டிஸ்டன்ஸை’ கடைப்பிடித்தால் மட்டும்தான் கொரோனா வைரஸிடம் இருந்து நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் தப்பிக்க முடியும்.

 

இன்ட்ரோவெர்ட் (Introvert) எனப்படும் தனிமை விரும்பிகளுக்கு இச்சூழல் வரம். ஆனால், எக்ஸ்ட்ரோவெர்ட் (Extrovert) எனப்படும் சோஷியல் கனெக்டட் நபர்களுக்கு இது கஷ்டகாலம்தான். ஆனால், சோஷியல் மீடியாக்கள், வீடியோ கால், குரூப் சாட் என டிஜிட்டல்வழியே அனைவருடனும் தொடர்பில் இருப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது என உங்களூக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், சோஷியல் டிஸ்டன்ஸ்’ குறித்த பதற்றத்தைச் சுலபமாகக் கையாளலாம்.

அவரவர் வயதுக்கு ஏற்றவாறு `சோஷியல் டிஸ்டன்ஸ்’ முறையை சுயகட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க உதவும் மாற்று வழிகள்:

சிறுவர்கள்

விடுமுறையில் குழந்தைகளைச் சமாளிப்பதென்பது சவாலான விஷயம். அதிலிருந்து தப்பிக்க பீச், சினிமா, பிக்னிக் என வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால், வழக்கத்துக்கு மாறான இந்த விடுமுறையில் குழந்தைகளைச் சமாளிக்க கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும்.

விடுமுறையை முழு நேர விளையாட்டாகக் கருதாமல், உபயோகமாகச் செலவிட குழந்தைகளைப் பழக்குவது அவசியம். அக்கம் பக்கம் சென்று விளையாட முடியாத இந்நிலையில் குழந்தைகள் டிவி மற்றும் செல்போனே கதியென மாறிவிடுவார்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, கும்பத்தின் அந்நியோன்யத்தை உணரவைப்பதன்மூலம், அவர்களுடனான நெருக்கத்தை வளர்க்கலாம்.

இந்த `அன்லிமிடெட் லீவ்’ நேரத்தில், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனப்பான்மை அதிகரிக்கும். அதனால், காலையில் எழுவதிலிருந்து இரவு உறங்கும்வரை சில ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுக்கலாம்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் குளிப்பது முதல், வீட்டிலேயே விளையாடக்கூடிய பாரம்பர்ய விளையாட்டுகளை நேரம் ஒதுக்கி விளையாட வைப்பது, அவர்களிடம் இருக்கும் திறமையை வளர்க்கும் விதமாக நடனம், பாடல், இசைக்கருவிகள், ஓவியம் என அவர்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்யவைத்து, பாராட்டி ஊக்கப்படுத்தலாம்.

Image: kids playing with parents like blocks arranging, playing musical instruments, educational toys 

இரண்டு வாரங்களுக்கு இதை நடைமுறைப்படுத்தினால், அது அவர்களின் மனதில் பதிந்துவிடும், அவர்களாகவே தொடர்ந்து கடைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவர், குழந்தைகளுக்குச் சொல்லும் விஷயங்களை நாம் முதலில் கடைப்பிடித்து அவர்களுக்கு உதாரணமாக இருந்தால்தான் இது சாத்தியப்படும்.

இளைஞர்கள்

சிறுவர்களைப்போல இளைஞர்களைக் கையாளமுடியாது. அவர்கள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் மூழ்கிவிடுவர். அதனால், செல்போனைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக்கொள்ள அனுமதியுங்கள்.

தவிர, குறிப்பிட்ட நேரத்தில் படிப்பு, அதாவது அவர்களுக்குப் பிடித்த அல்லது அவசியமான ஆன்லைன் பாடத்திட்டத்தில் சேர்த்துவிடலாம். குறிப்பாக, மொழிப்பாடத்தில் சேர்த்துவிட இது சரியான நேரம்.

தற்போதுள்ள நெட் பேக்குகளின் மூலம் தேர்ந்தெடுத்த உலக சினிமாக்களைப் பார்க்க அனுமதிக்கலாம். இதனால் பல கலாசாரம் மற்றும் வாழ்வியலைக் கற்பதுடன் மொழித்திறனும் மேம்படும்.

நடுத்தர வயதினர்

இவர்கள் பெரும்பாலும் பணிக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். அலுவலக பணியாளர்களுக்கு தற்சமயம் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய ஒர்க் ஃப்ரம் ஹோம் வழங்கப்பட்டுள்ளது. அமர்தல், டேபிள், இருக்கை என சில பல அசௌகரியங்கள் இருந்தாலும் தங்களுடைய நாளுக்கான அட்டவணையை தயார் செய்து கொள்வது அவசியம். மேலும் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்யாமல் இடையிடையே எழுந்து குறுகிய நேர இடைவெளி எடுத்து வேலையை தொடரலாம். 

#coronavirus #covid19 #coronavirus #covid19

A

gallery
send-btn

Related Topics for you