COVID-19: வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல்

COVID-19: வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல்

29 Mar 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

கொரோனா வைரஸ், ஒரு சங்கிலித் தொடர்போல் ஒருவர் மூலமாக அடுத்த நபருக்கு என வேகமாகப் பரவி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க ‘பிரேக் த செயின்’ எனப்படும், நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளும் சோஷியல் டிஸ்டன்ஸிங் வழிமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்லி அரசாங்கம், 21 நாட்கள் ஊரடங்கு போன்ற ஒரு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

கொரோனாவின் ‘பிரேக் த செயின்’ என்பதற்கு இணையாகவும், அதற்கு முரணாகவும் ‘மேக் த செயின்’ கான்செப்ட் பரவலாகிவருகிறது. அதாவது சோஷியல் டிஸ்டன்ஸைக் கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், நிறுவன ஊழியர்களுக்கு வேலை நிமித்தமாக அதிகபட்ச டிஜிட்டல் கனெக்ட்டை ஏற்படுத்துவது.

 

இதன் எதிரொலியாக WFH எனப்படும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையைப் பல நிறுவனங்கள் கையிலெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. ‘தன் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைசெய்வது என்பதை ஒரு நிறுவனம் எப்படிப் பார்க்கிறது?’ என்ற பார்வையில் அலசி ஆராய்ந்ததிலிருந்து:

 

நன்மைகள்

ஆதாரம்: glassdoor

செலவுகள் குறையும்

ஒரு நிறுவனத்தின் மின்சாரப் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு, தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் தேவை என தினசரி நடைமுறைக்குத் தேவைப்படும் அனைத்து விஷயங்களின் தேவையும் அதனால் ஏற்படும் செலவினங்களும் குறையும்.

 

பயண நேரம்

ஆதாரம்: timesofindia

பணியாளரின் வருகைக்கான பயண நேரம் வீணாகாமல், ஒவ்வொரு பணியாளரும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை ஆரம்பித்துவிட முடியும். இதனால் உற்பத்தித்திறன் மேம்படும்.

 

கூடுதல் செயல்திறன்

தேநீர், உணவு இடைவேளைக்கு கேன்டீன் அல்லது ஹோட்டலுக்குப் போய்வரும் நேரம் குறையும். வீட்டில், தேநீர் அருந்திக்கொண்டே வேலைசெய்யமுடியும் என்பதால், அலுவலக நேரத்துக்கான வேலையின் செயல்திறன் கூடும்.

 

ஆரோக்கியமான பகிர்தல்

ஆதாரம்: lifesize

அலுவலக வளாகத்தில் நடக்கும் மீட்டிங்கைவிட, வீட்டிலிருந்து கான்ஃபரென்ஸ் கால் அல்லது வீடியோ கான்ஃபரென்ஸ் கால் மூலம் நடத்தப்பட்டும் மீட்டிங்கில் ஒவ்வொரு பணியாளரும் கருத்துகளும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கப்படும். ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் வாய்ப்புள்ளது.

 

பாதுகாப்பான சூழல்

ஆதாரம்: cnbc

தேவையில்லாத அலைச்சல் தவிர்க்கப்படுவது, ஆரோக்கியமான வீட்டுச்சாப்பாடு, உறவுகளுடன் இருக்கும் பாதுகாப்பான சூழல் போன்றவை, பணியாளரின் உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியம் மேம்பட உதவும்.

 

சவால்கள்: கூடுதல் கவனம்

வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கான்செப்ட் இந்தியாவுக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகின்றன. அதனால் வெளிநாட்டினரைப்போல் அலுவலக நேரத்தில் வேலைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதில் நம் நாட்டினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

 

டோன்ட் டிஸ்டர்ப்

வீட்டில், குழந்தைகள் மற்றும் உறவினர்களின் இடையூறுகளுக்கு மத்தியில் கவனத்துடன் வேலைசெய்வது என்பது சவாலான விஷயம். எனவே, அவர்கள் சலுகை எடுத்துக்கொள்ளாத வகையில் ‘டோன்ட் டிஸ்டர்ப்’ என்பதை அவர்களிடம் ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிவிடவும்.

 

புரிந்துணர்வு அவசியம்

அலுவலக வளாகத்துக்குப் பதிலாக, சொந்த இருப்பிடத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதைத்தாண்டி, செய்யும் வேலையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர் உணர்வதுடன், தன் குடும்பத்தினருக்கும் அதை உணர்த்துவது மிக அவசியம். குடும்பத்தினருக்கு ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் இருக்கும் சவால்களை எடுத்துக்கூறி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்பு வேலையில் இறங்கவும்.

 

பிளான் ‘B’ அவசியம்

வீட்டிலிருந்து வேலைசெய்வதென்பது பெரும்பாலும் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படையில்தான் இருக்கும் என்பதால், தனிநபர் பயன்படுத்தும் நெட்வொர்க் டிவைஸின் செயல்பாடு மற்றும் சமயங்களில் அவர் வசிப்பிடத்தில் ஏற்படும் மின்சாரத்தட்டுப்பாடு போன்றவை சவாலான விஷயங்கள்.

 

எனவே, யுபிஎஸ், நெட்வொர்க்குக்கு மொபைலை டேட்டா கேபிளில் சிஸ்டத்துடன் கனெக்ட் செய்வது என்று ப்ளான் பி-களை தயார்செய்துகொள்ளவும்.

 

கம்யூனிகேஷன் முக்கியம்

அலுவலகத்தில் பணிபுரியும்போது உயரதிகாரி, சக பணியாளர் என ஒருவரைத் தொடர்புகொள்ள போன், மெசேஜில் இயலவில்லை என்றால், நேரடியாக அவருடைய இருப்பிடத்துக்குச் சென்று சந்தித்துவிட முடியும்.

 

அதுவே வீட்டிலிருந்து பணிபுரியும்போது இது சாத்தியமில்லை என்பதால், கம்யூனிகேஷனுக்கான பிற வழிகளையும் யோசித்துவைத்துக்கொள்ளலாம்.

 

டீம் வொர்க்

ஒரு சில புராஜெக்ட்களுக்குக் குழுவாக வேலைசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோன்ற நேரத்தில், நேரில் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவதில் கிடைக்கும் வசதிகளும் செயல்திறனும் வொர்க் ஃப்ரம் ஹோமில் கிடைக்காது. என்றாலும், அதை முடிந்தவரை ஈடுகட்ட டீம் ஸ்பிரிட்டுடன் அனைவரும் கைகோக்கலாம்.

 

மொத்தத்தில் கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல், நிறுவனத்தின் உற்பத்தித் திறனுக்கும், பணியாளரின் செயல்திறனுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தரும் அனுபவப் பாடமாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

இச்சூழ்நிலை, நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்ட் மேல் ஒரு நம்பிக்கையையும் தெளிவையும் கொடுக்கும்பட்சத்தில், வருங்காலத்தில் பல இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டினரைப்போல் வொர்க் ஃப்ரம் ஹோம் கான்செப்டைக் கையிலெடுக்க இது முதல் படியாக இருக்கும்.

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும். 

#coronavirus #covid19

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.