2 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருப்பதென்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒரு தருணமும் கூட. அதனை ஒவ்வொரு நிமிடமும் அழகாக இரசித்து கழிக்க வேண்டியது தாய், சேய் இருவருக்கும் மிகவும் நல்லது. ஆனாலும், பிரசவ நாள் நெருங்க நெருங்க நம்மை மீறிய ஒரு பதட்டமும், எதிர்பார்ப்பும் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. இந்த பதட்டத்தில் பிரசவத்தின்போது மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டியவை எவை? என்பதை நாம் மறந்தும் போய்விடுகிறோம். அதனால், பிரசவத்திற்கு முன்பு நாம் எவற்றை எல்லாம் தயார்நிலையில் வைத்துக்கொள்வது என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவு தான் இது.
மருத்துவமனைக்கு செல்லும் முன் எடுத்து வைக்க வேண்டியவை எவை?
முதலில் ஒரு செக்-லிஸ்ட் தயார் செய்து அதன்படி ஒவ்வொன்றையும் எடுத்து வைக்கவும். அப்போது தான் எதையும் மறந்துவிட மாட்டோம்.
அம்மாக்களுக்கு தேவையானவை எவை?
லேசான டிரெஸ்ஸிங் கவுன்:
இந்த கவுன்கள் தாய்ப்பால் தரக்கூடிய வகையில் இருக்கும். ஹால்ப் ஸ்லீவ் என்பதால் தாய்ப்பால் தரவும், மாற்றவும் மிகவும் எளிதாக இருக்கும். இது இறுக்கமாக இருக்காது என்பதால் மருத்துவமனையில் பயன்படுத்துவது மிகவும் சவுகரியத்தை தரும்.
நர்சிங் டாப்ஸ்:
இது ஸ்லீவ் டைப்பில் வரக்கூடியது. இதுவும் தாய்ப்பால் தர சவுகரியமாக இருக்கக்கூடிய ஒரு டாப்ஸாகும். இதனை கர்ப்பிணிகள் அவர்களுடைய மூன்றாவது மூன்று மாதத்தில் விரும்பி அணிகின்றனர். ஏனெனில், பெரிய வயிறை மிக சுலபமாக மறைக்க இந்த டாப்ஸ் கர்ப்பிணி பெண்களுக்கு உதவுகிறது.
நர்சிங் தலையணைகள்:
பிள்ளைகளை சரியான நிலையில் பிடித்து தாய்ப்பால் தர வேண்டியது மிகவும் அவசியம். பிறந்த குழந்தைகளின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால் கவனமாக கையாள வேண்டும். அதற்கு இந்த நர்சிங் தலையணைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
நர்சிங் பேடுகள்:
இதனை பிரெஸ்ட் பேடுகள் என்றும் அழைப்பர். இது கசியும் தாய்ப்பாலை உறிஞ்ச உதவுகிறது. மேலும், தாய்ப்பால் தரும்போது உண்டாகும் கறைகளை போக்கவும் உதவுகிறது. தாய்ப்பால் கசியும்போது அவர்கள் குடிக்க சிரமம் கொள்ளலாம் என்பதால் இந்த நர்சிங் பேடுகள் நிச்சயம் தாய்மார்களுக்கு நல்ல ஒரு தீர்வை வழங்குகிறது. நர்சிங் பேடுகள் எப்போதும் மிருதுவாக, நன்றாக உறிஞ்சக்கூடிய, காட்டனில் தயாரிக்கப்பட்டதாக இருப்பது நல்லது. இந்த வகை நர்சிங் பேடுகள் மூச்சு விடுவதை எளிதாக்குகிறது.
டயாப்பர் பேக்:
இந்த பேக்குகள் தேவையான பொருள் அனைத்தையும் வைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு தேவையான டயாப்பர், பார்முலா பால் பாட்டில், போன்றவற்றை வைக்க உதவுகிறது. இது நம்முடைய தோளில் சுமப்பதற்கு எளிதானதும் கூட. உங்களுடைய கணவர் இதனை எளிதில் தூக்கிக்கொண்டு உங்களுக்கு உதவியாக வரலாம்.
மெட்டர்னிட்டி பிரா, பேண்டிஸ்:
பிரசவத்துக்கு பிறகு உங்களுடைய பிறப்புறுப்பு பாதிக்காத வகையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சுகப்பிரசவம் என்றால், மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சவுகரியமான ஜட்டியை மட்டுமே அணிவது நல்லது. அதேபோல, உங்கள் மார்பகத்தை இறுக்கும் வித எந்தவொரு பிராவையும் அணியக்கூடாது.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் எவை?
புதிதாக பிறந்த பிள்ளைக்கான டயாப்பர்:
இதனால் அவர்கள் சவுகரியமாக உணர்வார்கள். அதோடு, எப்போதும் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசக்கூடிய (யூஸ் & த்ரோ) டயாப்பர்களை மட்டுமே பிறந்த குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும். இது தேவையற்ற சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
பேபி வைப்ஸ்:
பேபி வைப்ஸ் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் சருமம் இப்போது மிகவும் உணர்திறன் கொண்டதாக இருப்பதால் அலர்ஜி ஆகாத வகையில் இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கான ஆடைகள்:
குளிர்காலமாக இருந்தால், பிள்ளைகளுக்கு உடுத்தும் சிறந்த ஆடைகளை எடுத்து செல்ல வேண்டியது அவசியம்.
ராஷ் கிரீம்:
மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த புதிய சூழலை எதிர்கொள்ள கடினமாக இருக்கலாம். இதனால் சருமத்தில் சில மாற்றங்கள் காணப்படலாம். அதற்கான பக்கவிளைவற்ற கிரீம்களை கையில் வைத்துக்கொள்வது நல்லது.
குளிப்பாட்ட பொருட்கள்:
பிறந்த குழந்தைகளை 24 மணி நேரம் கழித்து அல்லது குறைந்தது 6 மணி நேரம் கழித்தாவது குளிப்பாட்ட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. அதனால் அவர்களை குளிப்பாட்ட தேவையான பொருட்களையும் நீங்கள் கையோடு எடுத்து செல்ல வேண்டும்.
பிள்ளைகளுக்கான நக வெட்டி:
பிறந்த பிள்ளைகளின் நகங்கள் பெரும்பாலும் கூர்மையாக இருக்கும். அதனால் கையுறைகள் அல்லது பிள்ளைகளுக்கான நக வெட்டி போன்றவை கொண்டு செல்லலாம்
பிள்ளைகளை போர்த்த பிளாங்கட்:
மருத்துவமனைகளில் பிள்ளைகளை சுற்ற பிளாங்கட் தருவார்கள் என்றாலும், நீங்களும் ஒரு பிளாங்கட் கொண்டு செல்வது நல்லது
தேவையான ஆவணங்கள் மற்றும் இதர பொருட்கள் எவை?
தாய்மார்களே, வெகுநாட்களாக உங்களுக்கு இருந்த சந்தேகத்திற்கு பதில் இந்த பதிவின் மூலமாக கிடைத்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
A