• Home  /  
  • Learn  /  
  • உங்கள் பிள்ளைக்கு ஃபீடிங் பாட்டிலை அறிமுகப்படுத்த நினைக்கிறீர்களா?
உங்கள் பிள்ளைக்கு ஃபீடிங் பாட்டிலை அறிமுகப்படுத்த நினைக்கிறீர்களா?

உங்கள் பிள்ளைக்கு ஃபீடிங் பாட்டிலை அறிமுகப்படுத்த நினைக்கிறீர்களா?

3 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நீங்கள் பாட்டில் பாலை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்பட்டால் ஒரு சில அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பாட்டில் பாலில் பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்பிருக்கிறது என்பதால் சுத்தம் செய்வதில் தொடங்கி, பாட்டில் பாலை கொடுப்பது வரை என அனைத்திலும் நமக்கு கூடுதல் கவனம் தேவை.

 

பாட்டில் பாலை கொடுப்பது எப்படி?

தாய்ப்பாலுக்கு இணையாக பாட்டில் பாலை பலரும் கொடுக்கின்றனர். பார்முலா பாலில் பல வகை உண்டு. அவற்றுள் உங்கள் குழந்தைக்கு ஏற்றது எதுவென்பதை டாக்டர் தான் பரிந்துரைப்பார்.

பாட்டில் பால் கொடுக்கும்போது கவனித்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

1. கொதிக்க வைத்த குடிநீரை அரை மணி நேரம் வைத்திருக்கவும். நீரின் வெப்பநிலையானது குறைந்தது 70 டிகிரி செல்சியசாக இருக்க வேண்டும்.

2. பார்முலா பாலை ஊற்றும் முன்பு உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

3. பாட்டிலில் சரியான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும்.

4. பவுடரை குறிப்பிட்டிருக்கும் அளவிற்கு அள்ளி போடவும். இதற்கு நாம் சுத்தமான கத்தியை பயன்படுத்தலாம்.

5. பாட்டில் கவரை வைத்து மூடி பவுடர் நன்றாக கரையும் வரை குலுக்கவும்.

6. உங்கள் பிள்ளைகள் குடிக்கும் சூட்டில் பால் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, அதன் பின்னரே கொடுக்க வேண்டும்.

 

எப்போது நான் பார்முலா பாலை என் குழந்தைக்கு தருவது?

உங்கள் குழந்தைகளுக்கு எடுக்கும் பசி, நாளுக்கு நாள் மாறுபடும். எனவே அவர்கள் தேவைக்கு தகுந்தாற்போலவே பார்முலா பாலை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாட்டில் பாலை என் குழந்தைக்கு சவுகரியமாக கொடுப்பது எப்படி?

1. பாட்டில் பாலை கொடுக்கும்போது லேசாக சாய்த்து கொடுக்கவும். இல்லையேல் அவர்கள் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்க செய்வர்.

2. பாட்டிலில் இருக்கும் பாலை தொடர்ந்து கொடுக்காமல், இடைவெளி விட்டு கொடுக்கவும். அப்போது தான் அவர்களுக்கு அது போதுமா? இல்லையா? என்பதை நம்மால் உணர முடியும்.

3. அவர்கள் உறிஞ்சுவதை போன்ற சத்தம் எழுப்பி குடித்தால், காற்றையும் விழுங்கி இருப்பார்கள் என அர்த்தம். அதனால், பாட்டிலை சாய்வாக பிடித்திருப்பதை உறுதி செய்யவும்.

4. எப்போதும் பாட்டில் பால் கொடுக்கும்போது நாம் அவர்கள் கண்களை பார்த்தவாறு இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சவுகரியமாக உணர்வார்கள்.

5. எப்போதும் படுத்துக்கொண்டு பாட்டில் பாலை கொடுக்காதீர்கள். மூச்சு திணறல் ஏற்படக்கூடும்.

 

குழந்தைகள் முழுவதுமாக பாலை குடிக்கா விட்டால், மீண்டும் அதை நான் கொடுக்கலாமா?

பாட்டில் பாலை அவ்வாறு கொடுப்பது தவறான விஷயம். ஒருவேளை உங்கள் குழந்தையால் பாட்டிலில் இருக்கும் பாலை குடிக்க முடியாவிட்டால், மீதமிருப்பதை கீழே ஊற்றுவதே நல்லது. வீணாகும் என நினைக்க வேண்டாம். அதனை குடித்தால் குழந்தைக்கு பலவித பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை மறவாதீர். மீதமுள்ள பாலில் எப்போதுமே பாக்டீரியாக்கள் உருவாக செய்யும்.

பாக்டீரியா தங்கிய பாலை குடிப்பதால் பிள்ளைகளுக்கு பலவித பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பவுடர் பாலில் நுண்ணிய பாக்டீரியாக்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது.

 

பாலை நான் ஃபிரிட்ஜில் பத்திரப்படுத்தலாமா?

கண்டிப்பாக கூடாது, எப்போதுமே பிள்ளைகளுக்கு ஃபிரெஷ்ஷான பாலையே நாம் கொடுக்க வேண்டும். பாலுடன் நாம் தண்ணீரை சேர்க்கும்போது அதில் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஒருவேளை ஃபிரிட்ஜில் நீங்கள் பாலை வைத்தால் சில மணி நேரங்களிலேயே பாக்டீரியா அதில் உருவாகிவிடும்.

 

பாலை சூடுபடுத்துவது எப்படி?

மைக்ரோ வேவ் பயன்படுத்தி பாலை எப்போதுமே சூடுபடுத்த கூடாது. அது சேமிக்கப்பட்ட தாய்ப்பாலாக இருந்தாலும் சரி, பார்முலா பாலாக இருந்தாலும் சரி. ஏனெனில், மைக்ரோவேவ் எப்போதுமே சீரான நிலையில் பொருட்களை சூடுபடுத்துவது இல்லை. அதனால், உங்கள் குழந்தையின் தொண்டையை சுடவும் வாய்ப்புள்ளது. அதேபோல, அளவுக்கதிகமாக பாலை சூடுபடுத்தும்போதும், அதிலுள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள் மறைந்துவிடும்.

 

உங்கள் குழந்தைக்கு பால் வேண்டுமென எப்படி அறிவது?

  • தூக்கத்தில் உச்சு கொட்டுவார்கள்
  • கைகள், நாக்கு அல்லது ஆடையை கடிப்பார்கள்
  • வாயை திறந்து மூடுவார்கள்
  • உங்கள் மார்பை நோக்கி வாயை கொண்டு வருவார்கள்
  • ஒருவேளை, பசி அதிகமாக எடுத்தால் அழ தொடங்கிவிடுவார்கள்
  • தலையை தூக்கி பார்ப்பார்கள்

#babycare

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.