• Home  /  
  • Learn  /  
  • அடடே! கர்ப்பத்தின்போது வாரந்தோறும் நம் உடலில் இவ்வளவு விஷயங்கள் நடக்கிறதா!
அடடே! கர்ப்பத்தின்போது வாரந்தோறும் நம் உடலில் இவ்வளவு விஷயங்கள் நடக்கிறதா!

அடடே! கர்ப்பத்தின்போது வாரந்தோறும் நம் உடலில் இவ்வளவு விஷயங்கள் நடக்கிறதா!

4 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பத்தின் போது நம்முடைய உடலில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்கிறது. அவை, கேட்கும்போதே பிரமிக்க வைக்கும் என்பதே உண்மை. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும், நம்முடைய கர்ப்பத்தில் ஏதோவொரு மாற்றத்தை சந்தித்துக்கொண்டு தான் இருப்போம். அவை என்னவென்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.

 

முதல் மூன்று மாதத்தில் என்ன நடக்கும்?

வாரம் 2:

உங்களுடைய வாழ்வையே மாற்றும் ஒரு வாரம் இது. அண்டவிடுப்பு நடந்து, முட்டையும், விந்துவும் இணையும். இதைத்தான் கர்ப்பம் என்கிறோம்.

 

வாரம் 3:

இப்போது நம்முடைய பிள்ளைகள் சிறிய பந்தை போல இருப்பர். கேட்கவே ஆசையாக இருக்கிறதல்லவா!

 

வாரம் 4:

கருப்பை ஆழத்தில், நம்முடைய பிள்ளைகள் கருவாக உருவாகுவார்கள். அதோடு, தொப்புள் கொடியும் வளர தொடங்கும்.

 

வாரம் 5:

ஐந்தாவது வாரத்தில் நம்முடைய மார்பகம் மென்மையாக இருக்க தொடங்கலாம். அதோடு சோர்வும் இருக்கும்.

 

வாரம் 6:

நம்முடைய பிள்ளைகளின் மூக்கு, வாய் மற்றும் காது வடிவம் பெற தொடங்கும். இப்போது வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவையும், லேசான இரத்த கசிவும் இருக்கலாம்.

 

வாரம் 7:

இப்போது நம்முடைய பிள்ளைகளின் பிஞ்சு கைகள் மற்றும் கால்கள் உருவாகும். நம்முடைய கருப்பை அளவு இரட்டிப்பாகும்.

 

வாரம் 8:

நம்முடைய குழந்தைகள் சீராக அசைவார்கள். ஆனாலும் நம்மால் அதனை உணர முடியாது. இப்போது பிரனெட்டல் டெஸ்ட்டுகளை நாம் எடுக்கலாம்.

 

வாரம் 9:

இப்போது நம்முடைய பிள்ளைகள் நம்மை போல மனித வடிவத்தை பெறுகிறார்கள். நம்முடைய இடுப்பு பகுதி தடிமனாக இருப்பதை உணரவும் செய்யலாம்.

 

வாரம் 10:

நம்முடைய பிள்ளையின் கடினமான வளர்ச்சி பாதைகள் இப்போது முடிந்திருக்கும். உறுப்புகள் வடிவம் பெற்று வளர தயாராக இருக்கும்.

 

வாரம் 11:

நம்முடைய பிள்ளையின் கைகள் திறந்து முஷ்டியை மடக்க தயாராக இருக்கும். சிறிய பல் மொட்டுக்கள், ஈறுகளுக்கு அடியில் தோன்ற தொடங்கி இருக்கும்.

 

வாரம் 12:

நம் பிள்ளை கால்கள் குத்த வைத்து உட்காருவது போல சுருண்டு காணப்படும். அவர்களுடைய மூளை வேகமாக வளர தொடங்கும். அவர்களுடைய சிறுநீரகம் யூரினை வெளியேற்ற ஆரம்பித்திருக்கும்.

 

வாரம் 13:

முதல் மூன்று மாதத்தின் முடிவு இது. நம்முடைய பிள்ளைகளின் கை ரேகைகள் கருவில் தடம் பதித்து 3 இன்ச் நீளம் வளர்ந்திருக்கலாம்.

 

இரண்டாவது மூன்று மாதத்தில் என்ன நடக்கும்?

வாரம் 14:

இப்போது குமட்டலானது நமக்கு ஓரளவு குறைந்து காணப்படும். நம்முடைய பிள்ளைகள் உருவாகி சேட்டைகள் செய்ய தயாராக இருப்பர்.

 

வாரம் 15:

நம்முடைய பிள்ளைகள் ஒளியை உணர தயாராக இருப்பர். சுவையை உணரும் மொட்டுக்கள் உருவாகும். இந்த சமயம் மூக்கடைப்பு இருக்கிறதா? இது கர்ப்ப கால விளைவு தான்.

 

வாரம் 16:

விரைவான வளர்ச்சிக்கு தயாராவார்கள். அடுத்த சில வாரத்தில், அவர்களின் எடை இருமடங்காகும்.

 

வாரம் 17:

நம்முடைய பிள்ளை எலும்புக்கூடு மிருதுவான குருத்தெலும்பில் இருந்து எலும்பாக மாறும். தொப்புள் கொடி தடிமனாக, வலுவாக வளரும்.

 

வாரம் 18:

நம்முடைய பிள்ளையின் அந்தரங்க பாகம் வளர்ந்து அல்ட்ரா சவுண்டில் தெரிய தயாராக இருக்கும். பசியே எடுக்கவில்லையா? இது இயல்பு தான் இப்போது.

 

வாரம் 19:

சேர்ந்து பாடலாம், பிள்ளைகளால் கேட்க முடியும்.

 

வாரம் 20:

வாழ்த்துக்கள், கர்ப்பத்தின் முதல் பாதியை கடந்துவிட்டீர்கள். நம் பிள்ளைகள் மெக்கோனியத்தை உற்பத்தி செய்ய தொடங்கியிருப்பர்.

 

வாரம் 21:

ஆஹா! அசைகிறார்கள்! பட்டாம்பூச்சி போன்று உள்ளே படபடத்து உதைப்பார்கள். அவர்களுக்கு கண் புருவங்கள் இப்போது காணப்படும்.

 

வாரம் 22:

நம்முடைய குட்டி குழந்தை பார்க்கவே அழகாக இருப்பார்கள். அதோடு வளரும் நம்முடைய வயிறு, நம்மை அழுத்த தொடங்கும்.

 

வாரம் 23:

நாம் நடக்க நடக்க அவர்களும் நம்முடன் வர தொடங்குவார்கள். அதோடு, நம்முடைய கால்களும் வீங்க ரெடியாகிறது.

 

வாரம் 24:

இப்போது கருப்பையானது கால்பந்தை போன்று இருக்கும்.

 

வாரம் 25:

இப்போது நம்முடைய பிள்ளைகளின் முடி வளரும்.

 

வாரம் 26:

நம்முடைய பிள்ளைகள் பனிக்குட நீரை உள்ளிழுத்து, வெளியேற்றவும் செய்வார்கள். இது அவர்கள் சுவாசத்திற்கு சிறந்த பயிற்சியாகும்.

 

வாரம் 27:

கூச்சமாக உள்ளதா? ஒருவேளை அது அவர்களுக்கு எடுக்கும் விக்கலாக இருக்கலாம். இப்போது அவர்கள் கண்களை திறந்து மூட செய்கின்றனர். விரல் சூப்பவும் செய்கின்றனர்.

 

மூன்றாவது மூன்று மாதத்தில் என்ன நடக்கும்?

வாரம் 28:

ஒருவேளையாக நாம் மூன்றாவது மூன்று மாதத்திற்கு வந்துவிட்டோம், வாழ்த்துக்கள். வளரும் கண்களானது, கருவில் இருந்த படியே ஒளி வெளிச்சத்திற்கு பதிலளிக்கும்.

 

வாரம் 29:

நம்முடைய பிள்ளையின் தசைகள் மற்றும் நுரையீரல் தொடர்ந்து முதிர்ச்சியடையும். அவர்களுடைய தலையானது, மூளை வளர்ச்சிக்கு ஏற்று வளைந்து கொடுக்கிறது.

 

வாரம் 30:

இப்போது நம்முடைய பிள்ளைகள் சுமார் 3 பவுண்டு எடை இருக்கலாம். அதோடு, நமக்கு மனநிலையில் மாற்றம், சோர்வு போன்றவற்றால் திண்டாட்டம் ஏற்படலாம்.

 

வாரம் 31:

இரவு வேளையில் நம்முடைய பிள்ளைகள் உதைத்து குட் நைட் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்போது போலியான பிரசவ வலியும் வரக்கூடும்.

 

வாரம் 32:

நம்முடைய வளர்ந்த கருப்பை நெஞ்செரிச்சலையும், மூச்சு பிரச்சனையையும் ஏற்படுத்தலாம்.

 

வாரம் 33:

இப்போது அவர்கள் இன்னும் கூடுதலாக எடை இருப்பார்கள் என்பதால், தூங்குவது நமக்கு சிரமமாக இருக்கலாம்.

 

வாரம் 34:

நம்முடைய பிள்ளைகளின் நரம்பு மண்டலத்தின் மையம் மற்றும் நுரையீரல் முதிர்ச்சியடையும். மயக்கம் மற்றும் சோர்வு அசதியை தரலாம்.

 

வாரம் 35:

நம்முடைய பிள்ளைகள் இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நாமும் சுறுசுறுப்பாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

 

வாரம் 36:

ஒருவேளை நாம் பிரசவத்துக்கு தயாராக தொடங்கலாம்.

 

வாரம் 37:

நம்முடைய பிள்ளைகளின் மூளை மற்றும் நுரையீரல் முதிர்ச்சி அடைந்துக்கொண்டே இருக்கும். நமக்கு அதிக யோனி வெளியேற்றம் மற்றும் அவ்வப்போது சுருக்கங்கள் காணப்படக்கூடும்.

 

வாரம் 38:

உங்களுடைய மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள முயலவும். இரத்த அழுத்தம் மிகுதியாக வாய்ப்புள்ளது.

 

வாரம் 39:

நம்முடைய பிள்ளைகள் முழுமையடைந்து, உலகை காண தயாராக இருப்பார்கள். பனிக்குடம் உடைவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் நாம் செல்ல வேண்டும்.

 

வாரம் 40:

நம்முடைய பிள்ளைகள் தற்போது சிறிய பூசணிக்காய் போன்று இருப்பார்கள். பிரசவ தேதி வரவில்லை என கவலை வேண்டாம், விரைவில் நம் பிள்ளை உலகை காண தயாராக இருப்பார்.

 

வாரம் 41:

அவ்வளவு தான், நம்முடைய வெயிட்டிங் ஓவர். கைகளில் பிள்ளைகளை தாங்கி செல்லம்! தங்கம்! என கொஞ்ச தயாராகலாம்.

அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்…

#pregnancymilestones

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.