6 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
குறைப்பிரசவம் என்பது கர்ப்பப்பை வாய் 20 வாரங்கள் அப்புறமோ அல்லது 37 வாரங்கள் முன்போ திறந்து குழந்தை வெளி வருவதாகும். குறைப்பிரசவம் காரணமாக பிறப்பிலேயே குழந்தைக்கு குறைபாடு உண்டாகலாம். இவ்வாறு குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பும் தேவைப்படுகிறது. இதற்காக நியோநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட் உதவுகிறது. இவ்வாறு குறைப்பிரசவமாக பல காரணங்கள் உண்டு. அவை என்னவென்பதையும், இதனை எப்படி தவிர்ப்பது என்பதையும் இப்போது இந்த பயனுள்ள பதிவின் மூலம் நாம் பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
குறைப்பிரசவத்திற்கான அறிகுகள் என்னென்ன?
எப்போது மருத்துவரை பார்ப்பது?
மேல் காணும் அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால், கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை பொய்யான பிரசவ வலி உண்டானால் அதை பற்றிய கவலையும் உங்களுக்கு வேண்டியதில்லை.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு என்னவெல்லாம் ஏற்பட வாய்ப்புண்டு?
இதனை எவ்வாறு தடுப்பது?
1. ஒழுங்காக செக்கப் செல்லுதல்:
பிரெனெட்டல் விசிட் மூலமாக நம்முடைய ஆரோக்கியமும், பிள்ளையின் ஆரோக்கியமும் கண்காணிக்கப்படும். ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கவனிப்பர். அதோடு, ஏற்கனவே குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளதா என்ற மெடிக்கல் ரெக்கார்டையும் மருத்துவர்கள் பார்ப்பார்கள்.
2. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்க முறை:
நல்ல சத்தான உணவு பொருட்களால் உங்களின் கர்ப்பகாலம் ஆரோக்கியமாக இருக்கும். கேரட், காலிபிளவர், முட்டைக்கோசு, பச்சை பீன்ஸ் போன்றவை குறைப்பிரசவத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அவசியம் என்றும் இந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.
3. கர்ப்பக்கால இடைவெளி அவசியம்:
முதல் முறை கர்ப்பமாவதற்கும், இரண்டாவது முறை ஆவதற்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டுமெனவும் சில ஆய்வுகள் கூறுகிறது. அதனால், கர்ப்பம் தரிக்கும் இடைவெளி குறித்து டாக்டர் ஆலோசனை பெறுவது நல்லது. ஆறு மாதங்களுக்கு குறைவான இடைவெளியில் மீண்டும் கர்ப்பம் தரிப்பது குறைப்பிரசவத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
4. சில நாள்பட்ட பிரச்சனைகள்:
சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மிகுதியாக இருத்தல், உடல் பருமன் போன்றவை குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. அதனால், உங்களுடைய மெடிக்கல் ரெக்கார்டு தொடர்பான விஷயங்களை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.
5. மருந்து/மாத்திரை எடுத்துக்கொள்ளல்:
டாக்டரின் பரிந்துரையின்றி எந்த வித மருந்து மாத்திரைகளையும் உட்கொள்வது நல்லது கிடையாது.
6. மனஅழுத்தம் வேண்டாம்:
மன அழுத்தம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது கண்டிப்பாக செய்யக்கூடாது. என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும்? செய்ய வேண்டாம்? என்பதை உங்களின் டாக்டரிடம் கேட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பதட்டம் போன்ற எந்தவொரு நெகட்டிவான விஷயங்களையும் நினைப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
மருத்துவர் எதை எல்லாம் பார்ப்பார்?
1. எப்போது பிரசவம் குறித்த அறிகுறி தெரிந்தது?
2. இப்போதும் பிரசவம் குறித்த அறிகுறியை நீங்கள் உணர்கிறீர்களா?
3. ஒரு மணி நேரத்தில் பிரசவ அறிகுறியை எத்தனை முறை உணர்கிறீர்கள்
4. யோனி இரத்தக்கசிவு ஏதாவது ஏற்பட்டதா?
5. காய்ச்சல் அல்லது ஏதாவது தொற்று அறிகுறி காணப்பட்டதா?
6. இதற்கு முன்னால் கருச்சிதைவோ, கர்ப்பப்பை வாய் அறுவை சிகிச்சையோ செய்திருக்கிறார்களா?
எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
1. டாக்டரை பார்ப்பதில் தாமதம் கூடாது.
2. குறைப்பிரசவ அறிகுறி தெரிந்தால் நிச்சயம் உதவி வேண்டும். தனியாக எதையும் செய்ய முயலக்கூடாது. ஏனென்றால், இந்த சமயம் நம்மால் சுயநினைவில் இருக்க முடியாமல் போகலாம்.
3. உங்களிடம் எந்த வித சந்தேகம் இருந்தாலும் கண்டிப்பாக அதை ஒளிவு மறைவின்றி மருத்துவரிடம் கேட்கவும்.
உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகள்?
1. எனக்கு பிரசவம் ஆக போகிறதா?
2. எனது கர்ப்பம் நீடிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
3. இந்த சூழலில் என் குழந்தைக்கு எதுவெல்லாம் நல்லது?
4. எந்த அறிகுறியை எல்லாம் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்?
5. எப்போது நான் டாக்டரை அணுகுவது?
குறைப்பிரசவம் கண்டறிய முடியாத ஒன்று என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதனை நாம் சரியான பாதையில் கொண்டு செல்லலாம். டாக்டர்களுக்கு பிரசவத்தை தாமதப்படுத்தி குழந்தையின் வளர்ச்சியில் எப்படி அக்கறை காட்டுவது என்பது நன்றாகவே தெரியும். அதனால், அவர்கள் உதவியுடன் நிச்சயம் உங்களால் இந்த குறைப்பிரசவத்தை வென்று ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.
A