• Home  /  
  • Learn  /  
  • உங்கள் பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாட புதுப்புது ஐடியாக்கள்
உங்கள் பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாட புதுப்புது ஐடியாக்கள்

உங்கள் பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாட புதுப்புது ஐடியாக்கள்

7 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம் பிள்ளைகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமெனவே ஒவ்வொரு முறையும் நினைப்போம். நம் பிள்ளைகளின் மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் பிறந்தநாளே. அவர்களுக்கு நாம் தரவிருக்கும் பிறந்தநாள் பரிசில் தொடங்கி, பிறந்தநாள் கொண்டாட்டம் வரை என அனைத்தையும் சிறந்த முறையில் நாம் செய்ய வேண்டும். இது அவர்கள் மீதான அன்பை நாம் வெளிப்படுத்தும் விதமும் கூட. இப்போது நம்முடைய பிள்ளைகளின் பிறந்தநாளை கொண்டாட என்னவெல்லாம் புது ஐடியாக்கள் உள்ளது என்பதை இந்த சுவாரஸ்யமான பதிவின் மூலம் நாம் காணலாம் வாருங்கள்.

 

1 வயது பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாடுவது எப்படி?

1. ஸ்பெஷல் தொப்பி:

பர்த் டே ஸ்பெஷல் தொப்பியை அவர்களுக்காக நாம் வாங்கலாம். முடிந்தால், அதில் அவர் பெயர்களை முத்து மணி கொண்டு அலங்காரம் செய்யலாம். இது அவர்களுக்கு கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கும்.

 

2. மியூஸிக்கல் பார்ட்டி:

ரைம்ஸ் அல்லது பாடல்களை பிளே செய்து, அதற்கு நம்முடைய பிள்ளைகளை உற்சாகமாக ஆட வைக்கலாம்.

 

3. ஸ்பெஷல் கேக்:

கேக் வாங்கும்போது, உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த விஷயங்களை அதில் புகுத்தலாம். உதாரணமாக விலங்கு படம் போன்றவற்றை வரையலாம். மியூஸிக்கல் கேக் கூட சிறந்த தேர்வாக இருக்கும்.

 

4. பப்புல்ஸ் விளையாட்டு:

பிள்ளைகளின் முன்னால் பப்புள்களை ஊதி அதை உடைக்க உற்சாகப்படுத்தலாம்.

 

5. பிடித்த பொம்மைகள்:

முடிந்தால், அழைத்த விருந்தினர்களிடம் சொல்லி நம் பிள்ளைக்கு பொம்மையை பரிசாக கொடுத்து உற்சாகமடைய செய்யலாம். அதோடு, நம் வீட்டிற்கு விருந்தினராக வரும் குட்டீஸ்க்கும் ஏதாவது சிறு அன்பளிப்பு கொடுத்து அனுப்பி வைக்கலாம்.

 

2 வயது பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாடுவது எப்படி?

1. பார்ட்டி ஹாலை பளபளக்க செய்யுங்கள்:

அவர்களுடைய ரூமையும், பார்ட்டி ஹாலையும் குளோ ஸ்டிக்கர்கள் கொண்டு மினுமினுக்க செய்யுங்கள். அவை அடர் நிறமாக இருப்பது நல்லது. இதனால், உங்கள் பிள்ளைகள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப அதில் வரைந்து அழகுப்படுத்தலாம்.

 

2. சேற்றில் விளையாடுதல்:

ஒரு இடத்தை ஒதுக்கி பொம்மை கார்களை வைத்து விளையாடுவதற்கு ஏற்ற கார் ரேஸ் நிகழ்வை உருவாக்கலாம். அதில் தடைகளாக மண் சேற்றுக்களை ஆங்காங்கே வைத்து சக தோழர்களுடன் சேற்றில் விளையாட அவர்களை நாம் ஊக்குவிக்கலாம்.

 

3. பூச்சிகளை உருவாக்குதல்:

இந்த வயதில் பூச்சிகளுடன் விளையாட அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதனால், பேப்பர்களை கொண்டு சக நண்பர்களுடன் பூச்சிகளை வீட்டிலேயே உருவாக்க அவர்களை நாம் ஊக்குவிக்கலாம்.

 

4. மியூஸிக்கல் பார்ட்டி:

பாடல்களை பிளே செய்து பந்தை ஒவ்வொருவரிடமும் மாற்றி கொடுக்க செய்யுங்கள். பாடல் நிற்கும்போது யார் கையில் பந்து உள்ளதோ அவர்களை ஏதேனும் ஒரு வேடிக்கையான செயலை செய்ய சொல்லலாம். விளையாட்டாக சென்றாலும், கேலியாக இல்லாதளவுக்கு நாம் கவனித்துக்கொள்ள வேண்டும்.

 

5. வடிவங்களை அடையாளம் காணுதல்:

வெவ்வேறு வடிவங்கள் உடைய பலூன் அல்லது ஸ்டிக்கர்களை மேலே பறக்கவிட்டு அதனை பிடிக்க சொல்லுங்கள். அவர்கள் கையிலிருப்பது என்ன வடிவமென கேட்டு உற்சாகப்படுத்தலாம்.

 

6. பரிசுகளை வழங்குதல்:

விருந்தினராக பங்கேற்கும் ஒவ்வொரு குட்டீஸ்க்கும் நாம் சிறிய பரிசுகளை வழங்கி, மகிழ்வோடு அனுப்பலாம்.

 

3 வயது பிள்ளையின் பிறந்தநாளை கொண்டாடுவது எப்படி?

1. ஜங்கிள் தீம்:

இது மிகவும் வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடிய ஒன்று. பிள்ளைகளை விலங்கு போன்று மாறுவேடமிட்டு வர சொல்லலாம். அதே போல, விலங்கு வடிவத்தில் உணவை தயார் செய்தல், ஒரு குட்டி மிருக காட்சி சாலையை கூட பொம்மையை வைத்து உருவாக்குதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.

 

2. பொம்மலாட்டம் அல்லது மேஜிக் ஸோ:

முடிந்தால் அருகில் உள்ள மெஜீசியனை வைத்து ஒரு ஸோ செய்யலாம். பொம்மைகளை விரலில் மாட்டிக்கொண்டு அதை வைத்து கதைகளை சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம்.

 

3. ஃபேன்சி டிரெஸ் ஸோ:

பிள்ளைகளை, அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன், சூப்பர் ஹீரோ, பிடித்த கதையில் வரும் கதாப்பாத்திரம் போன்ற ஆடைகளில் வரவழைத்து ஊக்குவிக்கலாம்.

 

4. ஸ்டேச்சூ, ஃபிரீஷ் கேம்:

பாடலை பிளே செய்து பிள்ளைகளை ஆட விடுங்கள். பாடல் திடீரென நிறுத்தப்படும்போது, அவர்கள் ஆடிய அதே நிலையில் அப்படியே சிலை போல் இருக்க வேண்டும். இந்த விளையாட்டில் வெவ்வேறு விதமான பாடல்களை பிளே செய்வது அவர்கள் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

 

5. பலூன் உடைக்கும் விளையாட்டு:

பலூன் உள்ளே சாக்லேட்டுகள், மிட்டாய்கள் போன்றவற்றை வைத்து ஊதுங்கள். அவை பறக்கும்போது, அதனை உடைக்க வைத்து அதிலுள்ள சாக்லேட்டுகளை, பிஸ்கட்டுகளை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம்.

நண்பிகளே, உங்கள் பிள்ளையின் பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடுனீர்கள், கொண்டாட திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை நீங்களும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.

#familyandrelationship

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.