இந்த அறிகுறி எல்லாம் இருக்கிறதா? அப்படி என்றால் பிரசவத்துக்கு தயாராகுங்கள்!

cover-image
இந்த அறிகுறி எல்லாம் இருக்கிறதா? அப்படி என்றால் பிரசவத்துக்கு தயாராகுங்கள்!

பெரும்பாலான அம்மாக்களுக்கு இருக்கும் சந்தேகமிது. அது, எப்போது தனக்கு பிரசவம் நடக்கும் என்பது தான். கர்ப்பமாக இருக்கும்போது ஆரம்ப அறிகுறியாக வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை இருக்கும். அப்போது லேசான பதட்டம் நமக்கு காணப்படும் தான். அதன்பிறகு சகஜ நிலைக்கு திரும்ப, அதே பதட்டம் பிள்ளை பிறக்கும் முன்பு ஏற்படக்கூடும். ஆனால், நம்முடைய கர்ப்ப காலத்தை சரியாக திட்டமிட்டு அதன்படி சென்றால், இதைவிட நம்முடைய வாழ்வில் ஒரு அழகிய தருணம் இருந்துவிட முடியாது. இன்னும் 24 முதல் 48 மணி நேரத்தில் உங்களின் பிரசவம் நடக்கவிருக்கிறது என்பதற்கான 8 அறிகுறிகளை தான் நாம் இந்த பயனுள்ள பதிவில் காண போகிறோம்.

 

எந்த மாதிரியான அறிகுறிகள் எல்லாம் பிரசவத்துக்கு முன்னால் இருக்கும்?

1. பனிக்குடம் உடைதல்:

இதுதான் நாம் உணரும் முதல் அறிகுறியாகும். இந்த பனிக்குட நீர் தான் நம்முடைய பிள்ளைகளுக்கு இத்தனை நாள் பாதுகாப்பாக இருந்திருக்கும். இதன் உள்ளே தான் அவர்களுடைய வளர்ச்சி சரியான முறையில் சென்றிருக்கும். நம்மை காணும் ஆவலில் இருக்கும் அவர்கள், பனிக்குட பையை உடைத்துக்கொண்டு வெளியில் வர தயாராகிறார்கள். இதை தான் நாம் பிரசவம் என்று அழைக்கிறோம்.

பனிக்குடம் உடைந்தவுடன், அவர்கள் தலையை வைத்து தள்ள தொடங்குவார்கள். அப்போது நமக்கு கூடுதல் அழுத்தம் இருக்கும்.

ஒரு சிலருக்கு நீர் திரவம் வடிவது போலவும் உணர செய்வார்கள்.

 

2. கர்ப்பப்பை வாய் சளி வெளியாகுதல்:

இது நம்முடைய கர்ப்பப்பையிலிருந்து வெளியாகும் சளியாகும். இது தடிமனாக காணப்படும். இது தான் நம்முடைய கருப்பையில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இவ்வளவு நாள் பாதுகாப்பாக இருந்து வந்தது. ஆனால், பிரசவம் நெருங்கிய உடன், இந்த சளி போன்ற திரவம் வெளியாக தொடங்கும்.

சிலர் டாய்லெட் செல்லும்போது இந்த கர்ப்பப்பை வாய் சளி வெளியாவதை பார்ப்பார்கள். சிலர் அவர்களுடைய கீழாடையில் இதை கவனிப்பார்கள்.

இந்த சளியின் நிறமானது தெளிவாகவோ அல்லது பிங்க் நிறத்திலோ காணப்படும். சில சமயம் லேசான இரத்தத்தையும் நாம் காணலாம்.

கர்ப்பப்பை வாய் சளி வெளியாவது நாம் பிரசவ நிலையை எட்டியதற்கான அடையாளமாகும். ஆனால், இது பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு அல்லது சில மணி நேரங்கள் முன்பு கூட நடக்கும்.

 

3. உடல் எடை குறைதல்:

பனிக்குட நீர் உடையும்போது நம்முடைய உடல் எடை குறைந்து காணப்படுவதாக தோன்றும். நம்முடைய பிள்ளைகள் சிறுநீர்க்குழாய் நோக்கி அழுத்தம் கொடுக்க இதனால் அடிக்கடி யூரின் போகவும் எண்ணம் உண்டாகும்.

 

4. தேவையற்ற குழப்பம்:

பிரசவத்துக்கு 24 முதல் 48 மணி நேரம் முன்பு நாம் பலவித விஷயங்களை யோசித்து குழப்பிக்கொள்ள வாய்ப்புள்ளது. திடீரென உற்சாகமாக கூட நாம் காணக்கூடும்.

சில அம்மாக்கள் பிரசவத்துக்கு மருத்துவமனை எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை யோசித்து எடுத்து வைக்க கூட மிகவும் முனைப்புடன் இருப்பார்கள்.

 

5. முதுகு வலி:

கர்ப்பமாக இருக்கும்போது முதுகு வலி பொதுவான ஒன்று. பிரசவத்துக்கு முன்னால் உங்களுடைய மூட்டுக்கள் மற்றும் தசைநார் பகுதி இயல்பாகவே தளர்வடையும். கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் ஏற்கனவே சில வலிகளை அனுபவித்திருந்தால், பிரசவத்துக்கு முன்பு வரக்கூடிய வலி அதிலிருந்து மாறுபட்டும் காணப்படும்.

பிரசவத்துக்கு 24 முதல் 48 மணி நேரம் முன்பாக வரக்கூடிய முதுகு வலி மிகவும் மோசமாக இருக்கும். அது இடுப்பு பகுதி வரை பிரபதிபலித்து காணப்படலாம்.

 

6. பிரசவ சுருக்கம்:

பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் அல்லது பொய்யான பிரசவ வலி என்பது, உண்மையான பிரசவ வலி வருவதற்கு வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பு ஏற்படும். இது நம்முடைய கருப்பை தசைகளில், பிரசவத்தின்போது ஏற்படும். ஆனால் இந்த சுருக்கம் அசவுகரியமாக இருக்காது. நமக்கு வரும் உண்மையான பிரசவ வலியை விட சற்று குறைவாகவே இது இருக்கும்.

 

7. கர்ப்பப்பை வாய் விரிதல்:

பிரசவத்தை நெருங்கும்போது வாரந்தோறும் மருத்துவமனை செல்ல வேண்டிய சூழல் உண்டாகும். அப்போது தான் நம்முடைய கர்ப்பப்பை வாய் எந்தளவு விரிந்துள்ளது என்பதை நம் மருத்துவர் கவனிப்பார்.

சுகப்பிரசவத்துக்கு குறைந்தது 10 செ.மீ கர்ப்பப்பை வாய் விரிந்திருக்க வேண்டும். உங்களது கர்ப்பப்பை வாய் குறைந்தது 2 முதல் 3 செ.மீ விரிந்திருந்தால், 24 முதல் 48 மணி நேரத்தில் நமக்கு பிரசவம் நடக்க வாய்ப்புள்ளது.

 

8. மூட்டுகள் தளர்வடைதல்:

கர்ப்பத்தின் இறுதி நிலையில் ரிலேக்ஷின் எனும் ஹார்மோன் வெளியாக, இதனால் மூட்டுகள் மற்றும் தசை நார்கள் பிரசவத்துக்கு தயாராகும்.

பிரசவத்துக்கு சில நாட்கள் முன்பு, நம்முடைய இடுப்பு பகுதி மற்றும் முதுகில் தளர்வு காணப்படுவதை உணரலாம். வயிற்றுப்போக்கையும் சில சமயம் நம்மால் உணர முடியும்.

கர்ப்ப காலத்தின் கடைசியில் உணர்வுகள் நமக்கு கலந்தே காணப்படும். ஆனாலும், நமக்கு பிள்ளையை பார்க்க போகிறோம் என்ற உணர்வு பதட்டத்தை மறக்க செய்யும்.

பிரசவம் சில சமயங்களில் கணிக்க முடியாத ஒன்று. ஆனால், நம்முடைய உடலை உற்று நோக்கினால் நிச்சயம் பிரசவ அறிகுறிகளை நம்மால் உணர முடியும்.

அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

#labour
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!