8 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இந்த உலகிலேயே மிகவும் கடினமான ஒரு காரியம் எதுவென்றால் நம்முடைய பிள்ளைகளை தூங்க வைப்பது தான். அவர்களை அமைதிப்படுத்தி தூங்க வைக்கும் அம்மாக்களுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். முன்னெல்லாம், ‘ஆடுமாம் தொட்டி, அசையுமாம் பொன்னூஞ்சல்’ என தாலாட்டி பாடி தூங்க வைத்தோம். ஆனால், இன்றோ சினிமா பாடல் போட்டால் தான் தூங்குவோம் என அவர்கள் அடம்பிடிக்கிறார்கள். உங்களின் பிள்ளைகளை தூங்க வைக்க அற்புதமான பாடல்கள் & ரைம்ஸ் என்னென்ன என இந்த சுவாரஸ்யமான பதிவில் நாம் பார்க்கலாம்.
1. டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்:
இந்த ரைம்ஸை ராகத்துடன் பாடினாலே போதும். நம் பிள்ளைகள் நன்றாக என்ஜாய் செய்வார்கள். இந்த பாடலுக்கு அர்த்தம் என்னவென இன்று வரை யாரும் கேட்டதும் இல்லை. யாரும் பதில் சொன்னதும் இல்லை. ஆனால், ‘டிவிங்கிள்… டிவிங்கிள்…’ என தலையை ஆட்டி பாட ஆரம்பிக்க சைடில் அவர்களுக்கு கொட்டாவி வந்தாலும் வந்துவிடும்.
2. நிலா நிலா ஓடிவா:
இந்த பாடலை பாடினால் நிலா ஓடி வருகிறதோ இல்லையோ, நிச்சயம் நம் பிள்ளைகளுக்கு தூக்கம் ஓடி வந்துவிடும். நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை பாடி தான் என் அம்மா என்னை தூக்க வைத்தாராம்.
3. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு:
நம்முடைய பிள்ளைகளை காலில் போட்டுக்கொண்டு இந்த தாலாட்டு பாடலை பாட, நிச்சயம் பாடல் முடிவதற்கு முன்பே தூக்கம் அவர்களை ஆளும்.
4. அம்மா இங்கே வா வா:
இந்த பாடல் தாய்க்கும், பிள்ளைக்கும் இடையேயான உறவை குறிக்கும் ஒரு பாடலாகும். நம்முடைய பிள்ளைகளுக்கு ஆசை முத்தம் கொடுத்துக்கொண்டே இந்த பாடலை பாடினால், நல்ல கனவோடு அந்த நாளை இனிதே நிறைவு செய்வர்.
5. கண்ணான கண்ணே (திரைப்பட பாடல்):
அட ஆமாம், இன்றைய பிள்ளைகள் தாலாட்டு பாடல் பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா. என் அக்கா குழந்தை இந்த பாடலை கேட்டு தான் இப்போதெல்லாம் தூங்கிக்கொண்டு இருக்கிறாள்.
6. கண்ணம்மா! கண்ணம்மா! அழகு பூஞ்சிலை (திரைப்பட பாடல்):
இந்த பாடலின் ராகம் பிள்ளைகளின் தூக்கத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல் மெதுவாக ஒலிப்பதோடு தாலாட்டாகவும் அமைந்துள்ளது.
7. கை வீசும் காற்றாய் (திரைப்பட பாடல்):
ஸ்ட்ராபெர்ரி திரைப்படத்தில் இருந்து உருவான இந்த பாடல், இன்றைய பல பிள்ளைகளின் பேவரைட் பாடலாக உள்ளது. மொபைலை எடுத்து இந்த பாடலை பிளே செய்துவிட்டு தூங்கியும் விடுகின்றனர்.
8. தாயை போல ஏங்கும் நானும் (சின்னத்திரை பாடல்):
அபியும் நானும் என்ற சீரியலில் வரும் இந்த பாடல் பல அம்மாக்களின் போனில் சேவ் செய்திருக்கும் ஒரு பாடலாகும். வாட்சப் ஸ்டேட்டஸில் இந்த பாடலை வைக்காதே அம்மாக்களே நிச்சயம் இருக்க முடியாது.
மற்ற பாடல்கள்:
இன்றைய நாளில், இன்னும் பலவித பாடல்கள் யூடியூப்பில் வர தொடங்கிவிட்டது. அதுவும் நம் பிள்ளைகளுக்கு பிடித்த கார்ட்டூனுடன் அவை வருவதால், நிறைய பிள்ளைகள் தன் அம்மாவிற்கு தெரியாமலே போனை எடுத்து பிளே செய்து கேட்கவும் தொடங்கிவிட்டனர்.
அதேபோல, பிள்ளைகளை பெற்ற அம்மாக்கள் யூ-டியூப் கிட்ஸ் என்பதை இன்ஸ்டால் செய்து இன்னும் பல பாடல்களை பிள்ளைகளுக்காக பிளே செய்யலாம்.
சரிகம கர்வான் மினி கிட்ஸ்:
இன்றைய நாளில் பலரும் விரும்பி வாங்கும் ஒரு புராடக்ட் இது. இதனில், கதைகள், பிள்ளைகளுக்கு தேவையான ரைம்ஸ், கற்றல் சம்பந்தப்பட்டவை என பிள்ளைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இப்போது வருகிறது. இதன் விலையும் மிகக்குறைவே என்பதால், பலரும் வாங்குகின்றனர். அதோடு, பிள்ளைகளின் போன் உபயோகிக்கும் பழக்கமும் இதனால் குறைகிறது.
நண்பிகளே, உங்களின் பிள்ளையை தூங்க வைக்க என்ன மாதிரியான பாடல்களை நீங்கள் பாடுவீர்கள்? நீங்களும் இந்த சுவையான அனுபவத்தை மற்ற அம்மாக்களுடன் கமெண்ட் செக்சனில் பகிர்ந்து கொள்ளலாமே.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.