ஆட்டிசம் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

cover-image
ஆட்டிசம் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

ஆட்டிசம் என்பது ஒரு பிரச்சனை தான் என்றாலும், இதை குணப்படுத்துவது பெற்றோராகிய நம் கைகளில் தான் உள்ளது. முதலில் இது ஒரு நோய் என்பதை மறந்து நம் பிள்ளைகளை பார்க்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதைப்பற்றிய கூடுதல் பயனுள்ள தகவலை நாம் இப்போது பார்ப்போம் வாருங்கள்.

 

ஆட்டிசம் என்றால் என்ன?

இது வளர்ச்சி தொடர்பான ஒரு பிரச்சனையாகும். தொடர்பு கொள்ளுதலிலும், சமூகத்துடன் ஒன்றி வாழ்வதிலும் ஏற்படும் பிரச்சனை தான் ஆட்டிசம். பொதுவாக ஆட்டிசம் என்பது, நம்மை சுற்றியுள்ளவர்களின் நடத்தையை பொருத்தும் அமையும்.

 

நம்முடைய பிள்ளைகளின் சமூக வளர்ச்சி திறனை ஆட்டிசம் எவ்வாறு பாதிக்கிறது?

ஆட்டிசம் உள்ள பிள்ளைகள் மற்றவர்களோடு பேச கூச்சப்படுவார்கள். மிகவும் நெருங்கிய உறவுகளை கூட அடையாளம் கண்டுக்கொள்ள சிரமம் அடைவார்கள்.

 

ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன?

  • முதல் பிறந்தநாள் முதலே பெயர் சொல்லி அழைத்தாலும் கண்டுக்கொள்ளாது இருத்தல்
  • சக நண்பர்களுடன் விளையாட மறுத்தல், எதையும் பகிர்ந்துக்கொள்ள மறுத்தல், பேசவும் மறுத்தல்
  • தனியாக இருக்க மட்டுமே விரும்புதல்
  • பெற்றோர்கள் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினாலும் நிராகரித்தல்
  • கண் பார்த்து பேச சிரமம் கொள்ளுதல்
  • அவர்கள் அப்செட்டாக இருக்கும்போது, அசவுகரியமாக இருத்தல்
  • உணர்வுகளை புரிந்துக்கொள்ள சிரமம் அடைதல்

 

ஆட்டிசம், தொடர்பு கொள்ளும் திறனை எப்படி பாதிக்கிறது?

40% ஆட்டிசம் உடைய பிள்ளைகள் பேச கூச்சப்படுவார்கள். 25% முதல் 30% பிள்ளைகள், மொழி திறனை வளர்த்து, பின் அதனை இழக்கிறார்கள்.

 

தொடர்பு கொள்வதில் உண்டாகும் மற்ற பிரச்சனைகள் எவை?

பேசுவதில் தாமதம்
சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுதல்
பிரதி பெயர்களை மாற்றி சொல்லுதல், (‘நீ’ என்பதற்கு பதில் ‘நான்’ என சொல்லுதல் போன்றவை)
ஹாய் போன்றவை கூட சொல்ல சிரமம் கொள்ளுதல்
பேசும்போது அந்த தலைப்பை புரிந்துக்கொள்ளாது இருத்தல்
கேலியாக பேசுவதை கூட புரிந்துக்கொள்ள முடியாது இருத்தல்
தேவைகளையும், உணர்வையும் வெளிப்படுத்துவதில் குழப்பம்

 

ஆட்டிசத்தை தடுக்க முடியுமா?

ஆட்டிசம் என்பது கணிக்க முடியாத ஒன்று என்றாலும், இதனில் மரபணு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால், கர்ப்பமாக இருக்கும்போதே பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் இருக்குமா என்பதை யாராலும் கண்டறிய முடியாது. ஆனால், ஒரு சில விஷயங்களை செய்து முன் கூட்டியே தடுக்கலாம். அவை,

 

ஆரோக்கியமான வாழ்வு:

ரெகுலர் செக்கப், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை கர்ப்பமாக இருக்கும்போதே அவசியம். கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின்கள் மற்றும் மாத்திரைகளிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

எடுத்துக்கொள்ளும் மாத்திரை:

எந்தவொரு மாத்திரையையும் எடுத்துக்கொள்ளும் முன்பு டாக்டர் ஆலோசனை நிச்சயம் வேண்டும். இல்லையேல் பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

 

ஆட்டிசத்தை டாக்டர்கள் எப்படி கண்டறிவர்?

முன் கூட்டிய பரிசோதனைகள், ஆட்டிசத்தை அறிந்து அதற்கான சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆனாலும், இதற்கென எந்த ஆய்வு பரிசோதனைகளும் இல்லை. அவர்களின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை கொண்டு தான் ஆட்டிசம் இருக்கும் பிள்ளையை அறிய முடியும். ஆட்டிசம் உள்ள, ஒரு சில பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக அறிவாளியாகவும் இருப்பார்கள்.

 

வெல்-சைல்டு விசிட்:

பிள்ளைகளின் 18 முதல் 24 மாதங்களில் இந்த செக்கப் அவசியமாகிறது. இந்த சோதனையில், குழந்தை நல மருத்துவர் நம் பிள்ளைகளின் கண் பார்த்து பேச செய்வார்கள். அதோடு, நம்மிடம் குடும்பத்தில் யாருக்காவது இந்த பிரச்சனை உள்ளதா என்ற மெடிக்கல் ரெக்கார்டுகளையும் நம்மிடம் இருந்து பெறுவார்.

 

டாக்டர்கள் எதிர்பார்க்கும் மைல்கற்கள் என்னென்ன?

1. ஆறு மாதத்தில் பிள்ளையின் சிரிப்பு
2. ஒன்பது மாதத்தில் அவர்களின் முக பாவனை மற்றும் கேலி செய்யும் ஒலி
3. பன்னிரண்டு மாதங்களில் பிதற்றல் மற்றும் கொஞ்சுதல்

 

டாக்டர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள் எவை?

1. அவர்களின் செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றனவா?
2. அவர்கள் கண் பார்த்து பேச கடினமாக உள்ளதா?
3. மற்றவர்களுடன் பழக சங்கடமாக உணர்கிறார்களா?
4. யாராவது ஏதாவது கேட்டால், ரெஸ்பான்ஸ் செய்கிறார்களா?
5. மற்றவர்கள் செய்யும் செயல்களை அவர்களால் புரிந்துக்கொள்ள முடிகிறதா?
6. அவர்கள் ஒளி, ஒலி, அல்லது வெப்பநிலையை உணர்கிறார்களா?
7. தூக்கம் அல்லது செரிமான பிரச்சனை உள்ளதா?
8. அவர்களுக்கு கோபம் வருகிறதா?

 

பெரியவர்கள் ஆன பின் ஆட்டிசம் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?

முடிந்தளவுக்கு அவர்கள் சிறு வயதிலேயே இதனை கண்டறிவது மிகவும் நல்லது. கண் தொடர்பற்று இருத்தல், மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை செய்தல், உணர்வதில் சிரமம் போன்றவை இருந்தால் நிச்சயம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

அனைத்து பிள்ளைகளுக்குமே 18 முதல் 24 மாதங்களில் குழந்தை நல மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லதாகும். அதனால், பெரும்பாலான ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளை இரண்டு வயதிற்குள் குணப்படுத்தி விடவும் முடிகிறது.

ஆட்டிசம் உள்ள பிள்ளையை வித்தியாசமாக பார்க்காமல், அவர்களுடன் பேசி, பழகி சமூகத்துடன் ஒன்ற ஊக்குவித்தாலே நிச்சயம் நல்ல மாற்றத்தை காண முடியும். நாமும் அவர்களை ஒதுக்கி வைத்தால் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மோசமாக இருக்கலாம். ஆட்டிசத்தை வெல்வோம், பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்து தருவோம்.

#specialneeds #boostingchilddevelopment
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!