• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன்கள்
கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன்கள்

கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்படும் ஸ்கேன்கள்

10 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பொதுவாக பல கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் சந்தேகம், கர்ப்பமாக இருக்கும்போது நான் எப்போது டாக்டரை பார்ப்பது? அவர் என்ன மாதிரியான ஸ்கேன்கள் எல்லாம் எடுப்பார் என்பது தான். இதனை விரிவாக விளக்குகிறது இந்த பயனுள்ள பதிவு.

 

கர்ப்பகால அல்ட்ரா சவுண்ட்:

இந்த ஸ்கேனின் போது பிளாஸ்டிக் டிரான்ஸ்ட்யூசர் பயன்படுத்தி நம்முடைய கர்ப்பப்பைக்கு ஒலி அலை அனுப்பப்படுகிறது. இந்த ஒலி அலைகள், மெஷினுக்கு சிக்னலை அனுப்ப, அவை இமேஜாக மாற்றப்படுகிறது.

இந்த அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் நம்மால் பலவற்றை அறிய முடிகிறது. ஓர் உதாரணத்துக்கு, பிள்ளையின் வளர்ச்சி, அசாதாரண சூழ்நிலை, பிரசவம் நடக்கவிருக்கும் தேதி, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வயிற்றில் உள்ளனரா, நஞ்சுக்கொடியின் நிலை, பிள்ளையின் பாலினம் போன்றவை அறியப்படும்.

 

ஆரம்ப கால பிரெக்னென்சி அல்ட்ரா சவுண்ட் (6 முதல் 8 வாரம்):

இதனை பேபி சோனோகிராம் என்றும் அழைப்பர். ஆறு முதல் எட்டு வார கர்ப்பத்தின் போது இது எடுக்கப்படும். ஆனால், எல்லா பெண்களுக்கும் இந்த ஸ்கேன் எடுக்கப்படுவதில்லை. நமக்கு இரத்தக்கசிவு அதிகம் இருந்தாலோ, அடிவயிற்றில் வலி இருந்தாலோ, கருச்சிதைவு ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலோ தான் இந்த ஸ்கேன் பரிந்துரைக்கப்படும்.

இந்த ஸ்கேன் யோனியுடனான ஒன்றாகும். அப்போது தான் பிள்ளையின் தெளிவான படத்தை காண முடியும். இந்த ஸ்கேனில், பிறப்புறுப்பு வழியாக கருப்பைக்கு ஒலி அலைகள் அனுப்பப்படுகிறது. அவை இமேஜாக மாற்றப்பட்டு நம் பிள்ளையின் வளர்ச்சி குறித்து டாக்டர்களால் அறியப்படுகிறது.

ஆறு வார கர்ப்பத்தில், நம் பிள்ளையின் இதயத்துடிப்பையும் டாக்டர்கள் அறிவார்கள். அதோடு, பிரசவம் நடக்கவிருக்கும் தேதி (தோராயமாக), எத்தனை குழந்தைகள் வயிற்றில் உள்ளனர் போன்றவற்றையும் அறிய முடியும். கரு சரியான இடத்தில் வளர்கிறதா என்பதையும் மருத்துவர்கள் பார்ப்பார்கள்.

 

10 முதல் 14 வாரங்களில் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட்:

இதனை டேட்டிங் அல்ட்ரா சவுண்ட் என அழைப்பர். இதுவும் பிரசவ தேதி, பிள்ளையின் தலை முதல் பிட்டம் வரையான நீளம், கருவில் இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை போன்றவற்றை மட்டுமே அறிய உதவும் ஸ்கேனாகும்.

 

நியூக்கள் டிரான்ஸ்லூசன்ஸி அல்ட்ரா சவுண்ட் (11 முதல் 14 வாரங்கள்):

இதனை NT ஸ்கேன் என்றும் அழைப்பர். இதனை கொண்டு குரோமோசோம்களின் 21-ஆவது ஜோடியில், மூன்று குரோமோசோம்கள் உள்ளதனால் ஏற்படும் ஒரு பிறப்பியல் மருத்துவக் கோளாறு (டவுன் நோய்க்குறி), இதய நோய்கள், மற்ற குரோமோசோம் அசாதாரண நிலை பிரச்சனைகள் போன்றவை அறியக்கூடும். பிள்ளையின் கழுத்து எப்படி உள்ளது என்றும் மருத்துவர்கள் பார்ப்பார்கள்.

 

அனாட்டமி ஸ்கேன் (18 முதல் 22 வாரங்கள்):

இந்த ஸ்கேனில் நம் பிள்ளைகளின் முழு வளர்ச்சியும் நன்றாக செக் செய்யப்படும். அதோடு, நம் பிள்ளைகளின் இதயத்துடிப்பு எப்படி உள்ளது, மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் வளர்ச்சியும் பார்க்கக்கூடும். பிள்ளைகளின் கை மற்றும் கால் விரல்கள், நஞ்சுக்கொடி எப்படி உள்ளது, பனிக்குட நீர் சரியாக உள்ளதா போன்றவையும் பார்க்கப்படலாம்.

 

மூன்றாவது மாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:

கர்ப்பிணிகளின் உடல் நலன் பொறுத்தே இது அமையும். அவர்கள் கர்ப்பகாலம் சிக்கலில் இருந்தால் மட்டுமே இது எடுக்கப்படும். உதாரணத்திற்கு, உயர்ந்த இரத்த அழுத்தம், இரத்தக்கசிவு, பனிக்குட நீரின் அளவு, குறைப்பிரசவ வாய்ப்பு போன்றவை பார்க்கப்படலாம்.

 

டாப்ளர் அல்ட்ரா சவுண்ட்:

வழக்கமான அல்ட்ரா சவுண்ட் ஒலி அலைகள், இமேஜாக மாற்றப்படும். ஆனால் இது, இரத்த ஓட்டம் மற்றும் உயர்ந்த இரத்த அழுத்தத்தை அளவிட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை அனுப்பும் முறையாகும். இதன் உதவியுடன் நம் பிள்ளைக்கு போதுமான இரத்தம் இருக்கிறதா என்பது கணக்கிடப்படும்.

 

எத்தனை அல்ட்ரா சவுண்ட் எடுப்பது கர்ப்பத்தின் போது பாதுகாப்பானது?

மருத்துவ ரீதியாக எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் தாய், சேய் இருவருக்கும் பாதுகாப்பானதே. அதோடு, இதனில் எந்தவித கதிர்களும் வெளிப்படுவதில்லை. வல்லுநர்களால் மட்டுமே இது செய்யப்படும்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இது உங்களுக்கு எத்தனாவது மாதம் கர்ப்பிணிகளே? இப்போது எந்த மாதிரியான ஸ்கேன் எடுக்க உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தார்? கருவில் இருக்கும் பிள்ளைகள் உங்களை உதைக்க தொடங்கிவிட்டார்களா? ஒரு நாளைக்கு எத்தனை முறை அவர்கள் உதைக்கின்றனர். இது போன்ற பல சுவாரஸ்யமான தகவலை நீங்களும் மற்ற கர்ப்பிணி பெண்களோடு பகிர்ந்துக்கொள்ளலாமே.

#pregnancymilestones

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.