• Home  /  
  • Learn  /  
  • பிள்ளையை தொப்புள் கொடி சுற்றி இருப்பது பற்றிய தகவல்கள்
பிள்ளையை தொப்புள் கொடி சுற்றி இருப்பது பற்றிய தகவல்கள்

பிள்ளையை தொப்புள் கொடி சுற்றி இருப்பது பற்றிய தகவல்கள்

12 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிறக்கும்போது நம்முடைய பிள்ளையின் தொப்புள் கொடி சுற்றி இருப்பதை பற்றி பலவித குழப்பங்கள் எப்போதுமே நமக்குண்டு. இந்த குழப்பங்கள் உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த பயனுள்ள பதிவு நமக்கு நிச்சயம் உதவும்.

 

தொப்புள் கொடி சுற்றி இருப்பது என்றால் என்ன?

பொதுவாக இது கர்ப்பமாக இருக்கும்போதோ, பிரசவத்தின் போதோ ஏற்படும். தொப்புள் கொடி தான், நம்முடைய பிள்ளைகளுக்கு இரத்தம், ஆக்சிஜன், ஊட்டச்சத்து போன்றவற்றை வழங்கக்கூடியதாகும். தொப்புள் கொடி சுற்றி இருப்பதை குறித்த கவலை நமக்கிருந்தாலும், இதனால் எந்தவித ஆபத்துமில்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

 

தொப்புள் கொடி சுற்றி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பார்கள்?

அல்ட்ரா சவுண்ட் கொண்டு பிள்ளையின் தொப்புள் கொடி சுற்றி இருப்பதை கண்டறிய முடிகிறது.

 

தொப்புள் கொடி சுற்ற காரணங்கள் என்ன?

1. நம்முடைய வயிற்றில் ஒன்றுக்கு மேல் பிள்ளைகள் இருந்தால் தொப்புள் கொடி சுற்றக்கூடும்.

2. அதேபோல அளவுக்கு அதிகமான பனிக்குட நீர் நம்முடைய வயிற்றில் இருந்தாலும் தொப்புள் கொடி பிள்ளையின் கழுத்தை சுற்றக்கூடும்.

3. தொப்புள் கொடி நீளமாக இருந்தாலும் பிள்ளையின் கழுத்தை சுற்றக்கூடும்.

4. தொப்புள் கொடி சரியான வடிவத்தில் இல்லாமல் போனாலும் சுற்ற வாய்ப்புண்டு

 

இதனால் பாதிப்புண்டா?

தொப்புள் கொடி சுற்றி இருப்பதை மருத்துவர்கள் சிறப்பாக கையாள்கின்றனர். ஒருவேளை நம்முடைய பிள்ளையின் கழுத்தை தொப்புள் கொடி ஒன்றுக்கு மேற்பட்ட முறை சுற்றி இருந்தாலும் அதனாலும் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அரிதான எண்ணிக்கையிலே தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறப்பதில் சில கடினங்கள் உணரப்படுகிறது.

 

தொப்புள் கொடி சுற்றி இருப்பதற்கான அறிகுறிகள்?

இதனை கண்டறிய எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. உங்கள் உடலிலும் எவ்வித மாற்றமும் உண்டாவதில்லை. அதனால், தொப்புள் கொடி சுற்றி இருப்பதை நம்மால் உணர முடியாது.

 

எப்படி சரி செய்வது?

கர்ப்பமாக இருக்கும்போது, தொப்புள் கொடி சுற்றி இருப்பதை சரி செய்ய முடியாது. பிரசவம் வரைக்கும் இதனை எதுவும் செய்ய இயலாது. ஒருவேளை பிள்ளையின் கழுத்தை தொப்புள் கொடி சுற்றி இருந்தால், அப்போது லேசாக அதன் இறுக்கத்தை மருத்துவர்கள் குறைக்க நினைப்பார்கள். காரணம், அப்போது தான் நம்முடைய பிள்ளைகளால் மூச்சு விட சிரமம் இல்லாமல் இருக்கும்.

 

சிரமங்கள் என்னென்ன?

சிரமங்கள் என்பது அரிதான விஷயமே. நாம் மன அழுத்தம் இன்றி இருந்தால் அதுவே போதுமானது. மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அதன்படி மட்டுமே நாம் நடக்க வேண்டும்.

பிரசவத்தின் போதே, இதனால் எந்த மாதிரியான சிக்கல் உண்டாகுமென்பதை நம்மால் அறிய முடியும். பிரசவத்தின்போது ஏற்படும் சுருக்கம் காரணமாக தொப்புள் கொடி, நம்முடைய பிள்ளைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் இதய துடிப்பும் பாதிக்கப்படலாம்.

அதனால், நம்முடைய மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, நம் பிள்ளைகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பிரசவம் நடக்க வழிவகை செய்வார்கள்.

ஒருவேளை நம்முடைய பிள்ளைகளின் இரத்த ஓட்டம் பாதிப்பதை போல மருத்துவர்கள் உணர்ந்தால், உடனடி சிசேரியனுக்கு ஏற்பாடு செய்து பிள்ளையை பத்திரமாக மீட்பார்கள்.

உண்மையில் சொல்ல வேண்டுமெனில், தொப்புள் கொடி சுற்றுவதால் அதிகபட்சம் பிள்ளைகளுக்கு எந்த வித சிக்கலுமின்றி மருத்துவர்கள் பார்த்துக்கொள்கின்றனர். பிள்ளைகளின் ஆரோக்கியம் இதனால் பெரும்பாலும் பாதிப்பதுமில்லை. மிக அரிதாகவே, தொப்புள் கொடி சுற்றுவதால் ஆபத்துகள் ஏற்படக்கூடும்.

தொப்புள் கொடி சுற்றியுள்ளதாக மருத்துவர்கள் கூறினாலும், தேவையற்ற பதட்டத்தை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். அது தான் நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் நல்லது.

தொப்புள் கொடி சுற்றி இருப்பது தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் நாம் மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

 

இதனால் மூளைக்கு ஆபத்து ஏற்படுமா?

தொப்புள் கொடி இறுகும் அளவுக்கு எந்தவொரு டாக்டர்களும் விட்டு விடுவதில்லை. ஒருவேளை இறுக்கினால், அப்போது பிள்ளைகளின் இரத்த ஓட்டம் பாதிக்க வாய்ப்புண்டு. ஒருவேளை பிள்ளை பிறக்கும்போது தொப்புள் கொடி சுற்றி இருந்தால், பிறப்புறுப்பு வழியாக பிள்ளை வெளிவர கடினமாக இருக்கும். அதனால், பிரசவத்தின்போது, டாக்டர்கள் பிள்ளையின் தலையை தான் முதலில் காண்பர். தொப்புள் கொடி இறுக்குவது போல அவர்கள் உணர்ந்தால் பிள்ளை பிறக்கும் முன்பே அதனை கட் செய்யவும் வாய்ப்புண்டு.

எது எப்படியோ, தொப்புள் கொடி சுற்றிருப்பது இன்றைய நாளில் கடினமான விஷயம் ஒன்றல்ல. குறிப்பாக தொப்புள் கொடி சுற்றி இருக்கும்போது, சிசேரியன் உதவியுடன் டாக்டர்கள் பிள்ளையை பத்திரமாக மீட்கின்றனர். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது, மன அழுத்தமின்றி ஆரோக்கியமாக பதட்டமில்லாமல் இருப்பது மட்டும் தான்.

#umbilical

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.