சரஸ்வதி பூஜை குறித்த சுவாரஸ்யமான பல உண்மைகள்

cover-image
சரஸ்வதி பூஜை குறித்த சுவாரஸ்யமான பல உண்மைகள்

தோழிகளே, என் அக்காவுக்கு 2-3 நாட்களாக போன் செய்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அவளோ அட்டென்ட் செய்யவே இல்லை. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. இன்று எப்படியாவது அடித்து பேசிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். கடவுளின் கருணையால் அவளும் அட்டென்ட் செய்தாள். “என்னடி, ஒரு போன் பண்ண கூட உனக்கு நேரமில்லயா. அப்படி என்ன தான் தலை போகுற காரியம்.” என்றேன். திடீரென்று போனில் ஒரு அமைதி. “லூசு, ஆயுத பூஜை வருதுன்னு வீடெல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள். நான் ஒரு பெருமூச்சு விட்டாலும், மீண்டுமோர் பயம் என்னை தொற்றிக்கொண்டது. அது வேறொன்றுமில்லை. நான் இன்னும் வீட்டை கிளீன் பண்ணவே இல்லைங்க. இந்த பதிவை போட்டுட்டு போய் கிளீன் பண்ணனும்.

 

சரஸ்வதி பூஜை:

இதனை ஆயுத பூஜை என்றும் சொல்வோம். இந்த நன்னாளில் இந்துக்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை வணங்குவர். ஆம், சரஸ்வதிக்கு உணவுகளை படைத்து எனக்கு படிப்பு நன்றாக வர வேண்டும் தெய்வமே என வேண்டிக்கொண்டே புத்தகம், பேனா, பென்சில் என எல்லாவற்றையும் வைப்போம்.

 

என்னவெல்லாம் செய்வோம்?

வீட்டிலுள்ள ஆயுதங்களை எல்லாம் சுத்தமாக கழுவி பூஜை அறையில் வைப்போம். வீடு முழுக்க தோரணம் கட்டி, கதவுகளில், ஜன்னல்களில் என பார்க்கும் இடமெல்லாம் குங்குமம், சந்தனம் வைப்போம்.

நம் வீட்டில் இதுவரை பயன்படுத்தி வரும் கார், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை சுத்தமாக துடைத்து பொட்டு வைத்து அழகு பார்க்கும் நாளும் கூட.

படிக்கும் பிள்ளைகள் தானாக புத்தகத்தை எடுத்து பூஜை அறையில் அமர்ந்து, ஒரு சில பக்கங்கள் படிப்பதுமுண்டு. ஒரு சிலரை வலுக்கட்டாயமாக இந்த ஒரு நாள் மட்டும் புத்தகம் எடுத்து படிக்க அவர்கள் அம்மாக்கள் வற்புறுத்துவதும் உண்டு.

 

சரஸ்வதி பூஜையில் மஞ்சள் நிறத்தின் முக்கியத்துவம் தான் என்ன?

வசந்த காலத்தில் வரும் ஒரு சிறப்புமிக்க பூஜை தான் சரஸ்வதி பூஜை. இதனால், மஞ்சள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க, பழங்களும், அறுவடை பயிர்களும் கூட பூஜை அறையில் வைக்கப்பட்டு வணங்கப்படும். மற்ற மாநிலங்களில் மஞ்சள் நிற ஆடை அணிவதையும் இன்றைய நாளில் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

 

வேறு என்னவெல்லாம் செய்வார்கள்?

பேருந்துகள், வேன்கள் எல்லாம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்படும். எல்லோரும் அவர்களுடைய தொழிலை வணங்கி, மென்மேலும் சிறக்க வேண்டும் என தேவியை வேண்டுவார்கள்.

சிலர் அருகிலுள்ள சரஸ்வதி தேவியின் ஆலயத்துக்கு அவர்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டும் செல்வார்கள்.

 

இந்த விழா எதனால் கொண்டாடப்படுகிறது?

மஹிசா சூரன்:

துர்கா தேவியின் ஒரு அவதாரம், மகிஷாசூரன் எனும் அரக்கனை விஜயதசமி அன்று வென்றதாக புராணம் கூறுகிறது.

 

இராமாயணம்:

இராமன், சீதையை கடத்திய இராவணனை விஜயதசமி அன்று போரில் வீழ்த்தியதாகவும் புராணம் கூறுகிறது. வட இந்தியர்கள் இந்த விழாவை இராம லீலா எனும் பெயர் கொண்டு கொண்டாடுகின்றனர். இந்த விழாவில், இராவணன் உருவ பொம்மையானது எரிக்கப்படுகிறது.

 

மகா பாரதம்:

மகா பாரதத்தில் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் ஓராண்டு கழித்து மீண்டும் அவர்களின் ஆயுதங்களையும், பலத்தையும் விஜயதசமி அன்று பெற்றதாக வரலாறு கூறுகிறது.

 

வேறு என்னவெல்லாம் விஜயதசமி சிறப்புக்குரியது?

இந்த தினத்தில் ஒரு சில பெற்றோர்கள், அவர்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். அப்படி சேர்ப்பதால், சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்களது புதிய தொழிலை தொடங்கவும் செய்வார்கள்.

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும். விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த காரியமும் வெற்றியில் முடியும் என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நம்பப்படுகிறது.

சிறு பிள்ளைகள், விஜயதசமியில் அவர்கள் கல்வியை தொடங்கினால், அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது.

 

எப்போது கொண்டாடப்படுகிறது?

இந்து நாட்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழித்த பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும் கொண்டாடப்படுகிறது.

நாளை உங்கள் வீட்டில் என்னவெல்லாம் ஸ்பெஷலாக செய்ய போகிறீர்கள்? எங்கள் வீட்டில் லட்டு செய்து சாமிக்கு படைக்க நான் முடிவு செய்துள்ளேன் தோழிகளே. நீங்கள்?

#saraswatipuja
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!