பிள்ளைகளின் பற்கள் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

cover-image
பிள்ளைகளின் பற்கள் பற்றி அறிய வேண்டிய உண்மைகள்

என் தோழியின் பிள்ளைக்கு சமீபத்தில் பல் முளைத்ததாக கூறினாள். அதோடு, பல் முளைக்கும் போது அவளுடைய பிள்ளைக்கு என்னவெல்லாம் செய்தது என்பதையும் என்னோடு பகிர்ந்துக்கொண்டாள். நானும் அவள் கூறிய விஷயங்களை உங்களுடன் ஆர்வமாக பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் உங்களின் தோழிகளுடன் நிச்சயம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 

பல் முளைக்கும் போது என்னவெல்லாம் செய்தது?

அவள் பிள்ளைக்கு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. உடனே, மிகவும் பதறி போய் விட்டாளாம். அவளுடைய பிள்ளை பிறந்து 4 மாதங்கள் ஆகிறது.

 

கடித்தல்: அவள் பிள்ளை கையில் கிடைப்பதை எல்லாம் கடிக்க நினைத்திருக்கிறாள்.

ஈறுகளில் வலி: அவளுடைய பிள்ளை, காரணமே இல்லாமல் அடம் பிடித்தும் அழுதும் இருக்கிறாள்.

எச்சில் அதிகம்: அவள் பிள்ளையின் சட்டையை பார்த்தபோது ஈரமாகவும் இருந்துள்ளது. ஆம், வழக்கத்தை விட அதிகமாகவே அவள் சட்டை ஈரமடைந்துள்ளது.

உடல் சூடு: அவள் பிள்ளையின் உடல் சூட்டோடு இருக்கவே, அவள் மிகவும் பதறி போய்விட்டாளாம். அதுவும் 100.4 பேரன்ஹீட்டுக்கு குறைவாக இருந்துள்ளது.

உடனே அவள் ஊரில் இருக்கும் அவள் அம்மாவுக்கு போன் செய்திருக்கிறாள். காணப்பட்ட அறிகுறிகளை எல்லாம் கேட்டதும், இது பிள்ளைக்கு பல் முளைப்பதால் ஏற்படும் அறிகுறி தான், பயப்பட வேண்டாமென அவளுடைய அம்மா கூறியிருக்கிறார்.
அதன்பிறகே அவள் சற்று நிம்மதியடைந்தாளாம்.

 

பற்கள் முளைக்கும் போது காணப்படும் வயிற்றுப்போக்கு:

அவள் அவளுடைய பிள்ளைக்கு தாய்ப்பால் தான் தருகிறாள். அதனால், பற்கள் முளைக்கும்போது காணப்பட்ட மலத்தின் நிறம் மஞ்சளாகவும், மிருதுவாகவும், தண்ணியாகவும் போய் உள்ளது.

ஒருவேளை அவள் பார்முலா பால் கொடுத்திருந்தால், பிள்ளை மலம் கழிக்கும்போது அதன் நிறம் பிரவுனாகவும், திக்காகவும் இருந்திருக்கும்.

அதன்பிறகு தான் டாக்டரை அவள் பாத்திருக்கிறாள். அவள் பிள்ளையின் பற்கள் முளைப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

 

பற்கள் முளைக்கும்போது காணப்படும் மற்ற அறிகுறிகள்:

பற்கள் முளைக்கும்போது இன்னும் சில அறிகுறிகளும் இருக்கலாம் என டாக்டர் கூறி இருக்கிறார். அவை,

 • ஈறுகளில் வீக்கம்
 • அடம்பிடித்து அழுதல்
 • உடல் சூட்டோடு காணப்படுதல்
 • எதையாவது கடிக்கனும் போல உணர்வு இருத்தல்
 • இருமல்
 • கன்னத்தை கைகால் கீறிக்கொள்ளுதல்
 • கைகளை வாய்க்கு அருகில் கொண்டு சொல்லுதல்
 • சாப்பிடுவதில் அல்லது தூங்குவதில் மாற்றம் காணப்படுதல்

 

பற்கள் முளைப்பதால் வலி இருக்கும், ஆனாலும் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.

ஒருவேளை பற்கள் முளைக்கும்போது வயிற்றுப்போக்கு, வாந்தி, ராஷஷ் போன்றவை அதிகமிருந்தால் கட்டாயம் டாக்டரை பார்க்கவும் வேண்டுமாம். அதேபோல, காய்ச்சல் அதிகமிருந்தாலும், இருமல், மூக்கடைப்பு இருந்தாலும் டாக்டர் ஆலோசனை நிச்சயம் வேண்டுமாம்.

 

சரியான நேரத்தில் பல் முளைக்காவிட்டால் என்ன செய்வது?

ஆறு மாதங்களில் நம்முடைய பிள்ளையின் பல் முளைக்க வேண்டும். ஆனாலும் 13 மாதங்கள் வரைக்கும் நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். பிள்ளைகளுக்கு தாமதமாக பல் முளைப்பதால் எந்தவித பாதிப்புமில்லை. இது ஒவ்வொரு பிள்ளைக்குமே வித்தியாசப்படுகிறது என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

 

எதனால் பிள்ளைகளின் பற்கள் தாமாதமாக முளைக்கிறது?

 • மரபுவழி பிரச்சனைகள்
 • ஊட்டச்சத்து குறைபாடு
 • பிள்ளைகள் முன் கூட்டி பிறத்தல்
 • உங்களுக்கு இருக்கும் தைராய்டு சுரப்புக் குறைபாடு

ஒருவேளை இவற்றுள் எதுவும் உங்களுடன் தொடர்புடையதாக தெரியவில்லை என்றால், டாக்டரின் ஆலோசனை பெறுவது நல்லது.

 

பல் முளைக்கும்போது நாம் தவிர்க்க வேண்டியவை எவை?

1. கிராம்பு எண்ணெய் கொடுப்பதை தவிர்க்கவும். இல்லையேல் ஈறுகளில் எரிச்சல் காணப்படும்.

2. பல் முளைக்கும்போது டீத்திங் நெக்லஸ் என்பதை சில அம்மாக்கள் பிள்ளைகள் கையில் கொடுப்பர். இதனை அவர்கள் வாயில் வைத்தால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

பிள்ளையின் பற்களை பராமரிக்க என்ன வழி?

 • மெல்லிய துணி கொண்டு பிள்ளையின் ஈறுகளை துடைத்துவிட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்
 • பற்களை வலிமைப்படுத்த, வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் நிறைந்த உணவை தர அறிவுறுத்துகிறார்கள்
 • அதோடு, கால்சியம், ஃபுளூரைடு, பாஸ்பரஸ், வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் நம்முடைய பிள்ளைகளின் பற்கள் ஆரோக்கியத்துக்கும், ஈறுகளின் வளர்ச்சிக்கும் உதவும் என்கிறார்கள்

தோழிகளே, இந்த பதிவின் மூலமாக பிள்ளைகளின் பற்கள் முளைப்பதை குறித்த பல தகவல்களை அறிந்திருப்பீர்கள். ஒருவேளை இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என நினைத்தால், மற்ற தோழிகளுக்கும் பகிரலாமே.

#teething
logo

Select Language

down - arrow
Rewards
0 shopping - cart
Personalizing BabyChakra just for you!
This may take a moment!