பிள்ளைகளுக்கு சுகாதாரத்தை சொல்லித்தர சூப்பர் ஐடியாக்கள்

cover-image
பிள்ளைகளுக்கு சுகாதாரத்தை சொல்லித்தர சூப்பர் ஐடியாக்கள்

தாயை போல பிள்ளை, நூலை போல சேலை என்பது பழமொழி. ஆம், பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் இன்ச் இன்ச்சாக கவனிப்பவர்கள் பிள்ளைகள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களும் செய்வது வேடிக்கையான விஷயம் என்றாலும், மிகுந்த கவனத்தோடு நாம் இருக்க வேண்டும்.

நீங்கள் மொபைல் எடுத்து ஏதாவது பார்த்தால், அவர்களும் அதையே செய்ய ஆசைப்படுவார்கள். நீங்கள் ஒரு உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டால், அவர்களுக்கும் அதே ஆசை வரும். இப்படி ஒவ்வொரு பழக்கமும் நம்மை பார்த்து தான் வருகிறதே தவிர, மற்றவர்களை பார்த்து ஒன்றும் வருவதில்லை. ஏனென்றால், நாம் தான் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோம்.

இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுப்பது பற்றிய பல பயனுள்ள தகவலை நாம் பார்ப்போம் வாருங்கள்.

 

இவற்றை எல்லாம் நாம் கற்றுக்கொடுக்க வேண்டுமா?

1. உணவு பழக்க வழக்கம்

ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்றவை வரும் என்பதை சொல்லி வளர்க்கலாம். நீங்கள் சமையலுக்காக காய்கறிகளை வெட்டினால், அந்த காய்கறிகளில் என்ன சத்து உள்ளது என்பதை சொல்லி, அதன் பயன்களையும் அவர்கள் மனதில் பதிய செய்யலாம்.

உணவை எப்போதும் மூடி வைக்க அவர்களை பழக்கப்படுத்துங்கள். அவற்றை திறந்து போடுவதால் பாக்டீரியாக்கள் தங்கும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இவற்றை குறித்த கார்ட்டூன் வீடியோக்களை அவர்களுக்கு காட்டி, சுவாரஸ்யத்தை நாம் தூண்டலாம்.

சாப்பிடும்போது தொடையில் துண்டு போட்டுக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். இது அவர்கள் சிந்தாமல் சாப்பிட உதவியாக இருக்கும்.

அதேபோல, சாப்பிடும்போது இருமல் வந்தால் திரும்பிக்கொண்டு இரும வேண்டும், தட்டிற்கு நேராக இரும கூடாது என்பதையும் அவர்களுக்கு எப்படி என காட்டுங்கள். இருமிய பிறகு, அவர்கள் கைகளை கழுவி விட்டு வந்து சாப்பாட்டில் கை வைக்க வேண்டுமென்பதையும், இல்லாவிட்டால் கிருமிகள் வயிற்றுக்குள் போகுமென்பதையும் சொல்லிக்கொடுங்கள்.

 

2. உணவை பத்திரப்படுத்துவது

உணவை எப்போதும் சாப்பிட்டுவிட்டு மூடி வைக்க வேண்டுமென்றும், மீதமுள்ள உணவை ஃபிரிட்ஜில் வைக்கவும் சொல்லிக்கொடுங்கள்.

 

3. கைகளை கழுவுதல்

சோப் மற்றும் தண்ணீரை கொண்டு எப்படி கைகளை கழுவ வேண்டுமென்பதை அவர்களுக்கு செய்து காட்டுங்கள். அவர்கள் சரியாக தான் கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் பார்த்து பரிசு தந்து ஊக்கப்படுத்தலாம். எந்தவொரு உணவையும், கை கழுவி விட்டு தான் எடுக்க வேண்டுமென்பதையும் அவர்களுக்கு சொல்லி தரலாம்.

 

கை சுகாதாரம் சொல்லிக்கொடுக்கும் முறை

எப்போதும் அவர்களிடம் சொல்வதை காட்டிலும், ஒரு விஷயத்தை செய்து காண்பிப்பது எளிதில் அவர்கள் புரிந்துக்கொள்ள உதவும்.

 • நீரில் உங்களின் கைகளை முதலில் நனைக்கவும்
 • கைகளில் சோப்பு போட்டு காட்டவும்
 • விரல் இடுக்குகளிலும், நகங்களிலும் சோப் போடுவதை அவர்களுக்கு நாம் காண்பிக்க வேண்டும்
 • சுத்தமான தண்ணீர் கொண்டு சோப் போகும்வரை கைகளை கழுவி காட்டவும்

ஒவ்வொரு முறையும் அவர்கள் இதனை மறக்காமல் செய்யும்போது, ஏதாவது சிறிய பரிசு கொடுத்து நாம் அவர்களை பாராட்டலாம்.

 

எப்போதெல்லாம் கை கழுவ அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்?

 • பாத்ரூம் சென்று வந்தவுடன்
 • வெளியில் விளையாடிவிட்டு வந்தவுடன்
 • வீட்டை சுத்தம் செய்தவுடன்
 • செல்ல பிராணிகளை தொட்டு கொஞ்சிய பின்
 • நோய்வாய்ப்பட்டவர்களை சந்தித்திருந்தால்
 • இருமல் எடுத்த பிறகு
 • சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்
 • ஸ்கூல் அல்லது பார்க் சென்று வந்தவுடன்


4. தூக்க பழக்க வழக்கம்

நம்முடைய நாளை மன அழுத்தம் இல்லாமல் கடக்க தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதேபோல, தூங்க செல்லும் முன்பு குட் நைட் சொல்ல பழக்க வேண்டும். அதேபோல காலை எழுந்தவுடன் குட் மார்னிங் சொல்லவும் நாம் பழக்க வேண்டும். காலை எழுந்த பிறகு, பயன்படுத்திய போர்வை, தலையணையை அடுக்கி வைக்கவும் நாம் அவர்களை பழக்கப்படுத்தலாம்.

 

வேறு என்னவெல்லாம் நாம் தூங்குவதற்காக பழக்குவது?

 • படுக்க சென்ற பிறகு டிவி பார்ப்பதோ அல்லது வீட்டுப்பாடம் செய்வதோ கூடாது
 • அவர்களை மங்கலான ஒளியில் தூங்கி ஓய்வெடுக்க பழக்கவும்
 • அவர்களை எழுப்ப அலாரம் வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களாகவே எழுந்து குட் மார்னிங் சொல்ல பழக்கலாம்
 • எப்போதும் ஒரே நேரத்தில் அவர்களை தூங்க பழக்கப்படுத்த வேண்டும்
 • சனி, ஞாயிறு அதிக நேரம் தூங்கட்டும் என்ற பழக்கத்தையும் நாம் உண்டாக்கக்கூடாது. இது வகுப்பு நாட்களில் சோம்பலை ஏற்படுத்தும்
 • அவர்களை பசியோடு தூங்க வைக்க கூடாது. வயிறு முட்ட அவர்கள் சாப்பிட்டு இருந்தால், அப்போது உடனே தூங்க வைக்கவும் கூடாது
 • தூங்குவதற்கு முன்பு டீ, காபி, சாக்லேட் போன்றவற்றை கொடுத்து பழக்க கூடாது
 • தினமும் அவர்களை வெளியில் சென்று கொஞ்ச நேரம் விளையாட பழக்கப்படுத்தவும்

 

5. வாய் சுகாதாரம்

பிள்ளைகளின் வாய் மற்றும் பல் சுகாதாரத்தையும் நாம் பழக்க வேண்டும். எவற்றை எல்லாம் சாப்பிடுவதால் சொத்தை பல் வருமென்பதை அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். அதோடு, இரவு தூங்குவதற்கு முன்பாக எதையும் சாப்பிட்டால், நிச்சயம் வாயை சுத்தமாக கொப்பளித்து துப்பிவிட்டு செல்லவும் பழக்கப்படுத்தலாம். தினமும் இரண்டு முறை பல் துலக்கவும் அவர்களை நாம் பழக்கப்படுத்தலாம்.

 • பல் துலக்கும்போது 45 டிகிரி கோணத்தில் பிரஷ்ஷை வைத்து துலக்க பழக்கப்படுத்தவும்
 • முன்னும், பின்னும் பிரஷ்ஷை மெல்ல தேய்க்க பழக்கப்படுத்தவும்
 • உட்புறத்தில் துலக்க செங்குத்தாக பிரஷ்ஷை வைத்து மேலும் கீழும் கொண்டு தேய்க்க பழக்கப்படுத்தவும்
 • பாக்டீரியா உற்பத்தியாகாமல் இருக்க, நாக்கை சுத்தப்படுத்தவும் பழக்க வேண்டும்

தோழிகளே, இந்த பதிவின் மூலமாக உங்களுடைய பிள்ளைகளுக்கு எவற்றை எல்லாம் பழக்கப்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது என நீங்கள் நினைத்தால், உங்கள் தோழிகளுக்கும் பகிரலாமே. அவர்களுக்கும் இந்த பதிவு உதவலாம் அல்லவா.

#babycareandhygiene
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!