கர்ப்பகால மனநிலையை கட்டுப்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்கள்

cover-image
கர்ப்பகால மனநிலையை கட்டுப்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்கள்

கர்ப்பமாக இருப்பதென்பது ஒரு பெண்ணின் வாழ்வையே வேறு பரிமாணத்தில் பார்க்க வைக்கும் விஷயமாகும். இதனில் மகிழ்ச்சி, கவலை, பதட்டம், எதிர்பார்ப்பு, புன்னகை என எல்லாமே கலந்து இருக்கும். இதற்கெல்லாம் காரணம் ஹார்மோன்கள் தான். நன்றாக பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால் திடீரென கோபம் வரும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்பதை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டால், இதை விட ஒரு அழகிய தருணம் நிச்சயம் இருந்துவிடாது என்பதே உண்மை.

 

இது போன்ற மனநிலை மாற்றங்களுக்கு என்னவெல்லாம் காரணம்?

எண்ணற்ற காரணங்கள் இது போன்ற மனநிலைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ளது. அவற்றுள் முக்கிய பங்கு வகிப்பது கர்ப்பக்காலத்தில் நம் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றம் தான். இதை தவிர, சரியாக தூங்காமல் இருத்தல், பதட்டம் போன்றவையும் நம்முடைய மனநிலை மாற்றத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

 

1. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம்

கர்ப்பமாக இருக்கும்போது எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டரோன் எனும் ஹார்மோன்கள் மனநிலை மாற்றத்துக்கு காரணமாக அமைகிறது.

இதிலும் எஸ்ட்ரோஜன் உடல் முழுவதிலும் செயல்பட்டு மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால், நாம் கோபம் கொள்வதை கண்டு ஆச்சரியப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இந்த புரோஜெஸ்டரோன் ஹார்மோன் நம்முடைய தசைகளையும், மூட்டுகளையும் தளர்வடைய செய்து, முன்கூட்டிய சுருக்கங்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதோடு, உடல் சோர்வு, கவலை போன்றவற்றிற்கும் இதுவே காரணமாகும்.

 

2. உடல் சோர்வு மற்றும் சரியான தூக்கம் இல்லாமல் இருத்தல்

முதல் மூன்று மாதங்களில் உடல் சோர்வு ஏற்படுவது பொதுவான பிரச்சனை என்றாலும், மூன்றாவது மூன்று மாதங்கள் தூங்குவதில் அதிக சிரமம் நமக்கு உண்டாகலாம். இதற்கு காரணம், நம் வயிறு பெரிதாக இருப்பதும் கூட என சொல்லலாம்.

அதேபோல பொய்யான பிரசவ வலி காரணமாகவும் மூன்றாவது மூன்று மாதங்களில் நமக்கு தூங்க சிரமமாக இருக்கும்.

 

3. வாந்தி, குமட்டல், மயக்கம்

இதன் காரணமாக நம்மால் எப்போதும் போல சகஜமான மனநிலையுடன் இருக்க முடிவதில்லை. அதோடு, அடிக்கடி யூரின் செல்வதாலும், நம்முடைய மனநிலையானது சமநிலையற்று இப்போது காணப்படலாம். இருப்பினும், ஒரு சில பெண்களுக்கு இந்த வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை முதல் மூன்று மாதங்களோடு முடிவுக்கு வந்துவிடுகிறது.

 

4. உடலில் ஏற்படும் மாற்றம்

நம் உடல் திடீரென எடை போட்டது போல தெரியலாம். இதனாலும் நம்முடைய மனநிலை, மாற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு சில பெண்கள் அடிக்கடி அவர்களின் வயிற்றை பார்த்த வண்ணம் இருக்கவும் செய்வார்கள்.

 

5. பதட்டம்

பிள்ளைகளை பார்க்க போகும் சந்தோஷத்துடன் நமக்கு பதட்டமும் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. பிரசவத்தையும் முதன் முதலில் அனுபவிக்க போகிறோம் என்ற பதட்டமும் நமக்கு இப்போது இருக்கலாம். ஆனால், பிள்ளைகளின் முகம் நம் கண் முன்பு வந்து போகும் வரை இதனை நம்மால் வெல்லவும் முடியுமென்பதை மறவாதீர்கள்.

 

எப்போதிலிருந்து இந்த மனநிலை மாற்றத்தை நாம் எதிர்ப்பார்க்கலாம்?

இந்த மாற்றம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டே காணப்படுகிறது என்பதால், நிலையாக இது எப்போது ஏற்படும் என்பதை நம்மால் கூறிவிட முடியாது.

அதேபோல பிரசவம் கழித்தும் இந்த மனநிலை மாற்றம் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்பதற்கும் எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

அதேபோல இதுவரை எனக்கு இல்லாத ஒரு மனநிலை இப்போது திடீரென வந்துள்ளதே என்ற கவலையும் நமக்கு வேண்டியதில்லை. நிச்சயம் இது ஒரு நாள் மாறும் என்பதை உணர்ந்து, பிள்ளையை கைகளில் தாங்கவிருக்கும் அந்தவொரு நிமிடத்தை நோக்கி நாம் காத்திருக்கலாம்.

 

இந்த மனநிலை மாற்றத்தை எப்படி சமாளிப்பது?

  • ஆரோக்கியமான உணவை உண்ணுவது நல்லது
  • பாஸ்ட் ஃபுட், ஜங் ஃபுட்டை தவிர்க்கவும்
  • சாதாரணமான உடற்பயிற்சிகளை செய்யலாம்
  • தூங்குவதற்கு என நேரத்தை தினமும் நாம் ஒதுக்கலாம்
  • கணவர் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம்
  • இரக்க குணத்துடன் இருக்க முயலலாம்
  • நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம்

தோழிகளே, நமக்கு இருக்கும் கவலை, சோகம், பதட்டம், பயம் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களின் சக தோழிகளுக்கும் பகிரலாமே.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!