• Home  /  
  • Learn  /  
  • தாய்ப்பாலை அதிகரிக்கும் அற்புதமான உணவு எள்ளுருண்டை
தாய்ப்பாலை அதிகரிக்கும் அற்புதமான உணவு எள்ளுருண்டை

தாய்ப்பாலை அதிகரிக்கும் அற்புதமான உணவு எள்ளுருண்டை

17 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பாரம்பரிய உணவில் பங்கு வகிப்பது இந்த எள். எள்ளில் இருந்து பெறப்படும் நெய்யே எள்நெய், அதாவது எண்ணெய் என அழைக்கப்பட்டது. இந்த எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எண்ணற்றவை என்று கூட சொல்லலாம்.

கொங்குநாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த எள்ளுருண்டை பற்றி நன்றாகவே தெரியும். ஏனென்றால், கொங்குநாடு ஸ்பெஷல் இந்த எள்ளுருண்டை. இதனை தயாரிக்க குறைவான பொருட்களே தேவைப்பட்டாலும், இது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமானது என்று சொன்னால் மிகையாகாது. முன்பெல்லாம் நம்முடைய முன்னோர்கள், உரல் உலக்கை கொண்டு இந்த எள்ளுருண்டையை செய்தனர். ஆனால், இன்று நாம் மிக்சி உதவியுடன் சீக்கிரமே இந்த எள்ளுருண்டையை செய்துவிடலாம்.

 

இந்த எள்ளுருண்டையை எதற்காக நாம் சாப்பிட வேண்டும்?

எள்ளில் வைட்டமின் B, இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது இரத்த அழுத்தத்திற்கும் நல்லதென சொல்லப்படுகிறது. தாய்ப்பால் தரும் அம்மாக்களும் இதனை சாப்பிடுவதன் மூலமாக, தாய்ப்பால் அதிகம் சுரப்பதை காணலாம்.

 

தேவையான பொருட்கள் எவை?

  • கருப்பு எள் விதைகள் (ஊறவைத்தது) – 1 கப்
  • வறுத்த வேர்க்கடலை – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • துருவிய தேங்காய் – கால் கப்

 

எப்படி செய்வது?

1. இரவே எள் விதைகளை ஊறவைத்துவிடவும். காலையில், உள்ளங்கைகளால் தொட்டு பார்க்கவும். விதைகளில் இருந்து உம்மி போன்றவை வெளியில் வந்திருக்கும். அதன்பிறகு அந்த தண்ணீரை வடிகட்டவும்.

2. வடிக்கட்டி உலர்ந்த எள் விதையை காட்டன் துணியில் வைத்து, சூரியனில் காய வைக்கவும்.

3. ஒருவேளை, நீங்கள் இருக்கும் இடத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்காவிட்டால், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை துணியை மாற்றவும். பின்னர், நிழல் அல்லது காற்றாடியில் கூட நாம் அதனை காய வைக்கலாம்.

4. இந்த உலர்ந்த எள் விதைகளை 6 மாதம் கூட நாம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வெளியில் வைத்திருந்தால், ஊசி போய்விடும்.

5. ஊறவைத்து காய்ந்த எள் விதைகளை எண்ணெய் சட்டியில் போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும். விதைகள் வெடிக்கும் சத்தம் கேட்டவுடன், அதனை ஒரு பிளேட்டில் எடுத்து ஓரமாக வைத்து விட வேண்டும்.

6. அதே கடாயில் இப்போது வேர்க்கடலையையை போட்டு வறுக்கவும். அதன் வெளிப்புறம் அடர் நிறத்தில் இருக்கும்போது, கடாயில் இருந்து எடுத்து ஓரமாக வைத்து ஆறவிடவும்.

7. இப்போது தேங்காயை நன்றாக வறுத்து, அதையும் ஓரமாக வைத்து விட வேண்டும்.

8. ஒருவேளை, இவை எல்லாம் வெதுவெதுவென இருந்தால், பவுடராக நாம் அரைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் லட்டு போல் உருட்ட எளிதாக இருக்கும்.

9. மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதனில் பவுடராக்கப்பட்ட வெல்லம், வறுத்த எள், வறுத்த வேர்க்கடலை, வறுத்த தேங்காயை சேர்க்கவும். நன்றாக தூள் தூளாகும் வரை அரைக்கவும்.

10. அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டிக்கொள்ள வேண்டும்.

11. உடனடியாக அதனை சிறிய உருண்டையாக உருட்டவும். மாவு வெதுவெதுப்பாக இருக்கும்போதே உருண்டையாக பிடிப்பது எளிதாகும். வாயில் வைத்து கடிக்கும் அளவுக்கு உருண்டையாக பிடிக்கவும்.

12. ஒருவேளை உருண்டை பிடிக்க வராவிட்டால், சுடு தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்யவும்.

13. அவ்வளவு தான், சுவையான சத்தான எள்ளுருண்டை ரெடி.

 

எள்ளுருண்டையின் பயன்கள் என்னென்ன?

1. தாய்ப்பால் சுரக்க உதவும்

2. ஆரோக்கியமான எலும்பை தரும்

3. வைட்டமின் B இருப்பதால் வளர்சிதை மாற்றத்துக்கு நல்லது

4. இரத்த செல் உருவாக்கத்துக்கு உதவும்

5. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

6. ஆக்சிஜனேற்ற பண்பு கொண்டது

7. எதிர்ப்பு சக்திக்கு நல்லது

8. குறைந்த இரத்த அழுத்தத்துக்கு நல்லது

 

தோழிகளே, இன்னும் ஏன் தாமதம். இப்போதே எள்ளுருண்டை செய்து சாப்பிட்டு நீங்களும் பலனை பெறலாமே. இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததென நீங்கள் நினைத்தால், இப்போதே உங்கள் மற்ற தோழிகளுக்கும் இந்த சூப்பர் ரெசிபியை பகிரலாமே.

#breastfeeding

A

gallery
send-btn

Related Topics for you