ஒரு வயது பிள்ளைக்கு வாங்க வேண்டிய சிறந்த பொம்மைகள்

cover-image
ஒரு வயது பிள்ளைக்கு வாங்க வேண்டிய சிறந்த பொம்மைகள்

பிள்ளைகளுக்கு பொம்மைகளை அறிமுகப்படுத்துவது வெறும் விளையாட்டிற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ மட்டுமல்ல. அவை அவர்களின் வருடாந்திர வளர்ச்சிப்படி நிலைகளை சரியாக அடையவும் உதவுகிறது. ஒவ்வொரு வயதிலும், அவர்கள் வைத்து விளையாடும் பொம்மைகளின் வகை மாறுபட செய்கிறது. இதுவே அவர்கள் சரியான விதத்தில் வளர்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது. இப்போது நம்முடைய ஒரு வயது பிள்ளைக்கு எந்த மாதிரியான பொம்மைகள் வாங்கலாம் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பயன்களையும் பார்ப்போம் வாருங்கள்.

 

1. மெகா பிளாக்

இந்த பொம்மையை வைத்து விளையாட இப்போது நம்முடைய பிள்ளைகளால் முடியாது என்றாலும், எப்படி விளையாடுவது என்பதை நீங்கள் செய்து காட்டலாம். இதனால், இவற்றில் காணப்படும் நிறங்களை அவர்கள் கவனிக்க செய்வார்கள். அதோடு அவை என்ன வடிவம் என்றும், எதனை முதலில் வைக்க வேண்டுமென்பதையும் நாம் அவர்களுக்கு செய்து காட்டலாம், இதனால் அவர்களின் கவனிக்கும் திறன் வலுப்பெறும்.

 

2. தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை, தலையை அசைக்கும்போது அவர்களும் தலையை அசைக்க செய்வார்கள். இவற்றை கொண்டு இப்போது அவர்களால் விளையாட முடியாது என்றாலும் இதனை ரசிப்பார்கள் நிச்சயம்.

 

3. கிளுகிளுப்பை

இதனை ஆட்டி அவர்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். இப்போது கிளுகிளுப்பை பொம்மையை வாங்கும்போது கூடுதல் கவனம் நமக்கு தேவை. ஏனென்றால், எதை எடுத்தாலும் வாயில் வைக்கும் பழக்கம் நம்முடைய பிள்ளைகளுக்கு உண்டு என்பதால், அது அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்திவிட கூடாது என்பதில் கவனம் வேண்டும்.

 

4. அனிமல் டாய்

இந்த பொம்மையில் விதவிதமான விலங்குகளின் சத்தம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனை பிளே செய்து எந்த விலங்கு எப்படி ஒலி எழுப்பும் என்பதை நாம் அவர்களுக்கு காட்டலாம். இது இவர்களின் கற்றல் திறனை வளர்க்கவும் உதவக்கூடிய பொம்மையாகும்.

 

5. மியூசிக்கல் ரைம்ஸ் புக்

இந்த பொம்மையில் பல ரைம்ஸ்கள் உள்ளது. பட்டனை அழுத்தி அவர்களுக்கு நாம் காட்டும்போது, அந்த ரைம்ஸ் ஒலிக்கிறது. இதனை நம்முடைய பிள்ளைகள் நிச்சயம் ரசிப்பார்கள். இது அவர்களின் கவனத்திறனை அதிகரிக்க செய்கிறது.

 

6. டிரம் டாய்

இந்த சிறிய டிரம்களை நாம் அவர்களுக்கு தட்டி காண்பிக்கலாம். இவற்றிலிருந்து வரும் வித்தியாசமான ஓசைகள், நம்முடைய பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும்.

 

7. கீ டாய்

சாவி கொடுத்தால் நகரும் பொம்மைகளை அவர்களுக்காக நாம் இப்போது வாங்கலாம். சாவியை நீங்கள் கொடுத்து விட்டால், அவை நகர்வதை நம்முடைய பிள்ளைகளால் பார்த்து இரசிக்க முடியும். இந்த பொம்மைகள், அவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.

 

8. ஷேப் பாக்ஸ்

இந்த பாக்ஸில் ஒவ்வொரு ஷேப்பிற்கும் ஒரு துளை கொடுக்கப்பட்டிருக்கும். அதோடு, வடிவங்கள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். எந்த வடிவம் எதோடு பொருந்தும் என்பதை அந்த துளையில் வைத்து பொருத்தி நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் காண்பிக்க வேண்டும்.

 

9. கலர் பால்

இந்த வகை பந்தை நாம் உருட்டி விடும்போது கலர் கலராக லைட் எரியும். என்ன கலர் அப்போது எரிகிறதோ, அதனை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு உச்சரித்து காட்டலாம். இப்போது அவற்றை நம் பிள்ளைகள் புரிந்துக்கொள்ளவில்லை என்றாலும், கலரை பார்த்து ரசிக்க தொடங்குவார்கள்.

 

10. டாய் பர்ஸ்

இந்த ஹேண்ட் பேக்குடன் பொம்மை சாவிகள், போன்கள் என பல வருகிறது. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நம்முடைய பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டி அதே ஹேண்ட் பேக்கில் போட்டு காட்டலாம். இதுவும் அவர்களின் கவனிக்கும் திறனை வளர்க்க உதவுகிறது.

 

11. ஸ்மைல் டாய்

நம்முடைய பிள்ளைகளுக்கு தேவைப்படும் மிகவும் முக்கியமான பொம்மை இது. அவர்களை எந்நேரமும் புன்னகை பொங்க வைத்துக்கொள்ள இந்த வகை பொம்மைகள் நிச்சயம் உதவும்.

 

12. மர பொம்மைகள்

மரத்தில் செய்த சிறிய விலங்கு பொம்மை கொண்டு அவர்களுக்கு நாம் வேடிக்கை காட்டலாம்.

பொம்மைகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை எவை?

பஞ்சு போன்ற பொம்மைகள் இப்போது அவர்களுக்கு வேண்டாம். இவற்றை வாயில் வைத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தோழிகளே, இப்போது 1 வயது பிள்ளைக்கு எந்த மாதிரியான பொம்மைகளை கொடுத்து நாம் ஊக்குவிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் அழகிய பெயர் என்ன? இதனை நீங்களும் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.

#parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!