• Home  /  
 • Learn  /  
 • பிள்ளைகளுக்கு வரும் கண் கோளாறும், அதற்கான உணவுகளும்
பிள்ளைகளுக்கு வரும் கண் கோளாறும், அதற்கான உணவுகளும்

பிள்ளைகளுக்கு வரும் கண் கோளாறும், அதற்கான உணவுகளும்

18 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இன்றைய நாளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கண் கோளாறு என்பது வெகு சீக்கிரமே வந்துவிடுகிறது. இதற்கு பல காரணம் உண்டு. நம்முடைய பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவதை குறைத்து, எந்நேரமும் டிவி, வீடியோ கேம் என இருந்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அளவுக்கு அதிகமாக செல்போனில் கார்ட்டூன் வீடியோ பார்ப்பது என எந்நேரமும் அவர்களின் கண்களுக்கு வேலைக்கொடுத்தபடி இருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் இயற்கையுடன் ஒன்றுவது சுத்தமாக குறைந்துவிட்டது என்று கூட சொல்லலாம். இதை பற்றி விரிவாக விளக்குகிறது இந்த பதிவு.

 

என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் நம்முடைய பிள்ளைகளுக்கு வரும்?

 • புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை படிப்பதில் ஏற்படும் சிரமம்
 • டீச்சர், போர்டில் எழுதி போடுவதை கவனிப்பதால் வரும் கண் வலி
 • கம்ப்யூட்டர் வெகு நேரம் பயன்படுத்தும்போது வரும் பிரச்சனைகள்
 • தூரத்தில் உள்ளதை பார்க்க சிரமப்படுதல்

 

இதற்கான அறிகுறிகள் என்னவாக இருக்கும்?

அவர்களால் சரியாக பார்க்க முடியாவிட்டால், கற்றுக்கொள்வதில் தாமதம் உண்டாகலாம். ஒரு சிலருக்கு படிக்க சிரமமாக இருக்கும்போது, எரிச்சலைடையவும் செய்வர். காணப்படும் மற்ற அறிகுறிகள் பின்வருமாறு,

 • கண்களை அதிகமாக கசக்குவார்கள்
 • கண்களை அதிகம் சிமிட்ட செய்வார்கள்
 • கண்களில் அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் தலைவலி
 • ஒரே பக்கம் கழுத்தை சாய்த்தபடி இருத்தல்
 • ஒற்றை கண்ணால் மட்டுமே பார்க்க முடிகின்ற சூழல்
 • புத்தகங்களை கண்களுக்கு மிக அருகில் வைத்து படித்தல்
 • கண்கள் அடிக்கடி அரிப்பதாக கூறுதல்

 

ஆரம்பத்திலேயே கவனிக்கவும்

பெரும்பாலும் பிள்ளைகளுக்கு வரக்கூடிய கண் பிரச்சனை என்பது, பார்வை மங்கலாக தெரிவது, மாறுகண் பார்வை, பார்வைத் தெளிவின்மை போன்றவையாகும். நம்முடைய பிள்ளைகளுக்கு கண் குறைபாடு இருப்பதாக நாம் நினைத்தால், கட்டாயம் கண் மருத்துவ நிபுணரை உடனடியாக பார்ப்பது நல்லது.

எப்போது டாக்டரை நாம் பார்ப்பது?

3 வயது அல்லது அதற்கு மேலுள்ள பிள்ளைகளின் கண்களை 1 முதல் 2 வருடங்களுக்கு ஒரு தடவை கண்டிப்பாக செக் செய்வது நல்லது.

எந்த மாதிரியான சிகிச்சை இருக்கும்?

நம்முடைய பிள்ளைகளின் பார்வை திறனை சோதிக்க மருத்துவர்கள் எழுத்துக்களை மாற்றியமைத்து அதனை படிக்க சொல்வார்கள். அதே போல, எழுத்துக்களின் வடிவம் பெரியது முதல் சிறியது என மாறி காணப்படும். இதனை கொண்டு நம் பிள்ளைகளுக்கு கண்களில் குறைபாடு உள்ளதா என்பதை எளிதில் அறிகிறார்கள். முதலில் வலது கண்ணை மூடிக்கொண்டு படிக்க சொல்வார்கள். பிறகு, இடது கண்ணை மூடிக்கொண்டு படிக்க சொல்வார்கள்.

 

எந்த உணவெல்லாம் நம்முடைய பிள்ளைகளின் கண்களுக்கு நல்லது?

1. முட்டை மற்றும் சீஸ்

இவை இரண்டுமே நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் தான். இவற்றுள் வைட்டமின் A இருப்பதால், கண் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதிலும் முட்டையின் மஞ்சள் கருவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். இதனை கொண்டு ஆம்லெட், ஹால்ப் பாயில் போன்றவை செய்து கொடுக்கலாம். கூடுதல் சுவைக்கு மேலே சீஸ் சேர்த்தும் நாம் கொடுக்கலாம்.

 

2. மீன்

கிழங்கான், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. நம்முடைய பிள்ளைகள் மீனை விரும்பி சாப்பிடக்கூடியவர்கள் என்றால், இது போன்ற மீன்களை அவர்களுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இவ்வகை மீன்கள் அவர்களின் கண்களுக்கு மிகவும் நல்லது.

 

3. சாக்லேட் பாதாம்

சாக்லேட் பிடிக்காத பிள்ளைகள் இவ்வுலகில் உண்டா என்ன. இருக்கவே முடியாது, ஆனாலும் சாக்லேட் சாப்பிடும் நம் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய, அதனோடு பாதாமையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம், பாதாமில் வைட்டமின் A அதிகமிருப்பதால், நம்முடைய பிள்ளைகளுக்கு இதனை ஸ்நாக்ஸ்ஸாக கொடுக்கலாம்.

 

4. காய்கறிகள்

காய்கறிகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K போன்ற ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் அதிகமுள்ளது. இவை அனைத்துமே நம்முடைய பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் நல்லது.

அதேபோல வீட்டிலேயே தக்காளி ஊறுகாய் போட்டும் நாம் கொடுக்கலாம். தக்காளி சட்னி கூட அவர்களுக்கு நல்லது.

 

5. பழங்கள்

நம்முடைய பிள்ளைகளுக்கு மாம்பழம் நிச்சயம் பிடிக்காமல் இருக்கவே இருக்காது. இதனில் வைட்டமின் A உள்ளது. இது அவர்களின் கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லதாகும்.

 

6. கீரைகள்

நம்முடைய பிள்ளைகளின் உணவில் வாரம் இரண்டு முறையாவது கீரை சேர்த்துக்கொள்வது நல்லது. கீரைகளில் வைட்டமின் A உள்ளது. அதோடு கீரையில் கால்சியம், வைட்டமின் C, வைட்டமின் B12 போன்றவையும் உள்ளது. பசலைக்கீரை நம்முடைய பிள்ளைகளின் கண் பார்வையை கூர்மையாக்கும்.

 

7. பருப்புக்கள்

பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் வேர்க்கடலையில் வைட்டமின் E உள்ளது. இவற்றுள் கொஞ்சமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. கண்கள் வறண்டு போகாமல் இருக்க, கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் E-உம் உதவுகிறது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் மிகவும் நல்லது.

தோழிகளே, பிள்ளைகளின் கண் பார்வை குறைபாடு குறித்த உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைத்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததென நீங்கள் நினைத்தால், மற்ற தோழிகளுக்கு பகிர்ந்து அவர்களுடைய பிள்ளைகளுக்கும் உதவலாமே.

#childnutrition

A

gallery
send-btn

Related Topics for you