18 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நம்மால் பிள்ளைகளை பார்த்துக்கொண்டே வேலை செய்வது சற்று கடினமான விஷயமே. அதிலும், பிள்ளைகள் தவழ, நடக்க, ஓட தொடங்கிவிட்டால், அவர்களை பிடிக்கவே நேரம் நமக்கு சரியாக இருக்கும். அப்படி இருக்கும்போது, அவர்களை தூங்க வைக்கவோ, அல்லது அமைதிப்படுத்தவோ நமக்கு சிறந்த ஊஞ்சல்கள் நிச்சயம் வேண்டும். நம் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான ஊஞ்சல்கள் எல்லாம் மனதை அமைதியாக வைத்து நன்மையளிக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காண்போம் வாருங்கள்.
எந்த மாதிரியான ஊஞ்சல் வாங்கலாம்?
1. டைமர் உடன் வரும் எலெக்ட்ரானிக் ஊஞ்சல்
இது நம்முடைய பிள்ளைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது. இந்த ஊஞ்சல்கள் நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இந்த ஊஞ்சலில் என்னவெல்லாம் சிறப்பம்சம் உள்ளது?
2021-இல் இது டாப் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. கூடுதல் பாதுகாப்புகள் பலவும் இந்த வகை ஊஞ்சல்களில் காணப்படுகிறது.
2. ஆட்டோமெட்டிக் பேபி ஊஞ்சல் நாற்காலி
இது ரிமோட் கண்ட்ரோலுடன் வரக்கூடியது. இசை டியூன்கள், இயற்கை சத்தங்கள் போன்றவை இதனோடு பொருந்தி வருகிறது. தூரத்தில் இருந்தும் கூட இதனை நம்மால் இயக்க முடியும். 2 மாதிரியாக அவர்களால் பாதுகாப்பாக இதனில் சாய்ந்துக்கொள்ள முடியும். பிள்ளைகளின் வயதுக்கு ஏற்றவாறு இதனை நம்மால் சரிசெய்து பயன்படுத்தவும் முடிகிறது.
3. பிளாஸ்டிக் ஊஞ்சல் நாற்காலி
இது வயதுக்கு ஏற்றவாறு வரக்கூடிய ஊஞ்சலாகும். இதனை நம்மால் உட்புறமும், வெளிப்புறமும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்த வகை ஊஞ்சல், உயரத்தை நமக்கு உகந்த வகையில் சரிசெய்யவும் கூடியதாகும்.
4. ப்ளூடூத் டெக்நாலஜி ஊஞ்சல்கள்
நம்முடைய பட்ஜெட்டுக்குள் வாங்க வேண்டும் என்றால், அடிப்படை வசதிகளை கொண்ட ஊஞ்சல்களே போதுமானது. இந்த வகை ப்ளூடூத் ஊஞ்சல்கள் விலை கொஞ்சம் கூடுதலே, பிள்ளைகள் எழுந்து அழுதால் தானாகவே ஆடும் வகையில் இது இருக்கிறது. அதோடு பல கூடுதல் சிறப்பம்சங்களும் இந்த ஊஞ்சலில் வருகிறது. அதோடு, பேட்டரிகளை கொண்டு இயங்க கூடியதும் கூட.
ஊஞ்சல் வாங்கும்போது நாம் எதனை கவனத்தில் கொள்வது?
1. ஊஞ்சலில் எல்லா பாகமும் ஒழுங்காக ஃபிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.
2. அவை, நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்றதா என்பதையும், அவர்கள் விழ வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தி அதன்பின் வாங்கவும்.
3. இப்போது வரும் ஊஞ்சல்கள் பலவித புது அம்சங்களை கொண்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு நாம் வாங்கலாம்.
4. ஊஞ்சலில், அவர்கள் பிடித்திழுத்து வாயில் வைக்கும் வகையில் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்யவும்.
5. ஊஞ்சலில் பொம்மைகள் அல்லது விலங்கு சத்தம் போன்றவை இருந்தால், அவையும் அவர்களுக்கு கூடுதல் பொழுதுபோக்காக அமையும்.
6. ஊஞ்சலின் சக்கரங்கள் நம்மை மீறி நகராது என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்தவும்.
7. ஊஞ்சல் வாங்கும்போது, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் நாம் பின்பற்ற வேண்டும்.
நாம் எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்?
ஊஞ்சல்கள், பிள்ளைகள் தூங்குவதற்காக மட்டுமல்ல என்பதை மனதில் கொண்டு நாம் வாங்க வேண்டும். பிள்ளைகளை ஊஞ்சலில் தட்டையான பகுதியில் அண்ணாந்து படுக்க வைத்திருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஊஞ்சலில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
1. பிள்ளைகள் விழுந்துவிடாத வகையில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். விழாமல் இருக்க, நாம் தலையணை அல்லது மெத்தைகளை தரையில் பயன்படுத்தலாம்.
2. ஊஞ்சல் அதிகமாக மடங்கும் வகையில் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
3. ஊஞ்சலில் அவர்கள் இருக்கும்போது சேப்டி பெல்ட்டுகள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
4. ஊஞ்சலில் இருந்து எக்கி எடுக்கும் வகையில் பொம்மை போன்றவை இருக்கக்கூடாது.
5. அதேபோல, ஊஞ்சல் வழிகாட்டுதலின் படி நம்முடைய பிள்ளைகளின் எடை உள்ளதா என்பதையும் உறுதி செய்யவும்.
தோழிகளே, இப்போது வரும் மாடர்ன் ஊஞ்சல்கள் எப்படிப்பட்டவை என்பதை நாம் பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். மீண்டும் சந்திப்போம்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.